ஒர்ரிபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ourebia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஒர்ரிபி
Oribi
கிடாய்
பெட்டை
இவை இரண்டும் உகாண்டாவின் முர்ச்சிசன் அருவி தேசிய பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ourebia
இனம்:
இருசொற் பெயரீடு
Ourebia ourebi
Zimmermann, 1783
Subspecies

See text

காணப்படும் பகுதி
வேறு பெயர்கள்
பட்டியல்
  • Oribia Kirby, 1899[2]
  • O. aequatoria Heller, 1912
  • O. grayi (Fitzinger, 1869)
  • O. masakensis Lönnberg and Gyldenstolpe, 1925
  • O. melanura (Bechstein, 1799)
  • O. pitmani Ruxton, 1926
  • O. scoparia (Schreber, 1836)
  • O. splendida Schwarz, 1914

ஒர்ரிபி (Oribi) என்பது கிழக்கு, தெற்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு சிறிய மறிமான் ஆகும். இதன் பேரினத்தின் ஒரே உறுப்பினர் இதுவாகும். இது 1783 இல் ஜெர்மன் விலங்கியல் நிபுணர் எபர்ஹார்ட் ஆகஸ்ட் வில்ஹெல்ம் வான் சிம்மர்மேன் என்பவரால் விவரிக்கப்பட்டது. யூரேபியா பேரினத்தில் இது மட்டுமே உறுப்பினர் என்றாலும், எட்டு துணையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஓர்ரிபி நின்ற நிலையில் கிட்டத்தட்ட 50-67 சென்டிமீட்டர் (20-26 அங்குலம்) உயரம் வரை இருக்கும். மேலும் 12-22 கிலோகிராம் (26-49 எல்பி) எடை கொண்டதாக இருக்கும். இதன் பின் முதுகு சற்று தூக்கியபடியும், நீண்ட கழுத்து, நீண்ட கால்களைக் கொண்டிருக்கும். இதன் உடல் பளபளப்பான, மஞ்சள் நிறத்தில் இருந்து அழுக்கு காவி நிறத்தில் இருக்கும். இதன் கன்னம், தொண்டை, அடிப்பகுதி, பிட்டம் போன்றவை வெள்ளை நிறத்தில் மாறுபட்டு இருக்கும். ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் இருக்கும். கொம்புகள் மெல்லியதாகவும் நேராகவும் சுமார் 8-18 சென்டிமீட்டர் (3.1-7.1 அங்குலம்) நீளமானதாகவும் இருக்கும். நுனிகளில் மென்மையாகவும் அடிவாரத்தில் வளையமாகவும் இருக்கும்.

இந்த மானினம் ஒரு பகலாடி ஆகும். இது முதன்மையாக பகலில் நடமாடும். இதன் மந்தைகளில் சிறியவை சுமார் நான்கு மான்கள் வரை இருக்கும். ஆண் மான் சுமார் 25–100 ஹெக்டேர் (62–247 ஏக்கர்) பரப்பளவை தன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியா கொண்டுள்ளது. இது முதன்மையாக ஒரு மேய்ச்சல் இனமாகும். இது பத்தம்புதிய புற்களை விரும்பி உண்கிறதுகிறது. இதன் இனச்சேர்க்கை காலம் புவியியல் ரீதியாக மாறுபடும். மற்ற அனைத்து சிறிய மறிமான்களைப் போலல்லாமல், ஓர்ரிபி மூன்று வகையான இனச்சேர்க்கை வடிவங்களாக அவற்றின் வாழ்விடத்தைப் பொறுத்து - பலகணவர் முறை, பலமணவி முறை, இரு பாலினமும் பலருடன் கலவியில் ஈடுபடுவது என்று கொண்டுள்ளது. இதன் கர்ப்ப காலம் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை நீடிக்கும், அதைத் தொடர்ந்து ஒரு குட்டி பிறக்கிறது; தென்னாப்பிரிக்காவில் நவம்பர் முதல் திசம்பர் வரை பிறப்புகள் உச்சத்தில் இருக்கும். குட்டிகள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் பால் குடிக்கின்றன.

