ஜித்ரா போர்

ஆள்கூறுகள்: 6°16′N 100°25′E / 6.267°N 100.417°E / 6.267; 100.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜித்ரா போர்
Battle of Jitra
Pertempuran Jitra
பசிபிக் போர்
இரண்டாம் உலகப் போர் பகுதி

மலாயா தீபகற்பத்தின் வரைபடம். கெடா மாநிலத்தில்,
(மேல் இடது புறத்தில்) ஜித்ரா அமைந்துள்ளது.
நாள் 10–13 டிசம்பர் 1941
இடம் ஜித்ரா, பிரித்தானிய மலாயா
சப்பானிய வெற்றி
பிரிவினர்
 பிரித்தானியா  சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் டேவிட் முரே லியோன் சப்பானியப் பேரரசு தக்குரோ மாட்சுயி
படைப் பிரிவுகள்
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு 11-ஆவது தரைப்படை சப்பானியப் பேரரசு 5-ஆவது தரைப்படை
இழப்புகள்
 பிரித்தானியா
26+ இறப்புகள்
 இந்தியா
350+ இறப்புகள்
 சப்பான்
6 தகரிகள் அழிப்பு
1+ தகரி சேதம்
27 இறப்புகள்
83 காயம் அடைந்தோர்[1]

ஜித்ரா போர் (ஆங்கிலம்: Battle of Jitra; மலாய்: Pertempuran di Jitra); என்பது இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்தியாவிற்கும், சப்பானியப் பேரரசிற்கும் இடையே தீபகற்ப மலேசியா, கெடா, ஜித்ரா காட்டுப் பகுதிகளில்; 1941 டிசம்பர் 10-ஆம் தேதியில் இருந்து 1941 டிசம்பர் 13-ஆம் தேதி வரையில் நடைபெற்ற போரைக் குறிப்பிடுவதாகும்.

இந்தப் போரில் பிரித்தானிய கூட்டுப் படைகள் தோல்வி அடைந்தன. அதன் விளைவாக, பிரித்தானியக் கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த ஆர்தர் பெர்சிவல், மலாயாவில் செயல்பாட்டில் இருந்த அனைத்து நேச நாட்டு வான்படை வானூர்திகளையும் சிங்கப்பூருக்குத் திரும்பி வருமாறு கட்டளையிட்டார்.

சிங்கப்பூரில் இருந்த தலைமையகத்திற்கும், ஜித்ரா போர் முனையில் இருந்த கள அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடான கருத்துப் புரிதல்களால் நேச நாட்டுக் கூட்டுப் படைகளுக்குப் பாதகமான விளைவுகள் ஏற்பட்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

பின்னணி[தொகு]

பிரித்தானிய தற்காப்பு அரண் 14 மைல் (23 கி.மீ.) நீளமானது. அதில் சாலைகளும்; தொடருந்து வழித்தடமும் குறுக்கே வெட்டிச் சென்றன. மற்றும் இருபுறங்களிலும் காடுகள் நிறைந்த குன்றுகள்; வெள்ளத்தில் மூழ்கிய நெல் வயல்கள்; ரப்பர் மர தோட்டத்தின் வழியாக சதுப்பு நிலங்களும் அதிகமாக இருந்தன.[2]

நேச நாடுகளின் படையணிகள்[தொகு]

பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படை ஜித்ராவைச் சுற்றிலும் தற்காப்பு நிலைகளை உருவாக்கி வலுப்படுத்தியது.[6] 1941 டிசம்பர் 8-ஆம் தேதி வரையில், ஜித்ராவின் தற்காப்பு அரண் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படைக்கு தளபதியாக டேவிட் முரே லியோன் தலைமை தாங்கினார்.[3]

