உள்ளடக்கத்துக்குச் செல்

கொம்பு (உடற்கூறியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண் இம்பாலா ஒரு சோடி கொம்புகளுடன்
ஒரு விலங்கின் கொம்பின் உடற்கூறியல் மற்றும் உடலியல்

கொம்பு (Horn (anatomy)) என்பது பல்வேறு விலங்குகளின் தலையில் நிரந்தரமாக உள்ள கூரான ஒரு உறுப்பு ஆகும். இதன் மையத்தில் உயிருள்ள எலும்பும் அதைச் சுற்றி நகமியம் மற்றும் பிற புரதங்களாலான உறைகளைக் கொண்டுள்ளது. சாதாரணமாக கொம்புகள் என்பவை மான் கொம்புகளிலிருந்து வேறுபட்டவை. மான் கொம்புகள் நிரந்தரமாக இருப்பவை அல்ல அவை அவ்வப்போது விழுந்து முளைப்பவை. ஆனால் பிற பாலூட்டிகளுக்கு உள்ள கொம்புகள் நிரந்தரமானவை. இந்தக் கொம்புகளானது முக்கியமாக அசைபோடும் விலங்குகள், இரட்டைப்படைக் குளம்பிகளில் குறிப்பாக  மறிமான் மற்றும் போவிடே ( மாடு, ஆடு, மாட்டுக் குடும்பம் போன்றவை) குடும்பங்களுக்கு காணப்படுகின்றன. மாடுகளின் கொம்புகள் தோலடி இணைப்பு திசுக்களில் இருந்து (உச்சந்தலையில்) எழுகின்றன. பின்னர் அவை எலும்புடன் இணைகின்றன. [1]

கொம்புகள் பொதுவாக வளைந்த அல்லது முறுக்கிய வடிவத்தைக் கொண்டிருக்கும். பல விலங்கு இனங்களில், ஆண் விலங்குகளுக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன. கொம்புகள் பிறந்த உடனேயே வளர ஆரம்பிக்கின்றன. மேலும் விலங்குகளின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வளர்வனவாக உள்ளன (பிராங்ஹார்ன் மான்களைத் தவிர மற்றவை ஆண்டுதோறும் வெளிப்புற அடுக்கை உதிர்க்கும், ஆனால் மையத்திலுள்ள எலும்பைத் தக்கவைத்திருக்கும் ).

கொம்பு போன்ற பிற உறுப்புகள்

[தொகு]

"கொம்பு" என்ற சொல்லானது, பல்வேறு விலங்கு குடும்பங்களில் உள்ள விலங்குகளின் தலையுடன் இணைந்துள்ள மற்ற கடினமான மற்றும் கூர்மையான உறுப்புகளையும் குறிப்பிட பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது:

