பேச்சு:செத்துப் பிறப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செத்துப் பிறப்பு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சான்று தேவை[தொகு]

செத்துப் பிறப்பு என்பது என்ன என்பதே இங்கு கூறப்பட்டுள்ளது. இப்படியான பொதுவான விடயங்களுக்கும் சான்றுகள் தேவையா? இந்தக் குறுங்கட்டுரையை விரிவாக்கும்போது, காப்புரிமைச் சிக்கல்கள் அல்லது கருத்துத் தவறுகள் ஏற்படும் எனக் கருதும் நிலையில் இந்த வார்ப்புருவை இணைக்கலாம் என்பது எனது கருத்து. இந்தக் கட்டுரைக்கு வேண்டுமானால் குறுங்கட்டுரைக்கான வார்ப்புருவை இணைக்கலாம். அவ்வாறில்லாமல் சான்று தேவை வார்ப்புரு இங்கு பொருத்தமற்றதாகவே எனக்குத் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 12:05, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

எந்தவொரு சான்றுமே இல்லாத கட்டுரைகளுக்கே இவ்வார்ப்புரு இடப்படுகின்றது. குறைந்த பட்சம் அடிப்படை விளக்கத்துக்கான சான்றாவது தரப்படுதல் நன்று. --மதனாகரன் (பேச்சு) 10:39, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
இங்கே ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்துக்கு சான்று தேவையில்லை என்பது எனது கருத்து. மேலும் கட்டுரை விரிவடைகையில் வேண்டுமானால் சான்றுகள் தேவைப்படும். எனவே இந்த வார்ப்புருவை இடும்போது, கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்திற்கு சான்று தேவையா என்பதைப் பார்த்துவிட்டு இட்டால் நல்லது என்று நினைக்கின்றேன். இது எனது கருத்து மட்டுமே.--கலை (பேச்சு) 11:08, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
வணக்கம், கலை. சிறியதோ பெரியதோ கருத்துகளின் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுமிடங்களில் சான்றுகள் அவசியமாகிறது; அது கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த உதவும். விரைந்து சான்றுகளை சேர்க்கவும். முடிந்த வரை தமிழில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் வேறெந்த மொழிகளில் சான்று இருந்தாலும் அதனை சேருங்கள். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:12, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நான் பொதுவாக சான்றுகளைச் சேர்த்தே எழுதுவது வழக்கம். நான் பங்களித்த கட்டுரைகளைப் பார்த்தால் தெரியும். அனேகமானவற்றில் சான்றுகள் இணைத்தே எழுதியிருக்கின்றேன். ஆனால் செத்துப் பிறப்பு என்றால் என்ன என்று சொல்வதற்குக் கூட சான்று தேவையா என்பதில்தான் சந்தேகம். உண்மையில் செத்துப் பிறப்பு என்ற சொல்லின் அர்த்தத்தை விளக்கியே அந்த சொற்றொடர் உள்ளது. அதற்கும் சான்று தேவையா என்ன? அப்படியானால் கட்டுரைகளில் வரும் ஒவ்வொரு வசனத்திற்கும் சான்று தேவை என நினைக்கின்றேன். கட்டுரைகளில் ஒவ்வொரு வசனத்துக்கும் சான்று தேவை என்ற வார்ப்புரு இணைப்பதாயிருந்தால் (இங்கே நீங்கள் இணைத்திருப்பது போன்று), கட்டுரைகளில் இந்த வார்ப்புருக்களே அதிகமாக இருக்கும் என நினைக்கின்றேன். அப்படி எழுதுவது கடினம் என்பது எனது தாழ்மையான கருத்து. இனி உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். --கலை (பேச்சு) 11:16, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கலையரசி உங்களுடைய கட்டுரைகளை விக்கியில் நான் பங்களிக்கும் முன்பிருந்தே படித்திருக்கிறேன். சான்றுகள் இல்லாத அல்லது சான்று சேர்க்கப்படாத கட்டுரைகளைப் பற்றியே எனது கருத்தை எடுத்துரைக்கிறேன். ஒவ்வொரு வசனத்திற்கு சான்று தேவை என்று சொல்லவில்லை. அது கடினமென்று எனக்குத் தெரியும். ஆனால் மூன்று