சுசீல் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசீல் குமார்
தனித் தகவல்கள்
முழுப் பெயர்சுசீல் குமார் சோலன்கி
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்மே 26, 1983 (1983-05-26) (அகவை 40)[1]
பிறந்த இடம்பாப்ரோலா, தில்லி
உயரம்166 cm (5 அடி 5 அங்)
 
பதக்கங்கள்
நாடு  இந்தியா
ஆண்கள் தன்னியல்பு முறை மற்போர் (பிரீ ஸ்டைல்)
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2012 இலண்டன் 66 கிலோ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2008 பெய்ஜிங் 66 kg
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 Moscow 66 kg
Commonwealth Championship
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 இலன்டன் 60 kg
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 கேப் டவுன் 66 kg
தங்கப் பதக்கம் – முதலிடம் 2007 இலன்டன் 66 kg
தங்கப் பதக்கம் – முதலிடம் 2009 ஜலான்டர் 66 kg
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி 66 kg
ஆசிய மற்போர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 புது தில்லி 66 kg
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2007 கிர்க்ஸ்தான் 66kg
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2003 புது தில்லி 60 kg
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2008 ஜெயு தீவு 66 kg

சுசீல் குமார் (सुशील कुमार, பிறந்த தேதி: மே 26, 1983[1]) ஓர் இந்திய மற்போர் விளையாட்டு வீரர். இவர் 2010 உலக மற்போர் போட்டிகளில் தங்கப் பதக்கமும் [2] லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கல பதக்கமும் வென்றவர். இவர் தன்னியல்பு-முறை மற்போர் (en: Free style Wrestling) விளையாட்டில் 66 கிகி பிரிவில் இச்சாதனைகளைப் புரிந்துள்ளார்.[3] ருசிய வீரர் ஆலன் கோகயேவை வீழ்த்தி உலக வாகையாளராகப் பட்டம் பெற்றார்;[2] கசக்ஸ்தான் நாட்டைச் சேர்ந்த லியோனிட் ஸ்பெய்ரிடொனோவ் (en: Leonid Spiridonov) வீழ்த்தி சுசீல்குமார் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.[3] இலண்டன் ஒலிம்பிக்கின் திறப்புவிழாவில் இந்தியக்கொடி ஏந்தி அணியை முன்நடத்திச் சென்றார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

சுசீல் குமார் தில்லியைச் சேர்ந்தவர். நஜாஃவ்கர் என்னும் இடத்தில் வசித்து வருகிறார். CNN IBN7 இன் தகவல் படி இந்த மற்போராளர் பாப்ரோலா ஊரைச் சேர்ந்தவர். சுசீலின் தந்தை திவான் சிங் சோலங்கி பேருந்து ஓட்டுநர்; தாய் கமலா தேவி. மிகவும் ஏழ்மையான சூழலில் அவரது பயிற்சியைச் செய்து வந்துள்ளார். அவரது குரு சத்பால், யசுபீர் சிங் ஆகியோர்.[4]

பெய்ஜிங் ஒலிம்பிக்[தொகு]

இவர் உக்ரைனைச் சேர்ந்த ஆந்திரிய் ஸ்டாடுனிக் (en:Andriy Stadnik) என்பவரிடம் முதல் சுற்றில் தோற்றுப்போனார்.[5] எனவே இவருடைய பதக்கம் பெறும் வாய்ப்பு மறுதேறுதல் சுற்று (en:repechage) போட்டியைப் பொறுத்ததாகிவிட்டது. சுசீல் குமார் மறுதேறுதல் முதல் சுற்றில் அமெரிக்காவின் டகு ஷ்வாபை வென்றார். இரண்டாவது சுற்றில் பெலாரஸின் (en:Belarus) ஆல்பர்ட் பாட்டிய்ரோவ் (en:Albert Batyrov) என்பாரை வென்றார். கடைசியாக மறுதேறுதல் முறையில் வெண்கலப் பதக்கம் பெறுவதற்கான போட்டியில் ஆகஸ்டு 20, 2008 அன்று ஸ்பிரிடொனோவ் (en:Spiridonov) என்பவரை 3:1 என்னும் கணக்கில் புள்ளிகள் 2-1, 0-1, 2-0 எடுத்து மூன்று சுற்றுகளில் வென்றார்.[6]

குறிப்பு: ஒலிம்பிக் மற்போரில் வெண்கலம் வெல்ல அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால் மட்டும் போதும். வெல்ல வேண்டிய தேவையில்லை.