  • 11-ஆவது தரைப்படை
  • 15-ஆவது தரைப்படை
  • 1-ஆவது லெய்செஸ்டர்சைர் படையணி
  • 1-ஆவது; 14-ஆவது பஞ்சாப் படையணி
  • 2-ஆவது; 9-ஆவது ஜாட் படைப் பிரிவு
  • 6-ஆவது இந்திய இராணுவத்தின் தரைப்படை படைப் பிரிவு
  • 2-ஆவது கிழக்கு சுரே படையணி
  • 8-ஆவது பஞ்சாப் படையணி
  • 2-ஆவது 16-ஆவது படைப் பிரிவு - பஞ்சாப் படையணி
  • 155-ஆவது தரைப்படை படையணி
  • 22-ஆவது மலைக்காடுகள் படையணி
  • 80-ஆவது தகரி எதிர்ப்பு படையணி
  • 28-ஆவது இந்தியத் தரைப்படை (3 கூர்கா படையணி)

முடிவு[தொகு]

பசிபிக் போர் தொடங்கிய போது ஜித்ராவில் நேச நாட்டுப் படைகளின் தற்காப்பு முறை முழுமையாக அமையவில்லை.[4] போருக்கு முன்னதாகவே, ஜித்ராவில் முள்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன; மற்றும் கண்ணிவெடிகளும் வைக்கப்பட்டன.

ஆனால் அங்கு பெய்த கனமழையால் தற்காப்பு அகழிகள் மற்றும் பதுங்கு குழிகளில் பெரிய அலவில் வெள்ளம் ஏற்பட்டது. நீர் தேங்கிய நிலத்தின் குறுக்கே போடப்பட்ட பல தொலைபேசி கம்பிவடங்களும் வேலை செய்யவில்லை. இதன் விளைவாக போரின் போது தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.[5]

போர்க் கொடுமைகள்[தொகு]

போர் முனையில் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படை; 8-ஆவது பஞ்சாப் படையணி; கூர்கா படையணி; ஆகிய போர்முனை படையணிகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட ஆயுதங்கள்; மருந்துகள்; உணவு நீர் வகைகள்; தொலைத் தொடர்பு சாதன வசதிகள்; பின்னணிக் காப்புகள் உடனடியாகக் கிடைக்கவில்லை. மழை வெள்ளத்தின் காரணமாக, தொலைபேசி கம்பிவடங்களும் வேலை செய்யாமல் போனதும் முக்கிய காரணமாக அறியப்படுகிறது.

ஜித்ரா போர் முனையில் வெள்ளத்தின் காரணமாக, படையணிகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை; அவர்களைப் பின்வாங்கச் செய்வதே சிறப்பு என்று 11-ஆவது தரைப்படை தளபதி டேவிட் முரே லியோன்; சிங்கப்பூரில் உள்ள தலைமையகத்திற்கு செய்தி அனுப்பினார். ஆனால் ஆர்தர் பெர்சிவல் தொடர்ந்து போர் செய்யுமாறு கட்டளையிட்டார்.

இந்திய இராணுவ வீரர்கள்[தொகு]

இந்தப் போரில் நேச நாட்டுக் கூட்டுப் படைகள் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால் இடைவிடாது பெய்த மழையின் காரணமாகவும்; தொலைபேசி கம்பிவடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாலும்; வெற்றி வாய்ப்புகள் குன்றிப் போயின.

மேலும், காயங்கள் அடைந்து நடக்க முடியாத இராணுவ வீரர்கள் பலரை சப்பானியப் படையினர் கத்தியால் குத்திக் கொன்றதாகவும் அறியப்படுகிறது. இந்தப் போரில் இந்திய இராணுவ வீரர்கள் தரப்பில் 350 உயிரிழப்புகள் ஏற்பட்டன.[6]

குறிப்புகள்[தொகு]

  1. Max Hastings, All Hell Let Loose, 337
  2. Smith, 2006, pp. 229–264
  3. Wigmore, 1957, pp. 137–152
  4. Smith, 2006, pp. 229–264
  5. Wigmore, 1957, pp. 137–152
  6. Warren, Alan (2006). Britain's Greatest Defeat: Singapore 1942 (Illustrated ). Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85285-597-5. https://books.google.com/books?id=zosKzAoocu8C. 

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்ரா_போர்&oldid=3937421" இலிருந்து மீள்விக்கப்பட்டது