ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
Appearance
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
ஆண்களுக்கான குறி பார்த்துச் சுடல் | ||
2004 ஏதென்ஸ் | Double trap |
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் என்பவர் இந்திய துப்பாக்கி சுடு வீரரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை ஏதன்சில் நடந்த 2004 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வென்றார்.[1] இந்தியாவின் முதல் தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004 ஆண்டின் ஒரே பதக்கமும் இதுதான்.[2] இவர் இந்தியத் தரைப்படையில் பணியாற்றி 2013இல் ஓய்வு பெற்றார்.
இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து[3] 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். நரேந்திர மோதியின் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லிக்கு கீழுள்ள செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தார்.
இவர் மீண்டும் 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.