கோத்தா பெலுட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 6°21′00″N 116°26′00″E / 6.35000°N 116.43333°E / 6.35000; 116.43333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா பெலுட் மாவட்டம்
Kota Belud District
சபா
கோத்தா பெலுட் மாவட்ட மன்றம்
கோத்தா பெலுட் மாவட்ட மன்ற அலுவலகம்.

சின்னம்
Location of கோத்தா பெலுட் மாவட்டம்
கோத்தா பெலுட் மாவட்டம் is located in மலேசியா
கோத்தா பெலுட் மாவட்டம்
கோத்தா பெலுட் மாவட்டம்
      கோத்தா பெலுட் மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°21′00″N 116°26′00″E / 6.35000°N 116.43333°E / 6.35000; 116.43333
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை
தலைநகரம்கோத்தா பெலுட்
அரசு
 • மாவட்ட அதிகாரிமுகமது நஜிப் முன்டோக்
(Mohd Najib Muntok)
பரப்பளவு
 • மொத்தம்1,386 km2 (535 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்91,272
இணையதளம்www.sabah.gov.my/pd.kb/
சபா மாநிலத்தில் கோத்தா பெலுட் மாவட்டம்

கோத்தா பெலுட் மாவட்டம்; (மலாய்: Daerah Kota Belud; ஆங்கிலம்: Kota Belud District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்தக் கோத்தா பெலுட் மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா பெலுட் நகரம் (Kota Belud Town) ஆகும்.

சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா பெலுட் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 77 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

பொது[தொகு]

சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

சொற்பிறப்பியல்[தொகு]

கோத்தா பெலுட் எனும் பெயர் பஜாவ் மொழியில் இருந்து வந்தது. "கோத்தா" என்றால் கோட்டை; "பெலுட்" என்றால் மலை என்று பொருள். எனவே, கோத்தா பெலுட் என்றால் "மலையில் உள்ள கோட்டை" என்று பொருள் படுகிறது.[1]

வரலாறு[தொகு]

கோத்தா பெலுட் முன்னோர்களின் கதைகளின்படி, பழங்காலத்தில் கோத்தா பெலுட் மாவட்டத்தில் இருந்த இனங்களுக்கும்; கிராமங்களுக்கும் இடையே பகைகள் இருந்தன. அந்த வகையில் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த, அவர்கள் தஞ்சம் அடைவதற்கு பாதுகாப்பான ஓர் இடத்தை நாடினர்.

பஜாவு மக்கள் ஒரு மலையைத் தற்காப்பு நகரமாகத் தேர்ந்து எடுத்தார்கள். அந்த மலைக்குக் கோத்தா பெலுட் என்று பெயர் வைத்தார்கள். அவ்வாறுதான் கோத்தா எனும் பெயர் வந்தது.[1]

மக்கள்தொகை[தொகு]

கடந்த 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோத்தா பெலுட் மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 91,272. முக்கியமாக பஜாவ், இல்லானுன் மக்கள் மற்றும் டூசுன் என மதிப்பிடப்பட்டுள்ளது. சபாவின் மற்ற மாவட்டங்களைப் போலவே, அருகிலுள்ள தெற்கு பிலிப்பீன்சு நாட்டில் இருந்தும்; முக்கியமாக சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago) மற்றும் மிண்டனாவோ (Mindanao) தீவில் இருந்தும்; கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் உள்ளனர். அவர்களில் பலர் மக்கள்தொகை புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை.

கோத்தா பெலுட் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]

கோத்தா பெலுட் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.