  • ஒட்டகச்சிவிங்கிகளின் தலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சோடி எலும்பு புடைப்புகள் உள்ளன. அவை ஆசிகோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உரோம தோலால் மூடப்பட்டிருக்கும்.
  • மான் : பெரும்பாலான மான்களுக்கு கொம்புகள் உள்ளன. அவை உண்மையில் கொம்புகள் அல்ல. அவை எலும்பினால் ஆனவை. முழு வளர்ச்சி அடைந்தவுடன், கொம்புகள் மேல் உள்ள தோல் உறிந்துவிடும். கொம்புகள் வளர்ந்த மான்களுக்கு மட்டுமே இருக்கும் (பொதுவாக கலைமான்கள் தவிர ஆண் மான்களுக்கு மட்டுமே ). மான் கொம்புகள் ஆண்டு தோறும் உதிர்ந்து மீண்டும் வளரும்.
  • காண்டாமிருகம் : காண்டாமிருகங்களின் "கொம்புகள்" நகமியத்தின் (விரல் நகங்கள் மற்றும் முடி போன்றவற்றில் உள்ள அதே பொருளால் ஆனவை) என்னும் பொருட்களால் ஆனவை. இவை தொடர்ந்து வளரும், ஆனால் இதன் மையத்தில் எலும்பு இல்லை.
  • சாமலியோனிடே : பல பச்சோந்திகள், குறிப்பாக ஜாக்சனின் பச்சோந்தியின் மண்டை ஓடுகளில் கொம்புகள் மற்றும் நகமிய உறையைக் கொண்டுள்ளன.
  • செராடொப்சிடீ : ட்ரைசெராடாப்சின் "கொம்புகள்" அதன் மண்டை ஓட்டில் எலும்புகளின் நீட்டிப்புகளாக இருக்கின்றன. இருப்பினும் அவை நகமிய உறை கொண்டுள்ளதா என்பது பற்றிய விவாதம் உள்ளது.
  • அபெலிசவுரிடே : கார்னோடாரஸ் மற்றும் மசூங்காசரஸ் போன்ற பல்வேறு அபிலிசவுரிட் தெரோபாட்களுக்கு நுதலெலும்பின் நீட்டிப்புகளைக் கொண்டிருந்தன. அவை சில வகையான நகமியங்களால் மூடப்பட்டிருக்கும்.
  • கொம்பு பல்லிகள் ( பிரைனோசோமா ): இந்த பல்லிகள் தலையில் கொம்புகள் உள்ளன, அவை பாலூட்டிகளின் கொம்புகளைப் போல எலும்பின் மீது கடினமான நகமிய உறையைக் கொண்டுள்ளன.
  • பூச்சிகள் : சில பூச்சிகள் ( காண்டாமிருக வண்டுகள் போன்றவை) தலை அல்லது மார்பில் (அல்லது இரண்டிலும்) கொம்பு போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன. இவை கடினமான சிட்டினஸ் புறவன்கூட்டினின் நீட்டிப்புகளாக உள்ளன. சில ( ஸ்டாக் வண்டுகள் போன்றவை) சிட்டினால் ஆன தாடைகளை பெரிதாக்குகின்றன.
  • நாய்க் குடும்பம் : தென்கிழக்கு ஆசியாவில் மந்திர சக்திகளுடன் தொடர்புடையதாக மண்டை ஓட்டில் எப்போதாவது கொம்பு வளர்ச்சியானது பொன்னிறக் குள்ளநரிகள் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. [2] [3]
  • அசெண்டோசௌரிடே : டிரையாசிக் அசெண்டோசவுரிட் ஆர்கோசோரோமார்ஃப் சிரிங்காசரசின் மண்டை ஓட்டில் இரண்டு பெரிய, முன்னோக்கி நீண்ட கூம்பு வடிவ கொம்புகளைக் கொண்டிருந்தது.
  • அன்ஹிமிடே : கொம்புடைய கத்து பறவையானது முழுக்க முழுக்க கெரடினாலான குச்சிபோன்ற ஒரு கொம்பைக் கொண்டுள்ளது. இது அதன் மண்டையோட்டுடன் தளர்வாக இணைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விலங்கு குடும்பங்களில் உள்ள பல பாலூட்டி இனங்கள் தந்தப் பற்களைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் கொம்புகளைப் போலவே செயல்படுகின்றன. ஆனால் உண்மையில் அவை பெரிதாக வளர்ந்த பற்களாகும். இவற்றில் நானமா (கஸ்தூரி மான், ஆர் ரூமினண்ட்ஸ்), சூடே ( காட்டுப்பன்றிகள் ), பிரோபோசிடியா ( யானைகள் ), மோனோடோன்டிடே (நார்வால்கள்), தந்தமூக்குத் திமிங்கிலம் ( பனிக்கடல் யானை ) ஆகியவை அடங்கும் .

மனிதர்கள் மீது

[தொகு]

மனிதர் மீது வளரும் கொம்புகளுக்கு தோல் கொம்புகள் மட்டுமே எடுத்துக்காட்டுகளாக உள்ளன. [4]

மனிதர்களுக்கு கொம்புகள் வளர்ந்ததற்கான தகவல்கள் வரலாற்று ரீதியாகவும் சில சமயங்களில் தொன்ம நிலையில் விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த நிகழ்வின் ஒளிப்படச் சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. [5] வெளிப்பகுதியில் வளர்ந்திருக்கும் தன்மையைக் காட்டும் மனிதப் பிண மாதிரிகள் உள்ளன, ஆனால் இவை எலும்புக் கட்டிகள் அல்லது பிற குருப்புகள் என வகைப்படுத்தப்படுகின்றன. [5]

மேம்பட்ட மருத்துவம் இல்லாத நாடுகளில் கொம்புகள் கொண்ட மனிதர்கள் காணப்பட்டனர். இவ்வாறு சீனாவில் வாழும் மக்கள் பலர் உள்ளனர். இவை தோல் கொம்புகளாகும். இவை பொதுவாக வயதானவர்களிடம் காணப்படுகின்றன.

