செத்துப் பிறப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செத்துப் பிறப்பு வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| கருப்பைக் குழந்தை இறப்பைக் கண்டறியும் மீயொலி நோட்டம் | |
| ICD-10 | P95. |
|---|---|
| MedlinePlus | 002304 |
| eMedicine | topic list |
| பாடத் தலைப்பு | D050497 |
செத்துப் பிறப்பு (stillbirth) என்பது குழந்தை பிறப்பின்போது முதிர்கருவானது தாயின் கருப்பையிலேயே இறந்து, பின் பிறத்தல் ஆகும்.[1] பொதுவாக இது குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டதாகும்.[2] அனேகமான செத்துப் பிறப்புக்கள் கருத்தரிப்பு காலம் முழுமையாக நிறைவுபெறும் நிலையிலேயே ஏற்படும்.[3]
காரணங்கள் [தொகு]
- கருப்பையில் சரியாக வளராமல் இருப்பது[4]
- குழந்தையின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் அல்லது மரபணு கோளாறு[4]
- கர்ப்பமான 24 வாரத்திற்கு பிறகு ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு. சூல்வித்தகத்திலிருந்து கருப்பை பிரியும் போது. இது சூழ்வித்தகத் தகர்வு என்றழைக்கப்படும்.[4]
- தாயுடைய உடல் நலக்குறைவு (நீரழிவு, கல்லீரல் கோளாறு போனறவை)
- குழந்தை பிறக்கும் போது தோள்பட்டை திரும்பி இருத்தல் அல்லது பிறக்கும் போது ஏற்படும் மூச்சுக்கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும்.[4] இதுமட்டுமின்றி இன்னபிற காரணங்களும் உண்டு.[5]
குறிப்புகள் [தொகு]
- ↑ R. Nguyen and A. Wilcox. "Terms in reproductive and perinatal epidemiology: 2. Perinatal terms". பார்த்த நாள் அக்டோபர் 20, 2012.
- ↑ குழந்தை பிறப்பு என்பது உயிருடன் குழந்தை பிறத்தலைக் குறிக்கும். கருச்சிதைவு என்பது முழுமையாக வளர்ச்சியடையாத கரு ஒன்று பலவித காரணங்களால் கருப்பையை விட்டு வெளியேறுவதைக் குறிக்கும்.
- ↑ "For Physicians, Nurses, and Counselors". பார்த்த நாள் அக்டோபர் 20, 2012.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "When a baby is stillborn". பார்த்த நாள் அக்டோபர் 23, 2012.
- ↑ "Stillbirth Causes". பார்த்த நாள் அக்டோபர் 23, 2012.