சாந்தரக்சிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19ம் நூற்றாண்டின் சாந்திரரக்சிதரின் ஓவியம்

சாந்தரக்சிதர் (சமக்கிருதம்: शान्तरक्षित), Śāntarakṣita Tibetan: ཞི་བའཚོWylie: zhi ba tsho,[1] (725–788)[2] யோகசார-மத்தியமிகம் என்ற தத்துவப்பள்ளியை நிறுவிய அறிஞர் ஆவார்.[3] இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் ரேவல்சர் எனும் சிற்றூரில் பிறந்த சாந்தரக்சிதர் [4]நாலந்தா பல்கலைகழகத்தில் பௌத்த சாத்திரங்களை படித்தவர். இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற பௌத்த சமயத் தத்துவ அறிஞர் ஆவார்.

சாந்தரக்சிதர், நாகார்ஜுனர் நிறுவிய மகாயனப் பிரிவான மத்தியமிகம் பௌத்த தத்துவத்துவத்தையும், அசங்கர் நிறுவிய யோகசாரத்தின் முக்கியக் கொள்கைகளை, தர்மகீர்த்தியின் தர்க்கவியலுடன் இணைத்து, யோகசார-மத்தியமிகம் என்ற புதிய தத்துவப்பள்ளியை நிறுவிய பௌத்த அறிஞர் ஆவார். கி பி எட்டாம் நூற்றாண்டு முதல் கி பி பதினைந்தாம் நூற்றாண்டு வரை, திபெத்திய பௌத்த மடாலயங்கள், சாந்தரக்சிதரின் யோகசார-மத்தியமிகம் தத்துவத்தை பயின்றனர்.[5]

767ல் திபெத்தியப் பேரரசரின் வேண்டுகோளுக்கு இணங்க, சாந்தரக்சிதர் திபெத் செல்வதற்கு முன், ஆறு ஆண்டுகள் நேபாளத்தில் தங்கி திபெத்திய மொழியை கற்றார்.

பின்னர் திபெத்தில் சாந்தரக்சிதர் நீண்ட காலம் தங்கிய போது, திபெத்தில் முதல் பௌத்த மடாலயத்தை நிறுவினார். சமசுகிருதம் மற்றும் பாளி மொழியிலிருந்த பௌத்த சாத்திரங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்தார். சாந்தரக்சிதர் நோயுற்று இருந்த போது, இந்தியாவில் உள்ள பத்மசம்பவரை திபெத்திற்கு வரவழைத்துக் கொள்ளுமாறு, திபெத்திய மன்னருக்கு சாந்தரக்சிதர் அறிவுரை கூறினார்.[6]

படைப்புகள்[தொகு]

  • சாந்தரக்சிதர் நாகார்ஜுனரின் மத்தியமிகம், அசங்கரின் யோகசாரம் மற்றும் தர்மகீர்த்தியின் தருக்க பிரமாணங்களை இணைத்து மத்தியமகாலங்காரம் எனும் பௌத்த தத்துவ நூலைப் படைத்துள்ளார்.
  • இவரது மற்றொரு புகழ் பெற்ற படைப்பான தத்துவ சம்கிரகம் (உண்மையின் சுருக்கம்) எனும் நூல் திபெத்திய மொழி மற்றும் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலின் சமசுகிருத பதிப்பு 1873ல் ஜெய்சல்மேரில் உள்ள சமணக் கோயிலிருந்து, ஜோன் கிரேக் புல்லர் எனும் ஜெர்மானிய தத்துவ அறிஞரால் கண்டெடுக்கப்பட்டது [7] இச்சமசுகிருத பதிப்பு நூல், சந்திரரக்சிதரின் மாணவர் கமலசீலரின் விளக்க உரையுடன் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Murthy (1989) p.18-27, 41–43
  2. stanford.edu: Śāntarakṣita (Stanford Encyclopedia of Philosophy)
  3. [1]
  4. Omacanda Hāṇḍā, Buddhist Western Himalaya: A politico-religious history, Indus Publishing, p. 314
  5. Shantarakshita & Ju Mipham (2005) pp.5–6, 12–16
  6. "Banerjee, 1982 p. 3" (PDF). Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-11-18.
  7. Georg Bühler

ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தரக்சிதர்&oldid=3553402" இலிருந்து மீள்விக்கப்பட்டது