கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கருக்கலைப்பு என்பது முளையத்தை (embryo) அல்லது முதிர்கருவைக் (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படுவது உண்டு. இது பொதுவாகக் கருச்சிதைவு எனப்படும்.

ஏதேனும் ஒரு மருத்துவக்காரணம் கருதி (தாயின் நலம் கருதி) உண்டாக்கப்படும் கருக்கலைப்பு சிகிச்சைக் கருக்கலைப்பு எனப்படும். பிற காரணங்களுக்காக செய்யப்படும் கருக்கலைப்பு தேர்வுக் கருக்கலைப்பு எனப்படும். பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது. வேலையில் ஏற்படும் குழப்பங்கள், படிப்பில் ஏற்படக் கூடிய இடைஞ்சல்கள், நிரந்தரமற்ற பொருளாதார நிலை, உறவுகளில் உறுதியற்ற தன்மை போன்றனவே பொதுவாக இவ்வகையான தூண்டப்படும் கருக்கலைப்புக்கு காரணமாகின்றன[1][2]. ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது கர்ப்பம் தரித்திருந்தாலும், இவ்வாறான கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

உலக அளவில், ஆண்டுக்கு சுமார் 4.2 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 2.2 கோடி மட்டுமே பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகும். மற்றவை பதுகாப்பற்ற கருக்கலைப்புகள் ஆகும். உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர்.[3]

கருக்கலைப்பு என்பது நீண்ட வரலாறுவரலாற்றை உடையது. முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், உடற்காயங்களை உண்டாக்குதல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும். தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுதும் நடைபெறுகின்றன. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்குச் சமமானது என்றும், அதனை அழிப்பது கொலைக்குச் சமமானது என்றும் வாதிடுகின்றனர். கருவை வளரவிடுவதும், அழிப்பதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமை என்கின்றனர் கருக்கலைப்பு ஆதரவாளர்கள்.

பொருளடக்கம்

[தொகு] கருக்கலைப்பின் வகைகள்

[தொகு] தான்தோன்று கருச்சிதைவு

கர்ப்ப காலத்தின் முதல் 20 வாரங்களுக்குள் (இந்த கால வரையறை நாட்டிற்கு நாடு வேறுபடக்கூடியது)[4] தானாகவே கருவோ அல்லது முளையமோ அல்லது முதிர்கருவோ கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுவது தான்தோன்றிக் கருச்சிதைவு எனப்படும்.

  • காரணங்கள்:
  1. தாய்க்கு திடீர் எதிர்பாரா அடி
  2. கருவணுவின் நிறப்புரியில் (நிறமூர்த்தங்களில்) ஏற்படும் கோளாறுகள்
  3. சூழலிய காரணிகள்
  4. மதுமேக நீரிழிவு நோய்
  5. வளரூக்கியில் ஏற்படும் கோளாறுகள்
  6. கருப்பை அமைப்புக் கோளாறுகள்
  7. தொற்றுநோய்கள்
  8. இரத்தக்குழல்மய நோய்கள் (எ.கா. மண்டலிய செங்கரடு)

37 வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் குழந்தைகள் முற்றாக்குழந்தை அல்லது குறைபிரசவக் குழந்தை எனப்படும். 22 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையினுள் இறக்கும் குழந்தை மற்றும் பிறவியின் பொழுது இறந்த குழந்தை செத்தபிறவி எனப்படும். 61.9% தான்தோன்றி கருச்சிதைவு 12 வாரங்களுக்கு முன்னர் நடப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் 91.7% தான்தோன்றி கருச்சிதைவுகள் கர்ப்பிணித்தாய் அறியாமலேயே நிகழ்கின்றன.[5] இவை தாழ் புலன்மருத்துவ கருச்சிதைவுகள் எனப்படும்.

[தொகு] தூண்டற் கருச்சிதைவு

கருச்சிதைவினை பல வகையில் தூண்ட முடியும். கர்ப்ப காலத்தைப் பொறுத்தும், கருவின் அளவைப் பொறுத்தும், அந்தந்த நாட்டுச் சட்டங்கள் மற்றும் தனிநபர் விருப்பம் பொறுத்தும் சரியான முறை தேர்வு செய்யப்படும்.

  • சிகிச்சைக்கருக்கலைப்பு எனப்படுவது,[6]
    1. கர்பிணிப்பெண்ணின் உயிர்காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுவது.
    2. கர்பிணிப்பெண்ணின் உடல் மற்றும் மன நலம் கருதி மேற்கொள்ளப்படுவது.
    3. உயிர்கொல்லும் மற்றும் முடங்கச்செய்யும் பிறவி நோய்களுடன் பிறக்கப்போகும் குழந்தைகளைத் தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுவது.
    4. பல்பிறவிச்சூழில் தாயின் நலன் கருதி குறிப்பிட்ட முதிர்கருவைச் சிதைக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுவது.

