கறையான்
| கறையான் புதைப்படிவ காலம்: 228 - 0 Ma (20கோடி ஆண்டுகளுக்கு முன்) கிரீத்தேசியக் காலம்-இக்காலம் |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பல்வகைக் கறையான்கள்
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| கறையானின் குடும்பங்கள் | ||||||||||||||
|
Mastotermitidae 1 சி
Termopsidae 4-5பே, 15-20சி
Hodotermitidae 3பே, 19சி
en:Mastotermitidae: 1 சி |
பொருளடக்கம் |
தோற்றம் [தொகு]
கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும், இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை, அதற்குரியத் தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர் உறுதிசெய்கின்றன. கறையான்களை[கு 1], வெள்ளை எறும்புகள் [கு 2] என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே, நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை, தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நுட்பங்களை , நாம் அவசியம் அறிய வேண்டும்.
உயிரின வேறுபாடு: இவை எறும்புகளைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி ஆராய்கின்ற போது கறையான்கள், எறும்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன[1]. எறும்புகளைச் சமமற்ற இறகிகள் என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர்.
உயிரின வகைப்பாடு:கறையான்கள் முதிர்வடையும் போது, ஈசல்கள் எனப்படுகின்றன. ஈசல்களின் முன்பின் இறக்கைகள்[கு 3], வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாக[கு 4] இருப்பதால், இவைகளைச் சமஇறகிகள் [2] என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர்.
வாழிடம் [தொகு]
கறையான்கள் வாழும் சூழ்நிலைக்கேற்ப, தமது இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. எனவே, மண்ணின் கீழ், மண்ணின் மேல், மரக்கிளைகளில் என வேறுபட்டு வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில், ஏதேனும் ஒன்றினைத்தேர்ந்தெடுத்து, அதற்கு தகுந்தபடி தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. அவைகளின் நிலவசிப்பிடத்தினைப் புற்று என்பர். இப்புற்றுகள், பல்வேறு காரணிகளால் மாறுபட்டு, பலவிதமாக உருவாகின்றன.
புற்றுக்காரணிகள்: கிடைக்கும் உணவு, மண்ணின் தன்மை, இயற்கைச்சீற்றம் ஆகியவற்றால் புற்று/கூடு மாறுபடுகிறது. இவற்றின் அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சம இறகிகள் என்ற கறையான் வரிசையில், 7 கறையான் குடும்பங்கள் உள்ளன. அவை, இப்பக்கத்தின் வலமேலுள்ள, அறிவியல் வகைப்பாட்டுக் கட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு கறையான் குடும்பமும் முறையான பேரினங்களையும், சிற்றினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. கறையான்களில், ஏறத்தாழ 275 கறையான் பேரினங்களும், அவற்றிற்குரிய 2750 கறையான் சிற்றினங்களும் உள்ளன.
- பல புற்றுகள், அடுத்தடுத்து அமைந்து, பரந்த நிலப்பரப்பில் கறையான் திட்டுகளாகவும் இருக்கிறது.
மெக்சிகோவின் மரக்கூடு [தொகு]
- கறையான்களின் வசிப்பிடம், மரக்கிளைகளில் இருந்தால் கூடு என்று பெயர். இக்கூட்டினுள் பல அறைகள் இருக்கும். இராணிக்கு தனி அறை, உணவு சேமிக்கும் அறை, தண்ணீர் அறை, குஞ்சுகளுக்கான அறை என தனித்தனித் தேவைகளுக்கு, ஒவ்வொரு அறையாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒட்டு மொத்தக் கூடும், மரத்தின் கீழுள்ள நிலத்துடன் தரைத்தொடர்குழாய் மூலம் இணைக்கப் பட்டிருக்கும். அக்குழாயும் மூடிய நிலையிலேயே அமைந்திருக்கிறது. இதனால் காற்று, மழை, பறவைகள் போன்றவற்றின் இன்னல்களிடமிருந்து, பாதுகாப்புக் கிடைக்கிறது.
