பொக்கோ சேனா மாவட்டம்

ஆள்கூறுகள்: 6°10′N 100°30′E / 6.167°N 100.500°E / 6.167; 100.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொக்கோ சேனா மாவட்டம்
Pokok Sena District
 மலேசியா
கெடா மாநிலத்தில் பொக்கோ சேனா மாவட்டம்
கெடா மாநிலத்தில் பொக்கோ சேனா மாவட்டம்
Map
பொக்கோ சேனா மாவட்டம் is located in மலேசியா
பொக்கோ சேனா மாவட்டம்
பொக்கோ சேனா மாவட்டம்
      பொக்கோ சேனா மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°10′N 100°30′E / 6.167°N 100.500°E / 6.167; 100.500
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்பொக்கோ சேனா மாவட்டம்
தொகுதிபொக்கோ சேனா
நகராட்சிஅலோர் ஸ்டார் மாநகராட்சி
(Alor Setar City Council)
பரப்பளவு
 • மொத்தம்242.4 km2 (93.6 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்47,745
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு06xxx
மலேசிய தொலைபேசி+6-04
மலேசிய போக்குவரத்து பதிவெண்K

பொக்கோ சேனா மாவட்டம் என்பது (மலாய்: Daerah Pokok Sena; ஆங்கிலம்: Pokok Sena District; சீனம்: 波各先那县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். அலோர் ஸ்டார் நகருக்கு கிழக்கே ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த மாவட்டம் கெடாவின் 12-ஆவது மாவட்டமாகும். இது முன்பு கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் (Kota Setar District) துணை மாவட்டமாக இருந்தது; 2009-இல் கெடா சுல்தான் அப்துல் ஆலிம் (Sultan Abdul Halim Mu'adzam Shah ibni Almarhum Sultan Badlishah) அவர்களால் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.[1]

பொது[தொகு]

பொக்கோ சேனா மாவட்டம் ஒரு வேளாண் மாவட்டம் ஆகும். 2,816 எக்டர் பரப்பளவில் நெல்; 9,883 எக்டர் பரப்பளவில் ரப்பர்; 416 எக்டர் பரப்பளவில் பழத்தோட்டங்கள்; 2.5 எக்டர் பரப்பளவில் கொக்கோ பயிரிடப் படுகிறது.

பல்வேறு வகையான இலகுரக நிறுவனங்களும் (Light Enterprises) உள்ளன. மேலும் சிறு தொழில்களுக்கு (Small Industries) சுமார் 12 வளாகங்களும் உள்ளன.[2]

முக்கிம் மற்றும் நகரங்கள்[தொகு]

போகோக் சேனா மாவட்டம் ஆறு துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

# முக்கிம் மக்கள் தொகை (2010)[3]
1 காஜா மத்தி (Gajah Mati) 12,607
2 சாபி, பொக்கோ சேனா (Jabi, Pokok Sena) 12,498
3 துவாலாங், பொக்கோ சேனா (Tualang, Pokok Sena) 6,776
4 லெசோங் (Lesong) 5,979
5 புக்கிட் லாடா (Bukit Lada) 6,551
6 டெராங் (Derang) 3,936

நகரங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Role of Conference of Rulers
  2. "The Land Office is the earliest office established in the State of Kedah, which was in 1883 by KDYMM Sultan Abdul Hamid Halim Shah". Pejabat Pengarah Tanah Dan Galian Negeri Kedah. 13 September 2020. பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.
  3. "Taburan Penduduk Mengikut Kawasan Pihak Berkuasa Tempatan dan Mukim 2010". Jabatan Perangkaan Malaysia. p. 268. பார்க்கப்பட்ட நாள் 2022-01-21.{{cite web}}: CS1 maint: url-status (link)

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொக்கோ_சேனா_மாவட்டம்&oldid=3931312" இலிருந்து மீள்விக்கப்பட்டது