கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருநாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருதினை சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிச் சிறப்பிக்கிறது. சங்கீத என்பதற்கு இசை எனவும், கலாநிதி என்பதற்கு கலையின் பெருஞ்செல்வம் (புதையல்) எனவும் பொருள். ஆக, சங்கீத கலாநிதி என்பதற்கு 'கருநாடக இசைக் கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள். கருநாடக இசையுலகில் மிக உயர்ந்த விருதாக இவ்விருது அனைவராலும் கருதப்படுகிறது.
சங்கீத கலாநிதி விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் [தொகு]
1929 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இவ்விருதினைப் பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.
| ஆண்டு |
விருது பெற்றவர் |
களம் |
| 2012 |
திருச்சூர் வி. இராமச்சந்திரன் |
வாய்ப்பாட்டு |
| 2011 |
திருச்சி சங்கரன் |
மிருதங்கம் |
| 2010 |
பம்பாய் சகோதரிகள் (C. சரோஜா மற்றும் C. லலிதா) |
வாய்ப்பாட்டு |
| 2009 |
வலையபட்டி ஏ. ஆர். சுப்ரமணியம் |
தவில் |
| 2008 |
ஏ. கே. சி. நடராஜன் |
கிளாரினெட் |
| 2007 |
பாலக்காடு ஆர். ரகு |
மிருதங்கம் |
| 2006 |
மதுரை டி. என். சேஷகோபாலன் |
வாய்ப்பாட்டு |
| 2005 |
எம். சந்திரசேகரன் |
வயலின் |
| 2004 |
வேலூர் ஜி. ராமபத்ரன் |
மிருதங்கம் |
| 2003 |
டி. வீ. சங்கரநாராயணன் |
வாய்ப்பாட்டு |
| 2002 |
சிக்கில் சகோதரிகள் |
புல்லாங்குழல் |
| 2001 |
உமையாள்புரம் கே. சிவராமன் |
மிருதங்கம் |
| 2000 |
ஆர். வேதவல்லி |
வாய்ப்பாட்டு |
| 1999 |
டி. கே. கோவிந்த ராவ் |
வாய்ப்பாட்டு |
| 1998 |
சேக் சின்ன மௌலானா |
நாதசுவரம் |
| 1997 |
எம். எஸ். கோபாலகிருஷ்ணன் |
வயலின் |
| 1996 |
டாக்டர் என். ரமணி |
புல்லாங்குழல் |
| 1995 |
ஆர். கே. ஸ்ரீகண்டன் |
வாய்ப்பாட்டு |
| 1994 |
டி. கே. மூர்த்தி |
மிருதங்கம் |
| 1993 |
மணி கிருஷ்ணசுவாமி |
வாய்ப்பாட்டு |
| 1992 |
தஞ்சை கே. பி. சிவானந்தம் |
|
| 1991 |
நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி |
வாய்ப்பாட்டு |
| 1990 |
டி. கே. ஜெயராமன் |
வாய்ப்பாட்டு |
| 1989 |
மகாராஜபுரம் சந்தானம் |
வாய்ப்பாட்டு |
| 1988 |
டி. விஸ்வநாதன் |
|
| 1987 |
பி. ராஜம் ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1986 |
கே. வீ. நாராயணசுவாமி |
வாய்ப்பாட்டு |
| 1985 |
டாக்டர் எஸ். ராமநாதன் |
வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர் |
| 1984 |
மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார் |
வீணை |
| 1983 |
டாக்டர் எஸ்.பினகபாணி |
வாய்ப்பாட்டு |
| 1982 |
எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் |
ஹரிகதை (கதாகாலச்சேபம்) |
| 1981 |
டி. எம். தியாகராஜன் |
வாய்ப்பாட்டு |
| 1980 |
டி. என். கிருஷ்ணன் |
வயலின் |
| 1979 |
கே. எஸ். நாராயணசுவாமி |
வீணை |
| 1978 |
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா |
வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர் |
| 1977 |
எம். எல். வசந்தகுமாரி |
வாய்ப்பாட்டு |
| 1976 |
டி. பிருந்தா |
வாய்ப்பாட்டு |
| 1975 |
வழங்கப்படவில்லை |
|
| 1974 |
ஆர். ஆனந்தகிருஷ்ணா சர்மா |
வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர் |
| 1973 |
டி. பாலசரஸ்வதி |
பரதநாட்டியம் |
| 1972 |
பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி |
இசை ஆராச்சியாளர் |
