திருச்சி சங்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சி சங்கரன் (பிறப்பு: ஜூலை 27, 1942) தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் ஆவார். இவர் கஞ்சிராவும் வாசிக்கக்கூடியவர். இவர் பாடலாசிரியராகவும், இசையாசிரியராகவும் விளங்குகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவர் தனது உடன்பிறவா சகோதரர் பி. ஏ. வெங்கட்ராமனிடம் இசைப் பயிற்சியை தொடங்கினார். பிறகு பழனி சுப்பிரமணிய பிள்ளையிடம் மிருதங்கம் கற்றார். திருச்சிராப்பள்ளியில் ஆலத்தூர் சகோதரர்கள் பாடிய நிகழ்ச்சியில் தனது 13 ஆம் வயதில் அரங்கேறினார் திருச்சி சங்கரன்.

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:

மேலும் புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கம் நிகழ்த்திய தனி வாத்திய இசை நிகழ்ச்சிகளில் திருச்சி சங்கரன், பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்.

இசை பயிற்றுவித்தல்[தொகு]

கனடாவின் தலைநகர் டொரண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக இருக்கிறார்.

பல்வேறு பட்டறைகளையும் உரைகளையும் கீழ்காணும் கல்வியகங்களில் நிகழ்த்தியுள்ளார்:

  • வேச்லேயன் பல்கலைக்கழகம்
  • பெர்க்லி இசைக் கல்லூரி
  • மிசிகன் பல்கலைக்கழகம்
  • கலிபோர்னியா கலை நிலையம்
  • இலினோயிஸ் பல்கலைக்கழகம்
  • மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம்
  • கார்நெல் பல்கலைக்கழகம்
  • தல் கௌசி பல்கலைக்கழகம்

இவர் கலாலயம் எனும் அமைப்பை உருவாக்கி, அதன் இயக்குனராகவும் இருக்கிறார். 'புதுக்கோட்டை பாணி' தாள வாத்திய இசைக்கென உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக கலாலயம் உள்ளது. தெற்காசியா மற்றும் வட அமெரிக்காவைச் சார்ந்த மாணவர் பலருக்கு மிருதங்கம், கஞ்சிரா, கடம், தபேலா மற்றும் மேற்கத்திய தாள வாத்திய இசைக்கருவிகளை கற்றுத் தந்து வருகிறார்.

எழுதியுள்ள புத்தகங்கள்[தொகு]

  • 1977 - The Art of drumming: South Indian Mridangam: பிரைவேட் எடிசன், டொரண்டோ
  • 1994 - The Rhythmic Principles & Practice of South Indian Drumming: லலித் பதிப்பகத்தார், டொரண்டோ
  • 2003 - Frame Drums of South India: A Handbook on Solkattu (Rhythm Solfege): லலித் பதிப்பகத்தார், டொரண்டோ

விருதுகள்[தொகு]

  • சங்கீத கலாநிதி விருது, 2011; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  • வாணி கலா சுதாகரா விருது, 2013[1] ; வழங்கியது: தியாக பிரம்ம ஞான சபா.
  • சங்கீத சூடாமணி விருது (ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை)
  • விஸ்வ கலா பாரதி (பாரத் கலாச்சார், சென்னை)
  • நாத லய பிரம்மம் (பாரதி வித்யா பவன், திருச்சி)
  • மிருதங்க கலா சிரோன்மணி (Percussive Arts Centre, பெங்களூர்)
  • ஆஸ்தான வித்வான் (காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்)
  • தாள கலை அரசு (பாரதி கலா மன்றம், டொரோண்டோ)
  • லய சிகாமணி (பைரவி, கிளிவ்லேன்ட்)
  • தாள வாத்ய பிரகாச (CMANA , நியூயார்க்)
  • OCUFA பயிற்றுவிப்பு விருது (Ontario Confederation of University Faculty Association, கனடா)

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சி_சங்கரன்&oldid=3503742" இலிருந்து மீள்விக்கப்பட்டது