பம்பாய் சகோதரிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா மற்றும் சி. லலிதா ஆகியோர் கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர். இவ்விருவரும் இசை மேடைகளில் இணைந்து பாடுகிறார்கள்.
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
பம்பாய் சகோதரிகள், அப்போதைய பம்பாயில் பிறந்தவர்கள். இவர்கள் தமது இசைப் பயிற்சியை முசிறி சுப்ரமணிய ஐயர் மற்றும் டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இருந்து பெற்றனர்.
தொழில் வாழ்க்கை [தொகு]
1963 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் இச்சகோதரிகள், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமசுகிருதம், இந்தி மற்றும் மராத்திய மொழிகளில் பாடல்களை பாடி வருகின்றனர்.
விருதுகள் [தொகு]
- இசைப்பேரறிஞர் விருது,2006 ; வழங்கியது:தமிழ் இசைச் சங்கம்
- ஆஸ்தான விதுசி; வழங்கியது: காஞ்சி சங்கர மடம்
- சங்கீத கலாநிதி விருது,2010 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை