பியிரா மறிமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Dorcatragus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பியிரா
Beira
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Dorcatragus
இனம்: வார்ப்புரு:Taxonomy/DorcatragusD. megalotis
இருசொற் பெயரீடு
Dorcatragus megalotis
(Menges, 1894)[2]
பியிரா வாழும் பகுதி

பியிரா ( Dorcatragus megalotis ) என்பது ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியின் வறண்ட பகுதிகளில் வசிக்கும் ஒரு சிறிய மறிமான் ஆகும். இது Dorcatragus பேரினத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் ஆகும்.

விளக்கம்[தொகு]

பியிரா முடிகள் நிறைந்த வால் மற்றும் கரடுமுரடான உரோமம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் பின்புறம் செஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் அடிப்பகு வெள்ளையாக இருக்கும். அதை ஒட்டி ஒரு அடர்நிறப் பட்டை உள்ளது. இதன் முன்னங் கல்களை விட பின்னங்கால்கள் சற்று நீண்டுள்ளன. இதனால் இதன் பின்புறம் சற்று தூக்கியதுபோல காணப்படும். இந்த நீண்ட, மெல்லிய கால்கள் இளமஞ்சள் நிறத்தில் உள்ளன. இதன் நீண்ட தலையானது மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திலும், கருப்பு இமைகளும், வெள்ளை கண் வளையங்கள் கொண்டதாகவும் இருக்கும். இந்த மான் விகிதாசாரத்தில் பெரிய காதுகளைக் கொண்டுள்ளது, அவை 15 செ.மீ நீளமும் 7.5 செ.மீ அகலமும் கொண்டதாக வெள்ளை உரோமங்களைக் கொண்டவையாக உள்ளன. ஆண் மான்களுக்கு மட்டுமே 7.5-10 செமீ நீளமுள்ள, கொம்புகள் உள்ளன. அவை காதுகளின் பக்கங்களுக்கு அருகில் இருந்து செங்குத்தாக நேரான கூர்முனையுடன் வளர்ந்திருக்கும். இந்த மானின் நீளம் 80-86 செ.மீ. ஆகும். நிற்கும்போது தோள் வரை 50-60 செ.மீ. உயரமாகவும், 9-11.5 கிலோ எடை கொண்டதாக இருக்கும். [3] இதன் குளம்புகளின் அடிப்பகுதி விரிந்து சுருங்கும் தன்மை கொண்டதாகும். எனவே வழுக்கும் பாறைகளிலும் இவை விழுந்துவிடாமல் இருப்பதற்கு ஏற்ற உறுதியான பிடிப்பைத் தருகிறது.

பரவல்[தொகு]

பியிரா வடகிழக்கு ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இது சீபூத்தீயின் தெற்கே தெற்கு நோக்கி சோமாலிலாந்து மற்றும் வடக்கு சோமாலியா மற்றும் தீவிர வடகிழக்கு எத்தியோப்பியாவில் காணப்படுகிறது. இதன் வாழிட எல்லையின் முக்கியப் பகுதியானது சோமாலிலாந்தின், ஜிபூட்டியின் எல்லையிலிருந்து, கிழக்கே வடக்கு சோமாலியாவில் உள்ள பன்ட்லாண்ட் மற்றும் நோகால் பள்ளத்தாக்கு வரை. [1] சீபூத்தியில் இது உள்ளது 1993 இல் உறுதிப்படுத்தப்பட்டது.

