ஜெராய் மலை

ஆள்கூறுகள்: 5°47′N 100°26′E / 5.783°N 100.433°E / 5.783; 100.433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெராய் மலை
Mount Jerai
கெடா
மேல் நடுவில் பச்சை நிற
முக்கோணத்தில் ஜெராய் மலை
உயர்ந்த இடம்
உயரம்1,217 m (3,993 அடி)
ஆள்கூறு5°47′N 100°26′E / 5.783°N 100.433°E / 5.783; 100.433
புவியியல்
ஜெராய் மலை is located in மலேசியா
ஜெராய் மலை
ஜெராய் மலை
மலேசியாவில் அமைவிடம்
அமைவிடம் கெடா
மலேசியா
மூலத் தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்

ஜெராய் மலை (மலாய்: Gunung Jerai; ஆங்கிலம்: Mount Jerai சீனம்: 日莱峰) என்பது மலேசியா; கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலை. மலேசியாவின் மலை வாழ்விடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மலை, முன்பு கடாரத்தின் சிகரம் (ஆங்கிலம்: Kedah Peak) என்று புகழப்பட்டது.[1]

இந்த மலையின் உயரம் 3,854 அடி (1,175 மீ). கெடா மாநிலத்தின் கோலா மூடா மாவட்டம் மற்றும் யான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. இந்த மலை பாரிய சுண்ணாம்புக் கற்களால் ஆனது. இந்த மலையின் சுற்றியுள்ள பகுதிகள்; புவியியல் தன்மைகளில் இருந்து தனிப்பட்டத் தன்மைகளில் அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

ஜெராய் மலையின் வரலாறு[தொகு]

கெடாவின் வரலாறும் ஜெராய் மலையின் வரலாறும், மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தொடங்குகின்றன. மாறன் மகாவம்சனை, மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்று கெடாவின் வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சான்று கூறுகின்றன.[2][3]

மாறன் மகாவம்சன் என்பவர் தென்னிந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து கெடாவிற்கு வந்தவர். கெடா ஆட்சியை (Kedah kingdom - Kadaram) உருவாக்கியவர்.[4]

மாறன் மகாவம்சனுக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவர் மாறன் மகா பூதிசன் (Merong Mahapudisat). இரண்டாவது மகன் கஞ்சில் சார்ஜுனா (Ganjil Sarjuna). மூன்றாவது மகன் ஸ்ரீ மகாவங்சன் (Seri Mahawangsa). கடைசியாக ஒரே மகள். அவருடைய பெயர் ராஜா புத்திரி இந்திரவம்சன் (Raja Puteri Sri Indrawangsa).[5]

மாறன் மகா பூதிசன்[தொகு]

மாறன் மகாவம்சனுக்குப் பிறகு அவருடைய மகன் மாறன் மகா பூதிசன் கெடாவின் அரசரானார். இவருக்குப் பிறகு இவரின் தம்பி கஞ்சில் சார்ஜுனா கெடாவின் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் தான் இலங்காசுகத்தைத் தோற்றுவித்தவர். கஞ்சில் சார்ஜுனா இறந்த பின்னர் அவரின் தம்பி ஸ்ரீ மகாவங்சன், லங்காசுகத்தின் அரசரானார்.

ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் இவரின் தங்கை ராஜா புத்திரி இந்திரவம்சன் என்பவர் இலங்காசுகத்தின் அரசியானார்.

கெடாவிற்கும் தென் தாய்லாந்திற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைப் பட்டாணி என்று அழைத்தார்கள். பட்டாணி எனும் பெயரில் இருந்து தான் சுங்கை பட்டாணி எனும் இப்போதைய நகரத்தின் பெயரும் உருவானது.

