மாச்சாங்

ஆள்கூறுகள்: 5°45′39″N 102°12′57″E / 5.76083°N 102.21583°E / 5.76083; 102.21583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாச்சாங்
Machang
கிளாந்தான்
Map
மாச்சாங் is located in மலேசியா
மாச்சாங்
      மாச்சாங்
ஆள்கூறுகள்: 5°45′39″N 102°12′57″E / 5.76083°N 102.21583°E / 5.76083; 102.21583
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் மாச்சாங் மாவட்டம்
அமைவு1880
பரப்பளவு[1]
 • மொத்தம்130 km2 (50 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்56,937
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு18XXX
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்D

மாச்சாங் (மலாய் மொழி: Machang; ஆங்கிலம்: Machang) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; மாச்சாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.

மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 44 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பொது[தொகு]

குதிரை மாம்பழம் என்று அழைக்கப்படும் மாச்சாங் மாம்பழம் (Mangifera foetida) என்பதன் மலாய் பெயரில் இருந்து இந்த இடத்திற்குப் மாச்சாங் என்று பெயரிடப்பட்டது.[2]

மாச்சாங் எனும் பெயரில் கம்போங் மாச்சாங் (Kampung Machang) எனும் கிராமம் உள்ளது. 1880-ஆம் ஆண்டில் செனிக் அவாங் கெச்சிக் (Senik Awang Kecik) என்பவரின் தலைமையில் குடியேறிய ஒரு குழுவினரால் கம்போங் மாச்சாங் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது.

இந்தக் கிராமத்தில் இருந்துதான் மாச்சாங் நகரமும் உருவானது.

கில்மார்ட் பாலம்[தொகு]

கிளாந்தான் ஆற்றின் குறுக்கே தானா மேராவுக்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் இரயில் பாலம் உள்ளது. அதன் பெயர் கில்மார்ட் பாலம் (Guillemard Bridge). இந்தப் பாலம் மலேசியாவிலேயே மிக நீளமான இரயில் பாலமாகும். இதன் கட்டுமானம் 1920-இல் தொடங்கி 1924-இல் நிறைவு அடைந்தது.

கில்மார்ட் எனும் பெயர், சர் லாரன்ஸ் கில்மார்ட் (Sir Laurence Guillemard) என்பவரின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. இவர் அப்போது நீரிணை குடியேற்றங்களின் ஆளுநராகவும், மலாயாவின் உயர் ஆணையராகவும் இருந்தவர்.

ஜப்பானிய படையெடுப்பு[தொகு]

மலாயா மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது, ஜப்பானிய இராணுவ துருப்புக்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, 1941 டிசம்பர் 12-ஆம் தேதி பிரித்தானியத் துருப்புக்களால் இந்த பாலம் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது.

பின்னர் இந்த இரயில் பாலம் விரைவில் பழுதுபார்க்கப்பட்டு, 1948 செப்டம்பர் 7-ஆம் தேதி போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்திற்கு அருகில் மேலும் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டது. அதனால் கில்மார்ட் பாலம் இப்போது இரயில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Latar Belakang". 11 November 2015. Archived from the original on 27 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 1 ஜூன் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Raremaps.com". பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாச்சாங்&oldid=3752500" இலிருந்து மீள்விக்கப்பட்டது