வரிக்கட்டுரையில் மிகப்பெரிய கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். ஆனால் அதற்கான ஆதாரம் அல்லது மேற்கோள் இவற்றில் எதையுமே நீங்கள் கொடுக்கவில்லை என்பதினையும் நினைவில் கொள்ளுங்கள். கடுமையான பணி அல்ல இது. ஒரு கட்டுரை எழுதுபவருக்கு அக்கட்டுரை உள்ள கருத்துகளுக்கு ஆதாரம் சேர்ப்பது மிக எளிமையான ஒன்று. அதனால் தான் இவ்வார்ப்புரு இடுவது முக்கியமாகிறது. சில நாட்களில் நானே பல கட்டுரைகளில் ஆதாரங்களைத் தேடிச் சேர்த்திருக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு ஆதாரம் எவ்வாறு விரைந்து சேர்ப்பது பற்றி தெரிந்து கொள்ள நேரமும் ஆர்வமும் இருந்தால் என்னை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும். நான் என்னால் முடிந்த வரை உதவுகிறேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:34, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
சான்றுகளே இல்லாத கட்டுரையில் சான்றைச் சேர்க்குமாறு கேட்பதற்கு ஆங்கில விக்கியில் ஒரு வார்ப்புரு உண்டு. ஆனால், தற்போது இங்கே பயன்படுத்தியுள்ள வார்ப்புரு நடுநிலைச் சிக்கல் எழக்கூடிய கட்டுரைக்கானது. முதல்வரியில் செத்துப் பிறப்பு என்பது கருச்சிதைவு, கருக்கலைப்பு ஆகியவற்றில் இருந்து வேறானது எனத் தந்துள்ளதில் சான்று தேவை எனக் கருதவில்லை. ஒரு அடிக்குறிப்பில் விளக்கம் தரலாம். இது பெருமளவு பொது அறிவு தான் என்றாலும் விளக்கம் தேவைப்பட்டால் தரலாம். மற்றபடி இக்கட்டுரையைக் குறுங்கட்டுரையாகத் தான் கொள்ள முடியும், கட்டுரை தொடக்கத்திலுள்ள அறிவிப்பை விரைந்து நீக்க வேண்டும். ஒருவேளை சில நாட்களில் கலை தொடர்ந்து மேம்படுத்த விரும்பியிருக்கலாம். அவ்வாறு இருப்பின் மூன்று வரிக் கட்டுரைகளாக ஆயிரம் எழுதவோ போன்ற கேள்விகளைக் கேட்பது சரியல்ல, திணேசு. -- சுந்தர் \பேச்சு 12:13, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தொடர்ந்து அவர் மேம்படுத்தலாம் அல்லது மேம்படுத்தாமலும் இருக்கலாம், இது அவருடைய விருப்பம். இது குறுங்கட்டுரை தான் இதற்கு சான்று தேவையில்லை என்பதினை கலையரசி கூறியதற்காகவே, இக்கட்டுரையில் பொதவான கருத்துகளையே கொண்டிருந்தாலும் ஆதாரம் தேவை இடப்பட்டது. ஆதாரம் சேர்க்கப்படாவிட்டால் அதன் நம்பக்த்தன்மை எவ்வறு விளங்கும்? அவ்வாறு ஆதாரம் சேர்க்காத அக்கருத்தினை நீக்க வேண்டும். இம்முடிவில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:38, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
குறுங்கட்டுரை என்பதால் சான்று தேவையில்லை என்று யாரும் கூறவில்லை, தினேசு. இந்தக் குறுங்கட்டுரையில் இப்போதுள்ள தகவல்கள் தலைப்பைப் பற்றிய விளக்கம் மட்டுமே. அதில் பொது அறிவைத் தாண்டி நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக இருக்கும் தகவல் இல்லாதபோது அந்த வரிக்கு ஏன் சான்று தேவை எனச் சொல்ல வேண்டும்? சில இடங்களில் கூடுதல் தகவலுக்காகச் சான்று இருந்தால் நல்லது, ஆனால் அதுபோன்ற இடங்களில் கட்டாயமில்லை. செத்துப் பிறப்பது என்பது கருச்சிதைவிலிருந்தும் குழந்தை பிற்றபதிலிருந்தும் வேறானது என்பதை நம்புவதற்கும் புரிந்து கொள்வதற்கும் சான்று தேவையா என எண்ணிப் பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 14:57, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