சிலர், குறிப்பாக தி எனிக்மா போன்றவ்வர்கள் செயற்கையாக கொம்புகளை தலையின் உள்ளே பதித்துள்ளனர். அதாவது, அவர்கள் உடல் தோற்ற மாற்றத்தின் ஒரு வடிவமாக தோலின் அடியில் சிலிகானை பொருத்தியுள்ளனர்.

விலங்குகளுக்கு கொம்புகளின் பயன்

[தொகு]
ஆட்டு மண்டை ஓடு
ஆப்பிரிக்க எருமை (இரு பாலினத்துக்கும் கொம்புகள் உள்ளன)

விலங்குகளுக்கு கொம்புகள் பல்வேறு வகைகளில் பயன்பாடுகின்றன. இவை வேட்டையாடிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, தன் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்த, இனச்சேர்க்கைக்கான போட்டியில் தன் சொந்த இனத்தைச் சேர்ந்த விலங்குகளுடன் ( கொம்புச் சண்டை ) போராடுவது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுகிறது. [6] [7] கொம்புகள் பொதுவாக ஆண் விலங்குகளுக்கு மட்டுமே இருக்கும் ஆனால் சில இனங்களில் பெண் விலங்குகளுக்கும் கொம்புகள் இருக்கின்றன. திறந்தவெளியில் வாழும் உயரமான விலங்கினங்கள் நீண்ட தொலைவில் இருந்து பார்க்கக்கூடியதாகவும், வேட்டையாடிகளுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள கொம்புகளை மிகுதியாக பயன் படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது. [8]

மேலும், கொம்புகளானது மண்ணைக் கிளறவோ அல்லது மரங்களிலிருந்து பட்டைகளை உரிக்கவோ பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகள் தங்கள் துணையைக் கவரக் கொம்புகளைப் பயன்படுத்துகின்றன. சில விலங்குகள் தங்கள் உடல் வெப்பத்தைத் தணிக்க கொம்புகளைப் பயன்படுத்துகின்றன . கொம்பின் மையத்தில் உள்ள எலும்பில் உள்ள குருதி நாளங்கள் கொம்புகளை வெப்பாற்று அமைவாக ( ரேடியேட்டர்) செயல்பட வைக்கின்றன.

கொம்பு உள்ள விலங்கு இறந்த பிறகு, கொம்பு அந்துப்பூச்சியின் குடம்பிகள் கொம்பில் உள்ள கெரடினை உட்கொள்கின்றன.

