மூவலந்தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நில அமைப்பியலில் மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதனை தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. ஒரு நிலப்பரப்பின் எல்லா புறமும் நீரால் சூழ்ந்து இருந்தால் அதனை நாவலந்தீவு அல்லது பொதுவாக தீவு என்று குறிப்பிடுவர். தென் இந்தியாவும் ஒரு மூவலந்தீவுதான்.