நீங்களும் புரிந்து கொள்ளவில்லையா? இக்கட்டுரைக்கு என்ன தேவையென்று பட்டதோ அதனை நானே செய்திருக்கிறேன். இவ்வுரையாடலில் பங்கேற்ற நேரத்தில் இன்னும் இரண்டு கட்டுரைகளுக்கு ஆதாரம் தேடியிருப்பேன். ;-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:11, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தொடர்புடைய உரையாடல்: பயனர் பேச்சு:மதனாஹரன்/தொகுப்பு ௪#சான்று சேர்க்கும் திட்டம். புற சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள் பகுப்பில் 590+ கட்டுரைகள் இருக்கும் நிலையில் மேலும் மேலும் வார்ப்புரு மட்டும் இணைப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு சான்று சேர்க்கும் பணியில் கவனம் செலுத்தலாம். --இரவி (பேச்சு) 13:15, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பயனர் இரவியின் கருத்தை வழிமொழிகின்றேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:43, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இரவி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றென்னுகிறேன். இருப்பினும் நினைவூட்டுவதை என் கடமையாகக் கருதுகிறேன். நீங்கள் கூறியுள்ள பகுப்பில் பல கட்டுரைகளுக்கு அதனுடைய ஆசிரியர்களால் கூட சரியான ஆதாரங்களை திரட்ட முடியவில்லை. அப்படியிருக்க அவ்வாறான கருத்துகளை எதற்காக கட்டுரையில் இணைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கூகிள் மொழிபெயர்ப்பு திட்டத்தில் உருவாக்கப்பட்ட பல கட்டுரைகளிலும் இவ்வார்ப்புரு சேர்க்கப்படுள்ளது. சான்று சேர்க்கும் பணி என்பது கட்டுரையை எழுதியவரல்லாத மற்றவருக்கு காலம் அதிகம் பிடிக்கும். ஒரு வேலை நான் பத்து மணி நேரம் அக்கருத்தினை உண்மை என நிரூபணம் செய்ய செலவிடுகிறேன்; என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை, உடனே அக்கருத்து விக்கிப்பீடியாவில் இருந்து அழிக்கப்படுமா? ஒரு வேளை அவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் அவற்றை 0 கட்டுரையாக்க முயற்சி செய்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:38, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பயனர் தினேசுக்கு வேண்டுகோள்[தொகு]

தினேசு, பல முறை நான் இது குறித்து எனது வேண்டுகோளை உங்களிடம் கூறியிருக்கிறேன். பயனர் கலை தனது அறிவியல் ஆய்வுப் பணிகளுக்குமிடையே நெடுங்காலமாய் இங்கு பங்களிப்பவர். விக்கி விதிமுறைகளை நன்கு அறிந்தவர். சான்று தேவையில்லா இடங்களில் தாங்கள் வார்ப்புரு இடுவது நெடுநாள் பயனர்களுக்கு மன உளைச்சலையும் நேர விரயத்தையும் அளிக்க வாய்ப்புள்ளது. நன்றி !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:22, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இதனைச் சான்று தேவையில்லா இடம் என்று சொல்ல முடியாது. சான்று சேர்க்க வேண்டிய அளவுக்குக் கூட ஒரு கட்டுரை வளர்ச்சியடையவில்லையாயின், அதனைக் குறுங்கட்டுரையாகக் கூடக் கொள்ள முடியாது. --மதனாகரன் (பேச்சு) 11:34, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
எடுத்துரைத்தமைக்கு நன்றி, மதனாகரன். இங்கு விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்கள் 95% மேற்பட்டவர்கள் தங்களுடைய பணிகளுக்கிடையே விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக உழைப்பவர்களே! விக்கி விதிமுறைகளை நன்கு அறிந்தவர், சான்று இல்லாமல் எழுதிய கட்டுரையில் சான்று இல்லாமல் இருப்பது சரி என்று கூற மாட்டார்கள். மன உளைச்சல், நேர விரயம் என்று பெரிய வார்த்தைகளை சொல்லியிருக்கிறீர்கள். தவறு செய்யும் போது அல்லது ஒரு விசயம் தவறாக தெரியும்போது அதனை சுட்டிக்காட்டுதல் அவசியமாகிறது. தவறை நான் செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளவே வேண்டியுள்ளது. நேரத்தைக் குறைக்க வேண்டுமென்பதற்காக, ஆயிரம் தலைப்புகளில் எவ்வித சான்றுகளும் இன்றி மூன்று வரிக்கட்டுரை எழுதவா ??? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:40, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கலை அவர்கள் இதை வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தினேசு உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். தவறு என்னுடையதாயினும் சுட்டிக் காட்டுங்கள். இருப்பினும், நேரத்தைக் குறைப்பதற்காக ஆயிரம் மூன்று வரிக் கட்டுரைகள் எழுதவா என்று கூறியிருப்பதன் பொருள் என்ன??-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:45, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நேர விரயத்தையும் அளிக்க வாய்ப்புள்ளதால் ஆதாரம் சேர்க்க இயலவில்லை என்று தெரிவித்திருந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அக்கருத்தினை (நேரத்தைக் குறைக்க வேண்டுமென்பதற்காக, ஆயிரம் தலைப்புகளில் எவ்வித சான்றுகளும் இன்றி மூன்று வரிக்கட்டுரை எழுதவா ??? )சொல்லியிருந்தேன். விக்கிப்பீடியாவில் அனைத்து கட்டுரைகளும் சிறப்பான கட்டுரையாக இருக்க வேண்டும் எனப்தற்காகவே அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன். - -தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:38, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் தினேஷ். வரிக்கு வரி சான்று வேண்டும் எனக் கேட்கிறீர்களா? தங்களுக்கு ஏதேனும் கருத்துகளில் ஐயம் ஏற்படின் அதற்கு சான்று கோருவது நியாமான விடயம். கருப்பையில் குழந்தை இறந்து போகிறது என்பதற்கு சான்று தேவையா? //நேரத்தைக் குறைக்க வேண்டுமென்பதற்காக, ஆயிரம் தலைப்புகளில் எவ்வித சான்றுகளும் இன்றி மூன்று வரிக்கட்டுரை எழுதவா ???// கலை அவர்களின் பல கட்டுரைகள் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டவை. வேண்டுமென்றே யாரும் மூன்றுவரிக் கட்டுரைகளை இணைப்பதில்லை. விக்கிப்பீடியாவின் இன்று விரிவடைந்த நிலையிலுள்ள பல கட்டுரைகளும் முன்பு மூன்று வரியாக இருந்தவைதான். ஏன் தங்களின் பல கட்டுரைகள் கூட ஒரே வரியுடன் தொடங்கப்பட்டுள்ளன. அதனைத் தாங்கள் தற்போது மேம்படுத்துவதில்லையா? பலர் தங்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் தாங்கள் சான்றில்லை வார்ப்புருவை இணைப்பதிலேயே முனைப்புடன் உள்ளீர்கள். இக்கட்டுரைக்கு ஆங்கில விக்கிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தங்களின் பன்மொழி அறிவினைப் பயன்படுத்தி சான்றுகளை இணைத்து முடிந்தால் அதனை விரிவாக்கம் செய்யலாமே. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:03, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பார்வதிஸ்ரீ வரல்லற்று பக்கத்தினையும் எனது அனைத்து பதிலைகளையும் கவணியுங்கள் உங்களுடைய அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:38, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
எனது கருத்தை தினேஸ், மதனாகரன், தமிழ்க்குரிசில் யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. நான் எழுதிய கட்டுரைகளில் மூன்று வரிக் கட்டுரைகள் பொதுவாக இருப்பதில்லை. தயவுசெய்து நான் பங்களித்த கட்டுரைகளைச் சென்று பார்த்தீர்கள் என்றால் புரியும். ஓரிரு கட்டுரைகள் அவ்வாறு இருக்கின்றதென்றால், அவற்றை மீண்டும் நேரம் கிடைக்கையில் விரிவுபடுத்தும் எண்ணத்தில் தொடங்கியிருப்பேன். ஆனால் அவை தவறியிருக்கும். அவற்றை நான்தான் விரிவுபடுத்த வேண்டும் என்பதுமில்லை. எவரும் விரிவுபடுத்தலாம்.