| 1971 |
பாபநாசம் சிவன் |
வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர் |
| 1970 |
தா. கி. பட்டம்மாள் |
வாய்ப்பாட்டு |
| 1969 |
மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் |
வாய்ப்பாட்டு |
| 1968 |
ம. ச. சுப்புலட்சுமி |
வாய்ப்பாட்டு |
| 1967 |
வழங்கப்படவில்லை |
|
| 1966 |
பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் |
மிருதங்கம் |
| 1965 |
ஆலத்தூர் ஸ்ரீனிவாச ஐயர் (ஆலத்தூர் சகோதரர்கள்) |
வாய்ப்பாட்டு |
| 1964 |
ஆலத்தூர் சிவசுப்ரமணிய ஐயர் (ஆலத்தூர் சகோதரர்கள்) |
வாய்ப்பாட்டு |
| 1963 |
பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் |
|
| 1962 |
பாப்பா கே. எஸ். வெங்கடராமையா |
வயலின் |
| 1961 |
திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை |
|
| 1960 |
டி. கே. ஜெயராம ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1959 |
மதுரை மணி ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1958 |
ஜி. என். பாலசுப்பிரமணியம் |
வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர் |
| 1957 |
டி. சௌடையா |
வயலின் |
| 1956 |
திருவிழிமிழலை சுப்ரமணிய பிள்ளை |
நாதசுவரம் |
| 1955 |
மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர் |
வயலின் |
| 1954 |
சித்தூர் சுப்ரமணிய பிள்ளை |
வாய்ப்பாட்டு |
| 1953 |
திருபாம்புரம் என். சுவாமிநாத பிள்ளை |
புல்லாங்குழல் |
| 1952 |
காரைக்குடி சாம்பசிவ ஐயர் |
வீணை |
| 1951 |
செம்பை வைத்தியநாத பாகவதர் |
வாய்ப்பாட்டு |
| 1950 |
கரூர் சின்னசுவாமி ஐயர் |
வயலின் |
| 1949 |
முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1948 |
கும்பகோணம் ராஜ மாணிக்கம் பிள்ளை |
வயலின் |
| 1947 |
செம்மங்குடி சீனிவாச ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1946 |
வழங்கப்படவில்லை |
|
| 1945 |
மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1944 |
டி. எல். வெங்கட்ராம ஐயர் |
இசை ஆராய்ச்சியாளர் |
| 1943 |
பல்லடம் சஞ்சீவ ராவ் |
புல்லாங்குழல் |
| 1942 |
மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர் |
வாய்ப்பாட்டு |
| 1941 |
பேராசிரியர் துவாரம் வெங்கடசுவாமி நாயுடு |
வயலின் |
| 1940 |
கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் |
ஹரிகதை (கதாகாலச்சேபம்), இசையமைப்பாளர் |
| 1939 |
முசிறி சுப்ரமணிய ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1938 |
அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் |
வாய்ப்பாட்டு |
| 1937 |
மாங்குடி சிதம்பர பாகவதர் |
ஹரிகதை (கதாகாலச்சேபம்) |
| 1936 |
உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1935 |
மைசூர் வாசுதேவாச்சாரியார் |
வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர் |
| 1934 |
டி. எஸ். சபேச ஐயர் |
வாய்ப்பாட்டு |
| 1933 |
கே. பொன்னையா பிள்ளை |
இசையமைப்பாளர், இசை ஆசிரியர் |
| 1932 |
டைகர் வரதாச்சாரியார் |
வாய்ப்பாட்டு, இசையமைப்பாளர், இசை ஆசிரியர் |
| 1931 |
பழமனேரி சுவாமிநாத ஐயர் |
வாய்ப்பாட்டு, வயலின் |
| 1930 |
ஹரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர் |
இசையமைப்பாளர், வாய்ப்பாட்டு, ஹரிகதை (கதாகாலச்சேபம்), கோட்டுவாத்தியம் |
| 1929 |
டி. வீ. சுப்பா ராவ், டி. எஸ். சபேச ஐயர், எம். எஸ். ராமசுவாமி ஐயர் |
இசை ஆராய்ச்சியாளர் |
வெளியிணைப்பு: [தொகு]