புத்த காயா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புத்தகயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| போத்காயா | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | காயா |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | நிதிஷ் குமார்[2] |
| மக்கள் தொகை | 30 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
புத்த காயா அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி போத்காயா (ஹிந்தி: बोधगया), இந்திய மாநிலமான பீகாரின் காயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால் இது புகழ் பெற்ற இடமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் போதிமண்டா எனப்பட்ட இவ்விடத்தில் பெரிய துறவிமடக் குடியேற்றம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது மகாபோதி கோயில் என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த காயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். குஷிநகர், லும்பினி, சாரநாத் என்பன ஏனைய மூன்றும் ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.