மலாக்கா சுல்தானகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||||||
மலாய் அரசனான பரமேசுவராவால், 1402 ஆம் ஆண்டில் இந்து அரசாக நிறுவப்பட்டதே ”மலாக்கா சுல்தானகம்”. பின்னர் இவரது மகனான [[மெகாட் இஸ்கந்தார் ஷா] பசாய் இளவரசியினை திருமணம் செய்து இசுலாமியராக மாறினார். தாய்லாந்திற்கு கீழும் சுமாத்திராவிற்கு மேலேயும் உள்ள இடைப்பட்ட நிலத்தில் இது பரவியிருந்தது. இதன் தலைநகரத்தில் போர்த்துகேயர் 1511 ஆம் ஆண்டில் புகுந்தனர். இதன் வழித் தோன்றலாக, அலாவுதீன் ரியாத் சாவினால் பின்னர் ஜொகூர் சுல்தானகம் நிறுவப்பட்டது.
தொடக்க கால நிறுவனம் [தொகு]
1400 ஆம் ஆண்டுவாக்கில் பரமேசுவரா, என்ற இந்து அரசன் நிறுவினான். கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சிங்கப்பூரின் கடைசி அரசனும், சிறீவிஜயாவின் குடும்பத்தின் கடைசி வழித்தோன்றலும் இவனே,