ஓர்ரிபி பல்வேறு வாழ்விடங்களான சவன்னாக்கள், வெள்ளச் சமவெளிகள் மற்றும் 10-100 சென்டிமீட்டர் (3.9-39.4 அங்குலம்) உயரமுள்ள வெப்பமண்டல புல்வெளிகள் முதல் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர்கள் (6,600 அடி) வரை உயரத்தில் உள்ள மலைப் புல்வெளிகள் வரை தன் வாழ்விடமாக கொண்டுள்ளது. இது மேற்கில் செனிகல் முதல் கிழக்கில் எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா வரையும், தெற்கே அங்கோலா மற்றும் கிழக்கு கேப் ( தென்னாப்பிரிக்கா ) வரையும் பரவலாக பரவியுள்ளது. ஓர்ரிபி பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் நிலங்களின் விரிவாக்கம் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளின் போட்டி காரணமாக இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வகைபிரித்தல்[தொகு]

விளக்கம் c. 1894

ஓரிபியின் அறிவியல் பெயர் Ourebia Ourebi ஆகும். இதன் பேரினத்தின் ஒரே உறுப்பினரான ஓரிபி, மாட்டுக் குடும்பத்தின் கீழ் வகைபடுத்தபட்டுள்ளது. ஜெர்மானிய விலங்கியல் நிபுணர் ஆகஸ்ட் வில்ஹெல்ம் வான் சிம்மர்மேன் 1782 இல் இந்த இனத்தை முதலில் விவரித்தார் . இது முன்னர் நியோட்ராகினி இனக்குழுவில் சேர்க்கப்பட்டிருந்தது. இதில் பியிரா மறிமான், மடோகுவா (டிக் டிக்), நியோட்ராகஸ், பாறைத் தாவி மறிமான் மற்றும் ராஃபிசெரஸ் உள்ளிட்ட பல்வேறு குள்ள மறிமான்கள் இருந்தன. 1963 ஆம் ஆண்டில், ஜெர்மன் பாலூட்டி நிபுணர் தியோடர் ஹால்டெனோர்த், ஓரிபி மற்றும் ராஃபிசெரசை ராபிசெரினி என்ற புதிய இனக்குழுவாகப் பிரித்தார்; பின்னர், விலங்கியல் நிபுணர் ஜொனாதன் கிங்டன் ஓரிபியை அதன் இனக்குழுவான ஒரேபினியில் சேர்த்தார். "oribi" என்ற பொதுப் பெயர், orbietjie என்ற விலங்குக்கான ஆபிரிக்கான பெயரிலிருந்து வந்தது.[3][4]

கீழே உள்ள கிளை வரைபடம் 2013 ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.

Oribi (Ourebia ourebi)

Saiga (Saiga tatarica)

Gerenuk (Litocranius walleri)

Springbok (Antidorcas marsupialis)

Eudorcas

Nanger

வனப்புமிக்க சிறுமான்

புல்வாய் (Antilope cervicapra)

Procapra

Raphicerus

Madoqua

பியிரா மறிமான்

இந்த மறிமானில் எட்டு துணை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:[5]  

விளக்கம்[தொகு]

ஓர்ரிபி ஒரு சிறிய, ஒல்லியான மறிமான்; இது நிற்கும்போது தோள் வரை கிட்டத்தட்ட 50-67 சென்டிமீட்டர் (20-26 அங்குலம்) உயரம் வரை இருக்கும். இது 12-22 கிலோகிராம் (26-49 எல்பி) எடையுள்ளதாக இருக்கும். தலை மற்றும் உடல் நீளம் பொதுவாக 92 மற்றும் 110 சென்டிமீட்டர்கள் (36 மற்றும் 43 அங்) இருக்கும்.[6] இது பால் ஈருருமை கொண்டது, ஆண் மான் பெண் மான்களை விட சற்றே சிறியதாக இருக்கும் ( O. o. Ourebi, இதில் பெண் மான்கள் சிறியவை).[7] இந்த மறிமான் சற்று உயர்ந்திருக்கும் முதுகையும், நீண்ட கழுத்தையும், நீண்ட கால்களையும் கொண்டுள்ளது. இதன் உடல் பளபளப்பான, மஞ்சள் நிறத்தில் இருந்து அழுக்கு காவி நிறத்தில் இருக்கும். இதன் கன்னம், தொண்டை, அடிப்பகுதி, பிட்டம் போன்றவை வெள்ளை நிறத்தில் மாறுபட்டு இருக்கும். உரோமம் நிறைந்த இதன் வால், வெளியில் பழுப்பு முதல் கருப்பு வரையும், அடிப்புறம் வெள்ளையாகவும் இருக்கும் [4][8] ( ஓ. ஓ. ஹஸ்டாட்டாவைத் (O. o. ourebi) தவிர, அது முற்றிலும் கருப்பு வால் கொண்டது). துணையினங்கள் நிறத்தில் சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளன; ஓ.ஓ. ஓரேபி அடர் காவி நிறம் கொண்டது, அதே சமயம் ஓ.ஓ. ஹஸ்டாட்டா (O. o. hastata) மஞ்சள் நிறம் கொண்டது.[7]

ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன; இதன் கொம்புகள் மெல்லியதாகவும் நேராகவும் சுமார் 8-18 சென்டிமீட்டர் (3.1-7.1 அங்குலம்) நீளமானதாகவும் இருக்கும். நுனிகளில் மென்மையாகவும் அடியில் வளையமாகவும் இருக்கும்.[4] அதிகபட்ச கொம்பு நீளமானது, 19.1 சென்டிமீட்டர்கள் (7.5 அங்குலம்), என 1998 இல் மலாவியில் இருந்து பதிவு செய்யப்பட்டது. ஓர்ரிபி மானின் உடலில் குறைந்தது ஆறு வெவ்வேறு, வாசனை சுரப்பிகள் உள்ளன (கண்களுக்கு அருகில் உள்ள முக்கிய ப்ரீஆர்பிட்டல் சுரப்பிகள் போன்றவை). இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சுரப்பிகளுக்கு இடமளிக்கும் வகையில், கண்களுக்குக் கீழே உள்ள பெரிய ஃபோசை போன்ற பல மாற்றங்களை உடல் கொண்டுள்ளது. பெண் மான்களின் மடியில் நான்கு முலைகள் உள்ளன.

சூழலியல் மற்றும் நடத்தை[தொகு]

ஒரு ஆண் (இடது) மற்றும் பெண்களின் சிறிய குழு

ஓர்ரிபி ஒரு பகலாடி (முக்கியமாக பகலில் நடமாடுவது), இருப்பினும் சில செயல்பாடுகள் இரவிலும் மேற்கொள்ளக்கூடும். மற்ற அனைத்து சிறிய மறிமான்களைப் போலல்லாமல், ஓர்ரிபி தன் வாழ்விடத்தைப் பொறுத்து மூன்று வகையான இனச்சேர்க்கைப் பண்புகளைக் கொண்டுள்ளது. அவை பலகணவர் முறை, பலமனைவி முறை, பலருடன் புணரும் முறை என்பவை ஆகும். பெண்-ஆண் விகிதம் அதிகரிக்கும் போது பலதார உறவு மேலோங்குகிறது.[9] வேட்டையாடும் ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளில் பலதார உறவு இயற்கைத் தேரைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு வெளிப்படுத்துகிறது.[10] இவை சுமார் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட சிறிய மந்தைகளாக இருக்கின்றன.

25–100 ஹெக்டேர் (62–247 ஏக்கர்) பரப்பளவு கொண்ட பகுதியை தன் குழுவின் ஆதிக்க எல்லையாக ஆண் மான்கள் பாதுகாக்கின்றன; பெண் மான்களும் சில ஆக்கிரமிப்பாளர்களை சுட்டிக் காட்டலாம் மேலும் ஊடுருவும் விலங்கை விரட்டலாம். ஆண் மானின் பிரதேசத்திற்கு வருகை தரும் பெண் மான்களின் எண்ணிக்கை ஆணின் கொம்புகளின் தோற்றத்தை (குறிப்பாக சமச்சீர்) சார்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு சுட்டுகிறது.[11] ஆண் மான்கள் தங்கள் ஆதிக்கப் பகுதிகளில் உள்ள தாவரங்கள் மற்றும் மண்ணை வாசனை சுரப்பிகளில் சுரக்கும் சுரப்பு மற்றும் சாணம் கழிப்பதன் மூலம் வரையறுக்கின்றன. பொதுவாக இவற்றை வேட்டையாடுபவைகளில் குள்ள நரி போன்ற ஊனுண்ணிகள் அடங்கும்.

உணவுமுறை[தொகு]

முதன்மையாக இது ஒரு மேய்ச்சல் விலங்காகும். இது புத்தம்புதிய புற்களையே விரும்பி உண்கிறது. இதன் உணவில் 90% வரை புற்கள் இருக்கும். ஓர்ரிபி பூக்கள் மற்றும் பொலட்டஸ் காளான்களை உண்பதைக் காண முடிந்தது.[12][6]

இனப்பெருக்கம்[தொகு]

10 முதல் 14 மாதங்களில் இருபாலினத்தவையும் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. இதன் இனச்சேர்க்கை காலம் புவியியல் ரீதியாக மாறுபடும். பொதுவாக மழைக்காலத்தில் (ஆகத்து முதல் செப்டம்பர் வரை) இனச்சேர்க்கை உச்சத்தை அடையக்கூடும்.[13] ஒரு பெண் மான் சினைப்பருவ சுழற்சியில் இருக்கும் போது (இது நான்கு முதல் ஆறு நாட்கள் வரை நீடிக்கும்), அது ஆண்களின் சகவாசத்தை நாடுகிறது. உறவுக்கு முன், ஆண் மான் பெண் மானைப் பின்தொடர்ந்து, இது சினைப்பருவ சுழற்சியில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க அதன் சிறுநீரைச் சோதித்து, அதன் பிட்டம் மற்றும் பக்கவாட்டுகளை நக்கும்.[12] கர்ப்ப காலம் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை நீடிக்கும், அதைத் தொடர்ந்து ஒரு குட்டி பிறக்கிறது; தென்னாப்பிரிக்காவில் நவம்பர் முதல் திசம்பர் வரை பிறப்பு உச்ச நிலையில் இருக்கும். புதிதாகப் பிறந்த குட்டி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மறைவிடத்தில் வைக்கப்படுகிறது; தாய் தனது குட்டிக்கு கிட்டத்தட்ட அரை மணி நேரம் பாலூட்டுவதற்காக வழக்கமாகச் செல்லும். ஆண் மான்கள் தங்கள் சந்ததிகளை வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாக்கும். மேலும் மற்ற ஆண் மான்களை விலக்கி வைக்கும். குட்டி நான்கு முதல் ஐந்து மாதங்கள் பால் குடிக்கிறது.[8] ஓர்ரிபி 8 முதல் 12 ஆண்டுகள் வரை காடுகளிலும், 12 முதல் 14 ஆண்டுகள் வரை வளர்ப்பிடங்களிலும் வாழ்கிறது.[13]

அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு[தொகு]

