ஆர். வேதவல்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். வேதவல்லி (பி. 1935) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
[தொகு] ஆரம்பகால வாழ்க்கை
ஆர். வேதவல்லி தமிழ்நாட்டின் மன்னார்குடியில் ராமசாமி ஐயங்காருக்கும் பத்மாசனி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார்.
[தொகு] தொழில் வாழ்க்கை
தனது இளம்வயது முதல் பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். அகில இந்திய வானொலியின் 'பழமைவாய்ந்த இசை'க்குரிய முதற்பரிசினை இவர் பெற்றுள்ளார். இப்பரிசு அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. கருநாடக இசையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 'சங்கீத கலாநிதி' எனும் விருது இவருக்கு 2000 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.