தவறு எவர் செய்தாலும் தவறுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தெதுவும் கிடையாது. எனது கருத்து என்னவென்றால், இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்திற்கு சான்று தேவை என்ற வார்ப்புரு இடுவது பொருத்தமற்றது என்பதுதான். அதாவது குறிப்பிட்ட விளக்கத்திற்கு சான்று தேவையில்லை. எனவே அது (அதாவது குறிப்பிட்ட விளக்கத்திற்கு சான்று கொடுக்காதது) தவறே அல்ல என்றுதான் நான் கூறுகின்றேன். இப்படி ஒவ்வொரு பொதுவான விடயத்திற்கு சான்று தேவை என்ற வார்ப்புரு இடுவதாயின், ஒவ்வொரு கட்டுரைகளிலும் எத்தனை வார்ப்புருக்கள் இட வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். கட்டுரைகள் அனைத்தும் இந்த வார்ப்புருக்களாலேயே நிறைந்திருக்கும் என நினைக்கின்றேன்.
இது குறுங்கட்டுரையே அல்ல என்று நினைத்தால், நீக்கப்படவேண்டிய கட்டுரை என்ற வார்ப்புருவை இடுங்கள். அதை விட்டு விட்டு, சான்று அவசியமல்ல என்ற இடத்தில் சான்று தேவை என்று வார்ப்புரு இடுவது பொருத்தமற்றதே. தமிழ்க்குரிசில் இதை வேண்டுகோளாக எடுக்கும்படி கூறியிருக்கின்றீர்கள். இப்படி மிகச் சாதாரணமான வசனங்களுக்குக் கூட சான்றுகள் தேடி இணைப்பதாயின் என்னால் கட்டுரைகளையே எழுத முடியாமல் இருக்கும். எனவே அவ்வாறு என்னால் இணைக்க முடியாது. அதேவேளை நிச்சயமாக சான்று தேவை எனக் கருதும் இடங்களிலும், காப்புரிமைச் சிக்கல்கள் அல்லது கருத்துத் தவறுகள் ஏற்படும் எனக் கருதும் இடங்களிலும் சான்றுகளை இணைக்கவே முயல்வேன்.