ஓர்ரிபி பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த எண்ணிக்கை (2008 இன் படி) 750,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், துணையினமான O. o. haggardi அழிவாய்ப்பு இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில், 2008 இல், இதன் மொத்த எண்ணிக்கையில் 10,000 க்கும் குறைவான முதிர்ந்த மான்கள் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அது குறையும் என அஞ்சப்படுகிறது. வேட்டையாடுதல் என்பது ஒப்பீட்டளவில் சிறிய அச்சுறுத்தலாகும். ஆயினும்கூட, கோமோ தேசிய பூங்காவில் ( கோட் டிவாரி ) ஓர்ரிபி எண்ணிக்கையில் 92% செங்குத்தான வீழ்ச்சிக்குக் வேட்டையாடல் ஒரு முதன்மைக் காரணமாகும். வேளாண் நிலங்களின் விரிவாக்கம் மற்றும் மேய்ச்சல் பகுதியில் கால்நடைகளின் போட்டி காரணமாகவும் இதன் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள கஷாகா கும்டி தேசிய பூங்கா, பென்ட்ஜாரி மற்றும் டபிள்யூ தேசிய பூங்காக்கள் ( பெனின் ) , அவோக் வேட்டை மண்டலம் ( சாட் ); பெனோவ், பௌபா நிஜிடா மற்றும் ஃபரோ தேசிய பூங்காக்கள் ( கமரூன் ); மனோவோ-கௌண்டா செயின்ட் புளோரிஸ் தேசிய பூங்கா ( மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ); கரம்பா, உபேம்பா மற்றும் குண்டெலுங்கு தேசிய பூங்காக்கள் ( காங்கோ-கின்ஷாசா ); ஓமோ தேசிய பூங்கா ( எத்தியோப்பியா ); மசாய் மாரா மற்றும் ரூமா தேசிய பூங்கா ( கென்யா ); கோல்டன் கேட் ஹைலேண்ட்ஸ் தேசிய பூங்கா ( தென்னாப்பிரிக்கா ); செரெங்கெட்டி தேசியப் பூங்கா ( தன்சானியா ); கிடெபோ பள்ளத்தாக்கு, ம்பூரோ ஏரி மற்றும் முர்ச்சிசன் அருவி தேசிய பூங்காக்கள் ( உகாண்டா ); காஃப்யூ மற்றும் லியுவா சமவெளி தேசிய பூங்காக்கள் மற்றும் பாங்வேலு சதுப்பு நிலம் ( சாம்பியா ) போன்ற பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஓர்ரிபி காணப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. IUCN SSC Antelope Specialist Group (2016). "Ourebia ourebi". IUCN Red List of Threatened Species 2016: e.T15730A50192202. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T15730A50192202.en. https://www.iucnredlist.org/species/15730/50192202. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Oribia Kirby, 1899". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. [Merriam-Webster Dictionary] Oribi
  4. 4.0 4.1 4.2 "Oribi Ourebia ourebi" (PDF). Endangered Wildlife Trust. Archived from the original (PDF) on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  5. Skinner, J.D.; Chimimba, C.T.. [[[:வார்ப்புரு:Google Books]] The Mammals of the Southern African Sub-region]. பக். 696–8. வார்ப்புரு:Google Books. 
  6. 6.0 6.1 Kingdon, J. (2015). [[[:வார்ப்புரு:Google Books]] The Kingdon Field Guide to African Mammals] (2nd ). London, UK: Bloomsbury Publishing Plc. பக். 573–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4729-2135-2. வார்ப்புரு:Google Books. 
  7. 7.0 7.1 Groves, C. (2011). Ungulate Taxonomy. Baltimore, USA: Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4214-0093-8. 
  8. 8.0 8.1 Mills, G. (1997). [[[:வார்ப்புரு:Google Books]] The Complete Book of Southern African Mammals] (1st ). Cape Town, South Africa: Struik Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-947430-55-9. வார்ப்புரு:Google Books. 
  9. Arcese, P.; Jongejan, G.; Sinclair, A.R.E. (1995). "Behavioural flexibility in a small African antelope: group size and composition in the oribi (Ourebia ourebi, Bovidae)". Ethology 99 (1–2): 1–23. doi:10.1111/j.1439-0310.1995.tb01085.x. 
  10. Adamczak, V.G.; Dunbar, R.I.M. (2008). "Variation in the mating system of oribi and its ecological determinants". African Journal of Ecology 46 (2): 197–206. doi:10.1111/j.1365-2028.2007.00833.x. 
  11. Arcese, P. (1994). "Harem size and horn symmetry in oribi". Animal Behaviour 48 (6): 1485–8. doi:10.1006/anbe.1994.1391. 
  12. 12.0 12.1 Jonathan Kingdon; Happold, D.; Butynski, T.; Hoffmann, M.; Happold, M.; Kalina, J. (2013). [[[:வார்ப்புரு:Google Books]] Mammals of Africa]. 6. London, UK: Bloomsbury Publishing Plc. பக். 404–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2257-0. வார்ப்புரு:Google Books. ஜொனாதன் கிங்டன்; Happold, D.; Butynski, T.; Hoffmann, M.; Happold, M.; Kalina, J. (2013).
  13. 13.0 13.1 Long, J.L. (2003). [[[:வார்ப்புரு:Google Books]] Introduced Mammals of the World: Their History, Distribution and Influence]. Clayton, Australia: Csiro Publishing. பக். 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-643-09916-6. வார்ப்புரு:Google Books. Long, J.L. (2003).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒர்ரிபி&oldid=3928399" இலிருந்து மீள்விக்கப்பட்டது