ராஜா புத்திரி இந்திரவம்சன்[தொகு]

இந்தப் பட்டாணி நிலப் பகுதிக்கும் ராஜா புத்திரி இந்திரவம்சன் தான் அரசியாக இருந்தார். கெடா வரலாற்றில் இவர் தான் முதல் பெண் ஆட்சியாளர்..[5]

அடுத்து வந்தவர் ஸ்ரீ மகா இந்திரவம்சன் (Seri Maha Inderawangsa). இவர் ஸ்ரீ மகாவங்சனின் மகனாகும். இவரைத் தான் கூர்ப் பல் அரசன் (Raja Bersiong) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. இவர் மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பவர் என்றும் சொல்லப் படுகிறது.[6]

இவருடைய வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளினால் அரியணையில் இருந்து விலக்கப் பட்டார். இவர் ஜெராய் மலையில் அடைக்கலம் அடைந்தார். அங்கே வெகு காலம் தனிமையில் வாழ்ந்தார். இவர் ஒரு தாய்லாந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன். பெயர் பரா ஓங் மகா பூதிசன் (Phra Ong Mahapudisat).[7]

பரா ஓங் மகா பூதிசன்[தொகு]

பரா ஓங் மகா பூதிசன் ஓர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அந்த விசயம் அவருக்கும் தெரியாமலேயே இருந்தது. இவர் ஜெராய் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் தாயாருடன் வளர்ந்து வந்தார்.

இந்தக் கட்டத்தில் ஜெராய் மலையில் அடைக்கலம் போன ஸ்ரீ மகா இந்திரவம்சன் அங்கேயே காலமானார். மலையில் இருந்து கீழே இறங்கி வவில்லை.[7]

கெடா அரசின் பொறுப்பு[தொகு]

ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் ஓர் ஆண் வாரிசு கெடா அரியணைக்குத் தேவைப் பட்டது. ஜெராய் மலை அடிவாரத்தில் ஒரு கிராமத்தில் இருந்த பரா ஓங் மகா பூதிசனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவரைக் கொண்டு வந்து அவருக்கு கெடா பேரரசின் அரசப் பொறுப்பை வழங்கினார்கள்.

இந்தப் பரா ஓங் மகா பூதிசனுக்கும் ஒரே மகன். அவருடைய பெயர் பரா ஓங் மகாவம்சன் (Phra Ong Mahawangsa). தன் பெயரை முஷபர் ஷா என்று மாற்றிக் கொண்டார் என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் சொல்கின்றன.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gunung Jerai is a 1217 m high mountain on the mainland of Peninsular Malaysia, just to the north of Penang Island, and can be clearly seen from most parts of Penang and the surrounding region in Kedah". www.rainforestjournal.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
  2. R. O. Winstedt (December 1938). "The Kedah Annals". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society 16 (2 (131)): 31–35. 
  3. Michel Jacq-Hergoualc'h (2002). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 BC-1300 AD). Victoria Hobson (translator). Brill. பக். 164–165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004119734. https://books.google.com/books?id=a5rG6reWhloC&pg=PA164. 
  4. Logan, J. r (1849). Journal Of The Indian Archipelago And Eastern Asia Series.i, Vol.3. https://archive.org/details/in.ernet.dli.2015.533877. பார்த்த நாள்: 11 April 2022. 
  5. 5.0 5.1 Logan, James Richardson (1849). "The Journal of the Indian archipelago and eastern Asia (ed. by J.R. Logan)." (in en). The Journal of the Indian Archipelago and Eastern Asia. 3: 1–23. https://books.google.com.my/books?id=WXMEAAAAQAAJ&redir_esc=y. பார்த்த நாள்: 11 April 2022. 
  6. Zi Hao, Tan (1 September 2020). "Raja Bersiong or the Fanged King". Indonesia and the Malay World. pp. 263–280. doi:10.1080/13639811.2020.1794584. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
  7. 7.0 7.1 "SIAMESE KEDAH - THE MALAY MONARCHY - - King Phra Ong Mahapudisat: After Seri Mahawangsa's death, Langkasuka needed a successor that had a royal blood. Phra Ong Mahapudist was crowned king after his father's death". geni_family_tree. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
  8. Iskandar, Yusoff (1992) (in en). The Malay Sultanate of Malacca: A Study of Various Aspects of Malacca in the 15th and 16th Centuries in Malaysian History. Dewan Bahasa dan Pustaka, Ministry of Education Malaysia. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-983-62-2840-6. https://www.google.co.in/books/edition/The_Malay_Sultanate_of_Malacca/QYMuAQAAIAAJ?hl=en&gbpv=0&bsq=Sultan%20Mudzafar%20Shah%20I%20islam. பார்த்த நாள்: 11 April 2022. 

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெராய்_மலை&oldid=3923905" இலிருந்து மீள்விக்கப்பட்டது