வாழ்விடம்[தொகு]

பியிரா பாறைகள் நிறைந்த மலைச்சரிவுகள், வறண்ட, புல்வெளிகளுக்கு மத்தியில் அகாசியா புதர்க்காடுகள் மற்றும் பல தட்டையான சிகரங்கள் மற்றும் செங்குத்தான பாறைச் சரிவுகளைக் கொண்ட மலைகளில் வாழ்கின்றன. [1]

பழக்கவழக்கங்கள்[தொகு]

பியிரா மழைக்காலத்தின் உச்சத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே குட்டி ஈன்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆறு மாத கர்ப்ப காலத்துக்குப் பிறகு ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது. இவை அதிகாலையிலும், பிற்பகலிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் இவை நண்பகலில் ஓய்வெடுக்கிறன. இவை மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டவை. மேலும் இவை சிறந்த செவித்திறன் கொண்டவையாதலால் சிறிய ஒலி கேட்டாலும் எச்சரிக்கை அடையும். இவை செங்குத்தான, பாறைகளில் விரைந்து செல்லக்கூடியன. பியிரா வறண்ட காலநிலைக்கு ஏற்ற விலங்காகும். இவை குடிக்க தண்ணீரைத் தேட வேண்டிய அவசியமில்லாமல், தான் உண்ணும் தாவரங்களிலிருந்தே தங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெறுகின்றன. பியிரா சோடிகளாகவம், சிறிய குடும்பக் குழுக்களாகவும் வாழ்கிறன. இதில் பெரிய குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் குடும்பக் குழுக்கள் சந்திக்கும் போது இவை நிகழ்திருக்கலாம். கழுதைப்புலிகள், கறகால் பூனைகள், குள்ள நரிகள் ஆகியவை பியிராவை முதன்மை வேட்டையாடிகளாகும். மேலும் இவை காணப்படும் இடத்தில் சிங்கங்கள், சிறுத்தைகள் போன்றவையும் இவற்றை வேட்டையாடக்கூடும். [3]

பாதுகாப்பு[தொகு]

பியிரா மான்கள் குறைந்த அளவிலேயே வேட்டையாடப்படுகின்றன. காரணம் அதன் சிறிய அளவு, தீவிர எச்சரிக்கை உணர்வு மற்றும் அவற்றை எளிதில் அணுக முடியாத பாறை வாழ்விடங்கள் காரணமாக இருக்கலாம். மிகை மேய்ச்சல், வறட்சி, அடுப்புக்கரி உற்பத்திக்காக அகாசியா ஸ்க்ரப் மரங்களை வெட்டுவது போன்றவை இந்த மானினத்திற்கு ஏற்பட்டுள பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் செம் பட்டியலில் "அழிவாய்ப்பு இனம்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. [1] சீபூத்தீக் குடியரசில் இது அரிதானதான விலங்காக கருதப்படுகிறது ஆனால் ஆபத்தான நிலையில் இல்லை. [4] [1] எத்தியோப்பியாவில் இதன் நிலை தற்போது தெரியவில்லை, கடைசியாக இது 1972 இல் பதிவு செய்யப்பட்டது.

அல் வப்ரா வனவிலங்கு பாதுகாப்பிடத்தில் உயிருடன் பிடிக்கபட்ட பியிரா மறிமான் குழுவைக் கொண்டு வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டு 2005 இல் 58 என்ற உச்சத்தை எட்டியது. [5]

பெயர்[தொகு]

இதற்கு இடப்பட்டட 'பியிரா' என்ற பெயர் அதன் சோமாலி பெயரிலிருந்து பெறப்பட்டது. [6]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 IUCN SSC Antelope Specialist Group (2016). "Dorcatragus megalotis". IUCN Red List of Threatened Species 2016: e.T6793A50185898. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T6793A50185898.en. https://www.iucnredlist.org/species/6793/50185898. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Dorcatragus megalotis (Menges, 1894)". Integrated Taxonomic Information System (ITIS) (https://www.itis.gov). பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
  3. 3.0 3.1 "Dorcatragus megalotis". www.ultimateungulate.com. Brent Huffman. Archived from the original on 2006-09-10. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
  4. "Beira antelope – Dorcatragus megalotis". Djibouti Nature. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
  5. "Beira Antelope". Al Wabra Wildlife Preservation. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
  6. "beira". Oxford English Dictionary. Archived from the original on November 13, 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியிரா_மறிமான்&oldid=3630326" இலிருந்து மீள்விக்கப்பட்டது