சன்னா (பௌத்தம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்னா
சுய தரவுகள்
சமயம்பௌத்தம்
தெய்வீகத் தேரோட்டி சன்னாவுடன் கந்தகாவின் புடைப்புச் சிற்பம், 1897

சன்னா (Channa) ( தெய்வீகத் தேரோட்டி) புத்தராக மாறவிருந்த இளவரசர் சித்தார்த்தரின் அரச ஊழியரும் தலைமைத் தேரோட்டியும் ஆவார். தம்மபதத்தின் 78 வது வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி சன்னா பின்னர் புத்தரின் சீடராகி அருகதர் ஆனார்.

பின்னணி[தொகு]

மன்னன் சுத்தோதனரின் அரசவையில் பணியாளராக இருந்தவர். சித்தார்த்தன் வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பதற்காக அவரது தந்தையால் கட்டப்பட்ட ஆடம்பர அரண்மனைகளில் இருந்த சித்தார்த்தனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணியமர்த்தப்பட்டார். சாக்கியர்களின் தலைநகரான சித்தார்த்தர் கபிலவஸ்துவைச் சுற்றி வசித்து வந்த தனது குடிமக்களைச் சந்தித்தார். அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை இவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை;

  1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
  2. ஒரு நோயாளி
  3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
  4. நாலாவதாக ஒரு முனிவன்

இது உலகத்தைத் துறக்கும் முடிவை அவருக்குள் தூண்டியது. சித்தார்த்தருக்கு வயதில் மூத்தவரும், நோய்வாய்ப்பட்டவருமான சன்னா, இறந்தவரின் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த காட்சிகளையும், இறுதியாக, ஆன்மீக வாழ்வுக்காக உலக வாழ்க்கையைத் துறந்த ஒரு துறவியையும் சித்தார்த்தருக்கு விளக்கினார். அரண்மனைக்குள்ளேயே இருந்த சித்தார்த்தருக்கு இக்காட்சிகள் அதிர்ச்சியை அளித்தன. அரண்மனைக் காவலர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தப்பிச் சென்று சந்நியாசியாக மாறுவதற்கு சித்தார்த்தனுக்கு உதவினார்.

முதலில் எதிர்ப்பு தெரிவித்து, சித்தார்த்தன் தன்னை விட்டு விலகுவதை ஏற்க மறுத்த பிறகு, சன்னா கந்தகாவை சேணத்தில் ஏற்றி, [1] நகருக்கு வெளியே குதிரையில் ஏறி அனோமா ஆற்றின் ஓரத்தில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார். அரண்மனைக்கு திரும்பியதும், சித்தார்த்தாவின் உடைகள், ஆயுதங்கள் மற்றும் முடிகளை சன்னா, சுத்தோதர்ணாவிடம் திருப்பிக் கொடுத்தார், சன்னா அவரை விட்டு வெளியேற மறுத்ததால், சித்தார்த்தா அவரைத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினார்.

பிற்கால வாழ்க்கை[தொகு]

கௌதம புத்தராக சித்தார்த்தர் ஞானமடைந்ததும், கபிலவஸ்துவுக்குத் திரும்பியதும், சன்னா பௌத்த துறவியானார், சங்கத்தில் சேர்ந்தார். சித்தார்த்தர் ஞானமடையும் போது அவருடன் தனியாக இருந்ததால், சன்னா மற்ற துறவிகளிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டார். மேலும் இரண்டு தலைமை சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை அடிக்கடி விமர்சித்தார். புத்தரின் தொடர்ச்சியான ஆலோசனைகள் இருந்தபோதிலும், இவர் மற்ற துறவிகளை தொடர்ந்து அதிகாரம் செய்தார். பரிநிர்வாணத்திற்கு முன், புத்தர் ஆனந்திரடம் சன்னா மீது பிரம்மதாண்டத்தை சுமத்த அறிவுறுத்தினார். இதன் மூலம் மற்ற துறவிகள் இவரை புறக்கணிப்பார்கள். இதனையறிந்த சன்னா தனது நடத்தைக்காக வருந்தினார். அவர் மன்னிப்பு கேட்டு பெறுவதற்கு முன்பு மூன்று முறை மயக்கமடைந்தார். இறுதியில் அருகதர் ஆனார்.

சான்றுகள்[தொகு]

  1. "Home".


"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னா_(பௌத்தம்)&oldid=3539866" இலிருந்து மீள்விக்கப்பட்டது