குருதிப்பெருக்கு
| Bleeding வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| A bleeding human finger | |
| ICD-10 | R58. |
| பாடத் தலைப்பு | D006470 |
குருதிப்பெருக்கு என்பது உடற்கலங்கள் (உடலின் உயிரணுக்கள்) பாதிக்கப்பட்டுக் குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் குருதிக் கலன்களுக்கு (குழாய்களுக்கு) வெளியே குருதி வெளியேறுவது ஆகும்[1]. இது எளிமையாக குருதி வெளியேறல் எனவும் அழைக்கப்படுகிறது. உடல்நலமுள்ள அல்லது ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட ஒருவர் எந்த மருத்துவ பிரச்சனைகளுமின்றி, தன்னுடலிலிருந்து 10-15% குருதியை இழக்கலாம் எனவும், 8-10% குருதியை குருதி வழங்கலில் (blood donation) இழக்க முடியும் எனவும் அறியப்பட்டுள்ளது.[2].
பொருளடக்கம் |
[தொகு] குருதிபெருக்கின் வகைகள்
குருதிப் பெருக்கு இரண்டு வகைப்படும்.
[தொகு] உட்புறக் குருதிப் பெருக்கு
உடற்கலங்கள் பாதிக்கப்பட்டு உடலிற்கு உள்ளே குருதிப் பெருக்கு ஏற்படுமாயின் அது உட்புறக் குருதிப் பெருக்கு எனப்படும். இதனை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளல் கடினம். உட்புறக் குருதிப் பெருக்கில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்.
- வீக்கம்
- நிறம் மாறுதல்
- வலி்
- இடம் சூடாதல்
[தொகு] வெளிப்புறக் குருதிப் பெருக்கு
உடற்கலங்கள் பாதிக்கப்பட்டுக் உடலிற்கு வெளியாக குருதி வெளியேறுமாயின் அது வெளிப்புறக் குருதிப் பெருக்கு எனப்படும். இவ்வகையான குருதிப்பெருக்கு, வாய், மூக்கு, காது, யோனி, குதம் போன்ற இயற்கையாக அமைந்த துவாரங்கள் மூலமாகவோ, அல்லது தோலில் ஏற்படும் பிளவுகள் மூலமாகவோ ஏற்படலாம். வெளிப்புறக் குருதிப் பெருக்கை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடிவதால், குருதி வெளியேறும் அளவைப் பார்த்து மதிப்பீடு செய்து, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
[தொகு] முதலுதவி
குருதிப்பெருக்கில், குருதி வெளியேறும் அளவு, குருதிபெருக்கு ஏற்பட்ட இடம் போன்ற நிலைகளைப் பொறுத்து முதலுதவி முறைகளும் வேறுபடும்.
- உடலில் பொருட்கள் ஏதேனும் குத்திய நிலையில் இருப்பின், அதிலிருந்து குருதிப்பெருக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க, அதை அகற்றாமல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- வெளிப்புறக் குருதிப்பெருக்கு இலகுவாக அடையாளம் காணப்படக் கூடியது. காயமேற்பட்ட இடத்தை உயர்த்தி வைத்திருத்தல் வேண்டும்.
- வெளிப்புறக் குருதிப்பெருக்கு அதிகளவில் இருப்பின், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- உட்புறக் குருதிப்பெருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், நோயாளி சுயநினைவுடன் இருந்தால், குருதிப்பெருக்கின் விளைவால், மயக்கத்தில் நோயாளி கீழே விழுந்துவிடாமல் தடுக்க கிடையாகப் படுக்கவைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
- நோயாளி சுயநினைவு இல்லாமல் இருப்பினும், சுவாசிப்பாராயின் முதலில் சுவாசம் தடைப்படாமல் மீளுயிர்ப்பு நிலைக்கு நோயாளியைக் கொண்டுவருதல் வேண்டும். அதன் பின்னரேயே குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
- நோயாளி சுயநினைவு இல்லாமல், சுவாசமும் இல்லாமல் இருந்தால் முதல் சுவாசம் திரும்பும் வரை மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கவேண்டும். அதன் பின்னரேயே குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.
[தொகு] அடிக்குறிப்புகள்
- ↑ "Bleeding Health Article". Healthline. பார்த்த நாள் 2007-06-18.
- ↑ "Blood Donation Information". UK National Blood Service. மூல முகவரியிலிருந்து 2007-09-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-06-18.