மாயா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா அல்லது சாக்கிய அரசி மாயா கவுதம புத்தரின் தாயார். இவரை மகாமாயா, மாயாதேவி என்ற பெயர்களாலும் அழைப்பர். இவர் பண்டைய நேபாளத்தின் தேவதகா அரசவழியில் பிறந்தார். இவர் கபிலவத்துவின் மன்னனான சுத்தோதனரை மணந்தார். புத்தர் பிறந்த ஏழு நாட்களுக்குப் பின்னர் இவர் இறந்து விட்டார்.