2012 இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள்[தொகு]

சுசீல்குமார் 66 கிலோ தன்னியல்பு மற்போரில் இறுதியாட்டத்தில் சப்பானின் டட்சுஹிரோ யோனெமிட்சுவிடம் தோற்றார். முன்னதாக கசகசுதானின் அக்சுரெக் டனடரோவை அரையிறுதியில் வென்றார்.[7].[8][9]

ஆகத்து 12, பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்த துருக்கியின் ரமசான் சகனை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.[10] காலிறுதியில் உசுபெக்சுதானின் இக்தியோர் நவ்ருசோவை வென்றார்.[11]

அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் இவராவார்.

சூலை 27 அன்று இலண்டன் ஒலிம்பிக்கின் துவக்க விழா பேரணியில் இந்தியக் கொடியை ஏந்தி இந்திய அணியை முன்நடத்திச் செல்லும் பெருமை இவருக்கு கிடைத்தது.[12]

பெருமைகளும் சிறப்புகளும்[தொகு]

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றதுக்காகக் கிடைத்தவை
  • 55 லட்சம் பரிசு தொகை மற்றும் உதவி வணிக மேலாளர் ஆக இந்தியன் இரயில்வேயில் பதவியுர்வு என ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.[13]
  • 50 லட்சம் பரிசு தொகையை டில்லி மாநில அரசு அறிவித்தது.[13]
  • 50 லட்சம் பரிசு தொகையை ஹரியானா மாநில அரசு அறிவித்தது.[13]
  • 25 லட்சம் பரிசு தொகையை இந்திய ஸ்டீல் அமைச்சகம் அறிவித்தது.[13]
  • 5 லட்சம் பரிசு தொகையை ஆர். கே. குளோபல் ஷேர்ஸ் அண்டு செக்யூரிடிஸ் அளித்தது.(RK Global Shares and Securities Limited.)[13]

துணை விவரங்கள்[தொகு]

  • 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் இதுவே.
  • ஒலிம்பிக் வரலாற்றிலேயே மற்போர் விளையாட்டில் இந்தியா வெற்றி பெற்றது இது இரண்டாவது முறை.
  • முதன் முறையாக 1952 ஆம் ஆண்டு ஹெல்சின்ஸ்கி ஒலிம்பிக் போட்டிகளில் (en:1952 Summer Olympic Games) கஷாபா தாதாசாகேபு ஜாதவ் (கே. டி. ஜாதவ்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • சுசீல் குமார் அர்ஜுனா விருது பெற்ற சத்பால் (Sathpal) என்பவரிடம் பயிற்சி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Athlete Biography: Sushil Kumar". The Official Website of the Beijing 2008 Olympic Games. Archived from the original on 2008-08-23. பார்க்கப்பட்ட நாள் 2008-08-20.
  2. 2.0 2.1 இந்து நாளிதழ்
  3. 3.0 3.1 "Kumar claims 66kg bronze". The Official Website of the Beijing 2008 Olympic Games. 2008-08-20 இம் மூலத்தில் இருந்து 2008-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080901023144/http://en.beijing2008.cn/news/sports/headlines/wrestling/n214567030.shtml. பார்த்த நாள்: 2008-08-20. 
  4. இந்தியன் எக்சுபிரசு
  5. "Grappler Sushil Kumar wins bronze". The Times Of India. 2008-08-20. Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2008-08-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "Bout Result Men's FR 66 kg Bronze /Bout No.92 /Mat B". The Official Website of the Beijing 2008 Olympic Games. 2008-08-20. Archived from the original on 2008-08-29. பார்க்கப்பட்ட நாள் 2008-08-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. Sushil Kumar Enters Olympic Final
  8. Sushil Kumar Wins Silver medal in London 2012
  9. "Olympics: Sushil Kumar beats Akzhurek storms into finals". 12-08-2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  10. "London Olympics 2012 Wrestling Live: Sushil defeats Beijing gold medallist, moves to quarterfinal". இலண்டன்: Zee News. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்து 12, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "சுசீல் குமார் வெள்ளி வென்றார்" (in ஆங்கிலம்). firstpost.com. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  12. "இலண்டன் ஒலிம்பிக்கின் துவக்க விழா பேரணியில் இந்தியக் கொடியை ஏந்தி இந்திய அணியை முன்நடத்திச் சென்றார்" (in ஆங்கிலம்). dnaindia.com. 5 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் சூலை 24, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 "Rewards pour in for Sushil Kumar". Archived from the original on 2008-08-23. பார்க்கப்பட்ட நாள் 2008-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீல்_குமார்&oldid=3930040" இலிருந்து மீள்விக்கப்பட்டது