பூஜாங் பள்ளத்தாக்கு
பூஜாங் பள்ளத்தாக்கு (Bujang Valley) மலேசியாவில் வட மூவலந்தீவுப் (வடதீபகற்பப்) பகுதியின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகத்திற்கும் மேற்கு ஆசியா, ஆசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாகரீகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே கடல் வழியாக வாணிபம் நடந்து வந்தது.
இந்தத் துறைமுகம் பெரும்பாலும் ஸ்ரீவிஜயா ஆட்சியுடன் தொடர்பு படுத்தப் படுகிறது. பூஜாங் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா, மேற்கு ஆசியா போன்ற நாகரீகங்களின் சுட்டாங்கல் (செராமிக்) பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை புத்த, இந்து மதங்கள் சம்பந்தப்பட்ட கோவில் கல்வெட்டுகள், கோவில் சிலைகள் போன்றவை ஆகும். இந்த நாகரீகங்கள் மறைந்த கடாரத்துடன் தொடர்பு படுத்துப் படுகின்றன.