பன்னாட்டுப் புற்றமைவுகள் [தொகு]
- ஒவ்வொரு நாட்டிலும் அமைந்துள்ள புற்றுகள், ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்றன. அங்குள்ள மண்ணின் தன்மை, நிலவும் தட்பவெப்பம், மழைப் பொழிவு, கிடைக்கும் உணவு, புற்றிற்க்கு பிற உயிரிகளால் விளையும் ஆபத்துகள் போன்றவைகள், புற்றின் உயரம், நிறம் மற்றும் அமைப்பினைக் கட்டுபடுத்தும் காரணிகளாக விளங்குகின்றன.
|
புற்றின் அமைப்பு [தொகு]
பணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். ஒரு புற்றில்,
புற்று என்பது நம் கண் பார்வைக்குத் தெரியும், மண்ணிற்க்கு மேலே உள்ள அடுக்கு ஆகும். நிலத்திற்க்கு மேலே தெரியும் உயரத்திற்கு, நிலத்திற்க்குக் கீழே உள்ள அடுக்கும் ஆழமாக இருக்கும். முதலில் அடித்தளம் அமைத்து, அதற்கு மேலே சிறு சிறு வாய்க்கால்களை [கு 7] பணிக்கறையான்கள் அமைக்கும். அதற்கும் மேலே பூஞ்சைத் தோட்டங்களை அமைக்கும்.
இந்த பூஞ்சைகள், கறையான்களின் உணவுப் பொருட்களை மட்கச்செய்து, கரையான்கள் உண்ண ஏதுவாக மாற்றும். இதற்குக் கைம்மாறாக, கறையான்கள் தங்களின் சுரப்பினால் புற்றில் வேறு எந்த நுண்ணுயிரியும், இந்த பூஞ்சைக்குப் போட்டியாக வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். இந்த பூஞ்சைகள்தான், மழைக்காலத்தில் காளான்களாக, புற்றிலிருந்து முளைக்கும்.
இந்த பூஞ்சைத் தோட்டங்கள், நிலமட்ட அளவிலேயே இருக்கும்.அதற்கும் மேலே, மண்ணாலான புற்று இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது திறந்த துளைகளுடன் இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
புற்றின் காற்றோட்டம் [தொகு]
புற்றின் நடுவில், ஒரு உள்ளீடற்ற குழாய் [கு 8] புற்றின் உச்சி வரை நீண்டிருக்கும். புற்றின் மண்சுவரில், மேற்பரப்பிலிருந்து 2 செ.மீ.க்குள், நம் உடலின் இரத்த நாளங்களைப் போன்று, எண்ணற்ற அடிப்பரப்புக் குழாய்கள் [கு 9] இருக்கும். இவை இரண்டையும் இணைக்கும் பக்கவாட்டு இணைப்புக்குழாய் [கு 10] இருக்கும்.
- திறந்த நிலையிலிருக்கும் புற்றில், அடிப்பரப்புக் குழாய்கள், ஏற்கனவே புற்றிலிருக்கும் திறந்தத் துளைகளில் முடியும்.
- மூடிய நிலையிலிருக்கும் புற்றில், அடிப்பரப்புக் குழாய்கள், நுண்துளைகளில் முடியும்.
இவ்விதங்களில் அடிப்பரப்புக்குழாய்கள், உரிய துளைகள் மூலம், பூமியின் தட்பவெப்பநிலையுடன் தொடர்பு கொள்கிறது.
காற்றுப்பரிமாற்றம்: கரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன, ஒருவித மிதவை உந்து விசைகளை [கு 11] உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று, உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.
அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன், கரியமில வாயு, வெப்பம், நீராவி ஆகியன, அடிப்பரப்புக் குழாய் வழியாக, புற்றின் வெளிக்காற்றுடன், வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்றுக்குள், உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று, புற்றினுள் சென்று, புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து, புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.
இக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால், புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது. அதே சமயத்தில், பாம்பு போன்ற பிற உயிரிகளுக்கு அழைப்பிதழாகவும் அமைந்து, கறையான்களுக்கு வாழ்விட இன்னல்களை ஏற்படுத்துகிறது.
வளரியல்பு [தொகு]
கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல், கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 5,00,000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை, நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;-
| பெயர் | வேலை | குறிப்பு | |
|---|---|---|---|
| 1. | இராணிக்கறையான் [கு 12] | கறையான்களை வழிநடத்துதல் | குட்டி போடுதல் |
| 2. | ஆண்கறையான் | இனக்கலவி புரிதல் | எந்த வேலையும் செய்யாது |
| 3. | வாகைக்கறையான் [கு 13] | பாதுகாப்புப் பணி | குருடு; மலடு; ஆண், பெண் உண்டு;
1-2ஆண்டு வாழும். |
| 4. | பணிக்கறையான் [கு 14] | உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல் | குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும். |
-
துப்பிக்கறையான்[1]
இராணிக்கறையான் [தொகு]
ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு, இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். [கு 15] புற்றின் ஆரம்ப காலத்தில், இராணி இடத்தை தேர்ந்தெடுத்து, சிறுகுழிப் பறித்து முட்டைகள் இடும். இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும், ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் எண்ணிக்கைக் குறையும் போது, அவற்றிற்கே உரிய நாற்றம் குறையும். இதனை அறிந்த இராணிக்கறையான், அவைகளுக்கான முட்டைகளை வைத்து அவ்வெண்ணிக்கையை பெருக்கச் செய்யும். வாழிடம் சரியில்லாத போது, இராணிக்கறையான் இடப்பெயர்ச்சி செய்ய, மற்ற கறையான்களுக்குக் கட்டளையிடும். முட்டையிடும் பெரிய இராணிக்கறையான், எப்பொழுதும் தனது நகரும் தன்மையை இழப்பதில்லை. ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும்.முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்.
ஆண்கறையான்கள்:சில சிற்றினங்களில் மட்டுமே, ஆண் கறையான் இறந்தாலும், மற்றொரு ஆண் கறையான், இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம்செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை, ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன், குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை, பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால், அவை இறந்து விடும்.
இவற்றுள் வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கரையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பினை[கு 16] உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.
வாகைக்கறையான்களுள் இரண்டு வகை உண்டு.
- பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். [கு 17] இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.
- துப்பிக்கறையான் [கு 18] - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.
பணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்.
ஈசல்கள்: மழைக்காலத்தில், வயது முதிர்ந்த கறையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே, அவை இறக்கை முளைத்து, ஈசல்களாக வெளியில் வந்து, கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து, ஒரே நாளில் உயிரை விட்டுவிடும். அதனால், கறையான்களின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படுகிறது.
உணவுச் செரிமானம் [தொகு]
கறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது.தாவரங்களிலுள்ள செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி கரையான்களுக்கு இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக, Protozoa க்கள் கரையான்களுக்கு, செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்.
- மாவீரன் நெப்போலியனின் போர்க்கப்பல்களுள் ஒன்று, கரையான்களால் அரிக்கப்பட்டு வீணானது என்பது வரலாறு.
|
|
குறிப்புகள் [தொகு]
- ↑ Termites - கறையான்கள்
- ↑ White ants - வெள்ளை எறும்புகள்
- ↑ ptera - இறக்கை
- ↑ iso - ஒரே மாதிரி = சம
- ↑ பூமிக்குக் கீழே உள்ள அடுக்கு - Underground chamber
- ↑ பூமிக்கு மேலே உள்ள அடுக்கு - Mound
- ↑ சிறு சிறு வாய்க்கால்கள் = Galleries
- ↑ உள்ளீடற்ற குழாய் = Central chimney
- ↑ அடிப்பரப்புக் குழாய் = Surface conduit
- ↑ பக்கவாட்டு இணைப்புக் குழாய் = Lateral connectives
- ↑ மிதவை உந்து விசை = Buoyant forces
- ↑ இராணிக்கறையான் - Queen
- ↑ வாகைக்கறையான் = இராணுவக்கறையான் = போர்கறையான் = Soldiers
- ↑ பணிக்கறையான் = வேலைக்காரக்கறையான் = Workers
- ↑ இது Physogastry எனப்படும்.
- ↑ இராணி ஃபெரமோன் = Queen pheromone
- ↑ அரிவாள் கறையான் - Mandibulate Soldiers
- ↑ துப்பிக்கறையான் - Nasute Soldiers
மேற்கோள்கள் [தொகு]
- ↑ எறும்பு X கறையான் = வரைப்படத்துடனான வேறுபாடுகள்
- ↑ சமஇறகிகள் (Isoptera), The University of Arizona Library.2009-07-25
இதர இணைய இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Isoptera தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
காப்புரிமைப் பெற்றவைகள்
- 1976ஆம் ஆண்டு, இடான்சானியா(Tanzania) நாட்டின், 5மீட்டர்களுள்ள கறையான் புற்றின் நிழற்படம்.
- வாயினால் பரிமாற்றம் செய்கின்ற, இரண்டு வேறுபட்டக் கறையான்களின் நிழற்படம்.
- உலகக் கறையான்கள் குறித்த ஆங்கில மொழியிலமைந்த இணைய நூல்
- அரியப் படங்களுள்ள இணையம்