[தொகு] கருக்கலைப்பு வழிகள்

[தொகு] மருத்துவ முறைகள்

[தொகு] அறுவை முறைகள்

A vacuum aspiration abortion at eight weeks gestational age (six weeks after fertilization).
1: Amniotic sac
2: Embryo
3: Uterine lining
4: Speculum
5: Vacurette
6: Attached to a suction pump

பொதுவாக கருத்தரித்து 12 கிழமைக்குள்ளாக, உறிஞ்சுதல் முறையிலான கருக்கலைப்பே அறுவைச் சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது[7]. மின்சாரக் கருவிகள் மூலமாகவோ, அல்லது மின்சாப்ர பாவனையற்ற உபகரணங்களாலோ இவ்வாறான உறிஞ்சல் முறையில் முளையம் அல்லது முதிர்கரு, தொப்புள்கொடி என்பன அகற்றப்படுகிறது.

முளைய விருத்தியின் நிலையைப் பொறுத்து இதனைச் செய்யும் முறையில் வேறுபாடு காணப்படும். கருத்தரிப்பின் மிகவும் ஆரம்ப நிலையாயின் கருப்பை வாய்ப்பகுதியை விரிவாக்கம் செய்யாமலே எளிய உறிஞ்சல் முறையால் கருக்கலைப்பு செய்ய முடியும். பிந்திய நிலையாயின் கருப்பை வாய்ப் பகுதியின் விரிவாக்கம் அவசியமாகிறது. முதிர்கரு வளர்ச்சி 15 கிழமைகளைத் தாண்டி செல்லுமாயின் 26 கிழமைகள் வரை பொதுவாகக் கருக்கலைப்பு செய்யப்படும் முறை விரிவாக்கமும், வெளியேற்றமும் (D&E - Dilation and Evacuation) என அழைக்கப்படுகிறது. அந்நிலையில் கருப்பை வாய்ப்பகுதி விரிக்கப்பட்டும், கருப்பையினுள் இருக்கும் உள்ளடக்கங்கள் யாவும் சில அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் மூலமும், உறிஞ்சல் கருவிகள் மூலமும் அகற்றப்பட்டு, கருப்பை வெறுமையாக்கப்படுகிறது. (D&C - Dilation and curettage) என்னும் முறை பல்வேறு காரணங்களை முன்னிட்டு செய்யப்படும் கருக்கலைப்பு முறையாகும். இது புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்கின்றனவா என்று சோதிக்கவும், அசாதாரண குருதிப்போக்கு போன்றவற்றிற்கான காரணங்களைச் சோதனை செய்து அறியவும், கருக்கலைப்பில் அல்லது தன்னிச்சையான கருச்சிதைவுக்குப் பின்னர் கருப்பையை முற்றாகச் சுத்தம் செய்யவும் பயன்படுகின்றது. இலகுவான முறைகளால் கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையிலேயே இம்முறையை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது[8].

[தொகு] மற்றவை

[தொகு] மேற்கோள்கள்

  1. Bankole, Akinrinola, Singh, Susheela, & Haas, Taylor. (1998). Reasons Why Women Have Induced Abortions: Evidence from 27 Countries. International Family Planning Perspectives, 24 (3), 117–127 & 152. Retrieved 2006-01-18.
  2. Finer, Lawrence B., Frohwirth, Lori F., Dauphinee, Lindsay A., Singh, Shusheela, & Moore, Ann M. (2005). Reasons U.S. women have abortions: quantative and qualitative perspectives. Perspectives on Sexual and Reproductive Health, 37 (3), 110–8. Retrieved 2006-01-18.
  3. Shah I, Ahman E (December 2009). "Unsafe abortion: global and regional incidence, trends, consequences, and challenges". J Obstet Gynaecol Can 31 (12): 1149–58.
  4. Department of Reproductive Health and Research (2003). "Managing Complications in Pregnancy and Childbirth – A guide for midwives and doctors". World Health Organization. http://www.who.int/reproductive-health/impac/Symptoms/Vaginal_bleeding_early_S7_S16.html. Retrieved 2009-04-07. NB: This definition is subject to regional differences.
  5. Edmonds DK, Lindsay KS, Miller JF, Williamson E, Wood PJ (1982). "Early embryonic mortality in women". Fertil. Steril. 38 (4): 447–453.
  6. Roche, Natalie E. (2004). Therapeutic Abortion. Retrieved 2006-03-08.
  7. Healthwise (2004). "Manual and vacuum aspiration for abortion". WebMD. பார்த்த நாள் 2008-12-05.
  8. World Health Organization (2003). "Dilatation and curettage". Managing Complications in Pregnancy and Childbirth: A Guide for Midwives and Doctors. Geneva: World Health Organization. ISBN 92-4-154587-9. OCLC 181845530. http://www.who.int/reproductive-health/impac/Procedures/Dilatetion_P61_P63.html. Retrieved 2008-12-05. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=கருக்கலைப்பு&oldid=1087543" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்