பஞ்சக புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சக புராணம் என்பது நூல் அன்று. சிவாலயங்களில் திருமுறை ஓதும் முறைமை. இது பன்னிரு திருமுறை தொகுக்கப்பட்ட காலத்திலிருந்து பழக்கத்தில் இருந்துவந்திருக்கிறது.

பன்னிரு திருமுறைகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பாடல் பாடுவதற்குப் பதிலாக ஐந்து பாடல்களை மட்டும் பாடும் முறைமையைப் 'பஞ்சக புராணம்' என்னும் பெயரால் குறிப்பிட்டு வந்தனர். இந்த வழக்கம் சுமார் நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. [1]

  • புராணம் என்னும் சொல்
புராணம் என்னும் சொல் 'பழமை' என்னும் பொருளைத் தரும்.[2]
  • பஞ்சக புராண மரபில் பாடப்படும் பாடல்கள்
  1. தேவார அடங்கல்முறை முழுவதிலுமிருந்து ஒரு பாடல்
  2. திருவாசகம் நூலிலிருந்து ஒரு பாடல்
  3. திருவிசைப்பா பாடல் ஒன்று
  4. திருப்பல்லாண்டு பாடல் ஒன்று
  5. பெரியபுராணம் பாடல் ஒன்று

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் கட்டுரை, சைவ சித்தாந்த பொன்விழா மலர். 1965
  2. பூத புராணம். மாபுராணம் என்னும் இலக்கண நூலின் பெயர்களில் கையாளப்படுவது போன்றதொரு சொல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சக_புராணம்&oldid=1437455" இலிருந்து மீள்விக்கப்பட்டது