  1. அம்போங் - Mukim Ambong
  2. பண்டார் கோத்தா பெலுட் - Mukim Bandar Kota Belud
  3. துடார் - Mukim Dudar
  4. ககுரான் - Mukim Kaguraan
  5. கடைமான் - Mukim Kadaiman
  6. கெடாமையான் - Mukim Kadamaian
  7. கெபயாவ் - Mukim Kebayau
  8. கெடத்துவான் - Mukim Kedatuan
  9. கெலாவத் - Mukim Kelawat
  10. குலம்பாய் - Mukim Kulambai
  11. கினசரபான் - Kinasaraban
  12. லசாவ் - Lasau
  13. மங்குலாட் - Mangkulat
  14. பைராசான் - Mukim Pirasan
  15. ரம்பாயான் - Mukim Rampayan
  16. ரோசோக் - Mukim Rosok
  17. செம்பிராய் - Mukim Sembirai
  18. தகினம்பூர் - Mukim Taginambur
  19. தாவுன் குசி - Mukim Taun Gusi
  20. டெம்பாசுக் - Mukim Tempasuk

கோத்தா பெலுட் நகரம்[தொகு]

கோத்தா பெலுட் நகரம், கோத்தா பெலுட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 77 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[2]

சபாவின் வடக்கு முனையில் உள்ள கோத்தா கினபாலு மற்றும் கூடாட் நகரங்களை இணைக்கும் கூட்டாட்சி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் உள்ளது. அதே வேளையில், இந்தக் கோத்தா பெலுட் நகரம் கூடாட் பிரிவுக்குச் செல்லும் முக்கிய நகரமாகவும் விளங்குகிறது. இந்த நகரம் மேற்கு கடற்கரையில் பஜாவ் (Bajau) மக்கள் வாழும் மையப் பகுதிக்கான நுழைவாயிலாகவும் கருதப் படுகிறது.

கினபாலு மலை[தொகு]

கோத்தா பெலுட் நகரமும்; கோத்தா பெலுட் மாவட்டமும், சபா மாநிலத்தின் மிக அழகான நிலப் பகுதிகளில் ஒன்றாகும். கினபாலு மலையின் அழகியக் காட்சிகளைக் கோத்தா பெலுட் நகரத்தில் இருந்து பார்க்கலாம்.[3]

கோத்தா பெலுட் நிலப் பகுதி, கினபாலு தேசியப் பூங்கா வரை பரந்து விரிந்து உள்ளது. கோத்தா பெலுட் கடற்கரையோரப் பகுதிகள், பஜாவு மக்களின் வாழ்விடமாகக் கருதப் படுகிறது. கோத்தா பெலுட் உட்புறப் பகுதிகளில் டூசுன் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

தாமு திறந்தவெளிச் சந்தை[தொகு]

கோத்தா பெலூட்டின் மக்கள் தொகை, பஜாவ் - சாமா (Bajau-Sama); டூசுன் (Dusun) மற்றும் இலானும் (Illanun) இனக் குழுகளிடையே இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. சீனர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்; முக்கியமாக ஹக்கா இனத்தைச் சேர்ந்த மக்கள்.[2]

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கோத்தா பெலூட்டில் நடைபெறும் திறந்தவெளிச் சந்தைக்குப் பெயர் பெற்றது. தாமு (Tamu) என்று பெயர். ஆண்டுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவிலும் தாமு நடைபெறுகிறது.[3]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Nama Kota Belud berasal dari bahasa suku kaum Bajau. Dalam bahasa Bajau, KOTA membawa maksud PERTAHANAN dan BELUD pula bermakna BUKIT. Oleh itu, Kota Belud boleh diterjemahkan ke dalam bahasa Malaysia sebagai BUKIT PERTAHANAN". www.sabah.edu.my. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  2. 2.0 2.1 "The fascination of the 'Land of the Cowboys of the East'". பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  3. 3.0 3.1 "The town of Kota Belud is located about an hour and a half north of Kota Kinabalu. The surrounding district is one of the most beautiful regions in Sabah and provides some of the best panoramic views of Mount Kinabalu". Sticky Rice Travel. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசியாவின் மாவட்டங்கள்

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_பெலுட்_மாவட்டம்&oldid=3640995" இலிருந்து மீள்விக்கப்பட்டது