கொம்புகளின் மனித பயன்பாடுகள்

[தொகு]
தென்கிழக்கு சீனாவில் மீன்களை வெட்டுவதற்கு கத்தியாகவும், சுத்தியலாகவும் பயன்படுத்தப்படும் எருமைக் கொம்பு
  • கொம்புகள் கொண்ட விலங்குகள் வேட்டையாடும் பொழுது, சிலசமயம் அவற்றின் கொம்புடன் கூடிய தலை வேட்டை சாகசத்ததைக் காட்டும் விதமாக அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • சில பண்பாடுகளில் மாட்டுக் குடும்ப வலங்குகளின் கொம்புகள் இசைக்கருவிகளாகப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, ஷோபார் . இது தற்போது பித்தளை கருவியாக பரிணமித்துள்ளது. இதில் எக்காளம் போலல உருளையாக இருப்பதற்கு பதிலாக கூம்பு வடிவமாக உள்ளது. இப்போது உலோகத்தால் இவை செய்யப்பட்டாலும் கொம்புகள் என்றே அழைக்கப்படுகின்றன.
  • குடிக் கொம்புகள் என்பவை எலும்பின் மையத்திலுள்ள பொருட்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, மெருகூட்டப்பட்டு, குடிநீர் குவளைகளாகப் பயன்படுத்தப்படும் கொம்புகளாகும். இவை இயற்கையான கொம்பின் வடிவமும் கொம்பு வடிவ குடி பாத்திரமான ரைட்டனுக்கு மாதிரியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. [9]
  • தூள் கொம்புகள் என்பவை மூடிகள் பொருத்தப்பட்ட கொம்புகள் ஆகும். படையினர் இவை வெடிமருந்துகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தினர். இதனால் எந்தவொரு பொருளினால் உருவாக்கபட்ட தூள் குடுவைகளையும் தூள் கொம்புகள் என்று குறிப்பிடபட்டன.
  • மான் கொம்புகள் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
  • கொம்புகள் நகமியைக் கொண்டிருக்கின்றன. மேலும் பொதுவாக "கொம்பு" என்ற சொல் இந்த நகமிப் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளின் குளம்புகள் போன்ற மற்ற பகுதிகளிலிருந்து இதேபோன்ற திடமான நகமி அடங்குயள்ளது. கருவிகள், தளபாடங்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றில் கொம்பு ஒரு மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயன்பாடுகளில், கொம்பு அதன் கடினத்தன்மைக்காக அறியப்படுகிறதுமதிப்பிடப்படுகிறது. கொம்பு ஓரளவு வெப்ப நெகிழி மற்றும் ( ஆமை ஓடு போன்றவை) முன்பு பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. அதற்கு பதில் இப்போது நெகிழி பயன்படுத்தப்படுகிறது. பசை தயாரிக்க சிலர் கொம்பை பயன்படுத்துகின்றனர்.
  • கொம்பு வில் என்பது பொதுவாக கொம்பு, தசையாண், மரம் போன்றவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் வில் ஆகும். இந்த பொருட்களைக் கொண்டு செய்யப்படும் வில்லானது மர வில்லைவிட ஒரு குறுகலான வில்லில் அதிக ஆற்றலை சேமித்து அம்பெய்த முடிகிறது.
  • பல்வேறு விலங்குகளின் கொம்புகள் பல நூற்றாண்டுகளாக கத்திகள் மற்றும் பிற ஆயுதங்களுக்கான கைப்பிடிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, கைத்துப்பாக்கிகளின் கைப்பிடியைத் தயாரிக்கவும் பயன்படுத்தபட்டன.
  • கொம்புகள் பொத்தான்களைத் தயாரிக்க பயன்படுத்தபட்டன. மேலும் வரலாற்று ரீதியாக இதே போன்ற பொருளான குளம்புகளும் பயன்படுத்தபட்டன. கொம்பு அல்லது குளம்பின் எலும்பல்லாத பகுதியை தண்ணீரின் கொதிநிலைக்கும் சற்று கூடுதலான வெப்பநிலையில் சூடாக்குவதன் மூலம் மென்மையாக்கலாம். பின்னர் கொம்பைக் கொண்டு உலோக அச்சில் இட்டு வார்க்கலாம். . கொம்புகளின் திடமான நுனிகளை துண்டித்து துளையிடுவதன் மூலம் நிலைமாற்று பொத்தான்கள் செய்யப்படுகின்றன. கொம்பு பொத்தான்கள் மற்றும் குளம்புகளால் செய்யப்பட்ட பொத்தான்கள் தொழில்நுட்ப ரீதியாக கொம்பு பொத்தான்கள் என அழைக்கபடுகின்றன.
  • நெகிழியின் பயன்பாடு வருவதற்கு முந்தைய காலத்தில் கொம்பு சீப்புகள் பரவலாக இருந்தன. அவை தற்போதும் தயாரிக்கப்படுகின்றன.
  • கொம்பு ஊசி பெட்டிகள் மற்றும் பிற சிறிய பெட்டிகள், குறிப்பாக எருமை கொம்புகளில், இன்னும் தயாரிக்கப்படுகின்றன.
  • கொம்பில் செதுக்கப்பட்ட கொண்டை ஊசிகள், உடை ஊசிகள், மோதிரங்கள் போன்ற பிற பொருட்கள், குறிப்பாக ஆசியாவில், நினைவுப் பரிசு வசிகத்திற்காக தயாரிக்கப்படுகின்றன.
  • சிறிய, நேர்த்தியான செதுக்கல்கள் கொண்ட கலைப்படைப்புகளுக்கு கொம்புகள் பயன்படுத்தப்படுகிறன்றன. இவை வேலை செய்ய எளிதானதாகவும், பளபளப்பான பொருளாகவும், வலுவானதாகவும், நீடித்துழைப்பதாகவும், அழகானதாகவும் உள்ளன.
  • கொம்பில் செய்யபட்ட உண்குச்சிகள் (சாப்ஸ்டிக்ஸ்) ஆசிய நாடுகளில் நேபாளம் மற்றும் திபெத் முதல் பசிபிக் கடற்கரை வரை காணப்படுகின்றன. பொதுவாக அவை இப்பொரிளில் தயாரிக்கப்படும் பொருள் அல்ல, மாறாக உயர்தர ஆடம்பரப் பொருளாகும். இதேபோல் மற்ற பொருட்களாக கொம்பு தட்டுகள், குறிப்பாக மேசைக் கரண்டி போன்றவை அலங்காரம் மற்றும் பிற நோக்கங்களுக்காக தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன.
  • கொம்பினால் ஆன பகடைகள் காய்கள் ஆசியாவில் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன. அங்கு அவை பாரம்பரியமாக சௌபர் (பச்சிசி) மற்றும் பல விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
  • கொம்பு என்பது சில நேரங்களில் ஊன்று கோல்கள், கைத்தடி கைப்பிடிகள் மற்றும் அம்புகள் போன்றவற்றில் காணப்படும் ஒரு பொருளாகும்.
  • கொம்புகள் கொண்ட பல தெய்வங்கள் கொம்புகளுடன் சித்தரிக்கப்படுகின்றன.
  • பல்வேறு கலாச்சாரங்களில் கொம்பு தலைக்கவசங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் போருக்குப் பதிலாக சடங்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாதகக் கருதப்படுகிறது.

கொம்பு நீக்குதல்

[தொகு]

சில சந்தர்ப்பங்களில், வனவிலங்கு பூங்காக்களில் விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சில விலங்குகளின் (காண்டாமிருகங்கள் போன்றவை) கொம்பை அகற்ற முடிவு செய்யப்படுகின்றன. விலங்குகளின் கொம்புகளை விலங்கிற்கு காயமேற்படாமல் பாதுகாப்பாக அறுக்க முடியும் (இது கால் நகங்களை வெட்டுவது போன்றது). [10] [11] [12]

காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Nasoori, Alireza (2020). "Formation, structure, and function of extra‐skeletal bones in mammals". Biological Reviews 95 (4): 986–1019. doi:10.1111/brv.12597. பப்மெட்:32338826. https://archive.org/details/formation-structure-and-function-of-extra-skeletal-bones-in-mammals. 
  2. Sketches of the natural history of Ceylon by Sir James Emerson Tennent, published by Longman, Green, Longman, and Roberts, 1861
  3. Mammals of Nepal: (with reference to those of India, Bangladesh, Bhutan and Pakistan) by Tej Kumar Shrestha, published by Steven Simpson Books, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9524390-6-9
  4. Alston, Isabella (2014-08-01). Anatomical Anomalies (in ஆங்கிலம்). TAJ Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781844063789.
  5. 5.0 5.1 Tubbs, R. Shane; Smyth, Matthew D.; Wellons, John C. III; Blount, Jeffrey P.; Oakes, W. Jerry (June 2003). "Human horns: a historical review and clinical correlation". Neurosurgery 52 (6): 1443–1448. doi:10.1227/01.NEU.0000064810.08577.49. பப்மெட்:12762889. https://archive.org/details/sim_neurosurgery_2003-06_52_6/page/1443.  (Literature Reviews)
  6. The Behaviour of Ungulates and Its Relation to Management: The Papers of an International Symposium Held at the University of Calgary, Alberta, Canada, 2-5 November 1971. International Union for Conservation of Nature and Natural Resources.
  7. Sociobiology. Harvard University Press.)
  8. "Why Female Water Buffalo Have Horns but Impala Do Not?".
  9. Chusid, Hearing Shofar: The Still Small Voice of the Ram's Horn, 2009, Chapter 3-6 - Ram's Horn of Passover <http://www.hearingshofar.com பரணிடப்பட்டது 2010-03-28 at the வந்தவழி இயந்திரம்>. The book also posits that the ancient Hebrews and neighboring tribes used horns as weapons and as utensils.
  10. Cutting off horns to save rhinos from poachers
  11. Cutting off horns to save rhinos from poachers
  12. Dehorning rhinos
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்பு_(உடற்கூறியல்)&oldid=3624344" இலிருந்து மீள்விக்கப்பட்டது