//இருப்பினும், நேரத்தைக் குறைப்பதற்காக ஆயிரம் மூன்று வரிக் கட்டுரைகள் எழுதவா என்று கூறியிருப்பதன் பொருள் என்ன??// இதனையே நானும் கேட்கின்றேன். இதன் பொருள்தான் என்ன? அப்படியாக நேரத்தைக் குறைக்கத்தான் நான் இப்படியான குறுங்கட்டுரைகளை எழுதுகின்றேனா என்ன? --கலை (பேச்சு) 12:20, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
ஆம். இந்தக் கட்டுரைக்கு {{குறுங்கட்டுரை}} இணைப்பை இட்டுவிட்டு பேச்சுப் பக்கத்தில் வளர்த்தெடுக்குமாறு கோரியிருக்க வேண்டும். வளர்த்தெடுக்கும்போது உள்ள கூடுதல் தகவல்களுக்கு சான்று தேவைப்படும் இடங்களில் தரலாம். மேலே நான் தெரிவித்த கருத்தில் சொன்னது போல் சில செய்திகள் பொது அறிவாகவே கொள்ளக் கூடியவை. அவற்றுக்குச் சான்று தர வேண்டிய கட்டாயமில்லை. சில இடங்களில் அடிக்குறிப்பில் விளக்கம் தந்தால் போதும். மேலும் {{சான்றில்லை}} வார்ப்புருவில் உள்ள செய்தி இப்போது நடுநிலைச் சிக்கல் உள்ள கட்டுரைகளுக்கானது. தேவையான மாற்றங்களைக் கட்டுரையில் செய்துள்ளேன். நாளை நேரம் கிடைத்தால் நானே கூடுதல் தகவல்களைச் சேர்ப்பேன். மற்றவர்களும் கை கொடுத்தால் இக்கட்டுரையை நன்கு வளர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 12:36, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
வரிகள் குறித்து நான் ஒரு முறை கூட கூறவில்லை. (மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) அவர்களுக்கு கூறிய பதிலைத் தவிற) என்னுடைய பார்வையில் சான்று இல்லை. அடுத்தது, நீங்கள் அளித்த பதில். குறுங்கட்டுரை என்று நீங்களே தான் கூறியுள்ளீர்கள். பொதுவான விசயமாக இருந்தாலும் இவை தான் இக்கட்டுரைக்கு வலுசேர்க்கும் கருத்து. அக்கருத்திற்கு ஏன் சான்று சேர்க்கவில்லை அது தான் என் கேள்வி. நீங்கள் மட்டுமல்ல விக்கிப்பீடியாவில் உள்ள அனைவரும் தங்களுடைய நேரத்தினை விக்கிப்பீடியா மேன்மை அடைய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளிற்காக உழைப்பையும், அறிவையும், நேரத்தினையும் செலவு செய்து வருகிறோம். ஆதாரமற்ற கட்டுரைகளை நீங்கள் எழுதுகிறீர்கள் என்று உங்கள் மீது பழிசுமவதற்காக் இட்ட வார்ப்புருவல்ல, உங்கள் கட்டுரைகளை நிலத்தில் உள்ள வைரம் போன்றது. அதனை பட்டை தீட்டுங்கள், நன்கு பளிச்சிடும் என்பதே நோக்கம். −முன்நிற்கும் கருத்து Dineshkumar Ponnusamy (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சான்றுகள் கட்டுரைகளுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் உங்களுடன் முழுக்க உடன்படுகிறேன், தினேசு. அதைத் தொடர்ந்து நானே பலமுறை வலியுறுத்தியுள்ளேன். தொகுத்தல் பெட்டிக்குக் கீழே அக்கொள்கைக்கு இணைப்பு தர வேண்டுமென்றும் வலியுறுத்திச் சேர்த்திருக்கிறேன். அதே வேளை, கட்டுரையின் முதல்வரியில் உள்ள தகவலுக்குச் சான்று கட்டாயாம் தேவை என ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் வார்ப்புரு இட்டுக் கேட்குமளவிற்கு. இரண்டாவது {{சான்றில்லை}} வார்ப்புருவிலுள்ள செய்தியை ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன் (சான்றுதேவை வேறு, இது வேறு). அது நடுநிலை பொருட்டு ஆதாரம் கேட்கும் விதமாக உள்ளது. அந்த வார்ப்புருவை மாற்ற வேண்டும், இல்லையெனில் வேறு பொருத்தமான வார்ப்புருவை உருவாக்க வேண்டும். {{சான்றுதேவை}} என்ற வார்ப்புருவை பழிசுமத்துவதாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் உங்களுடன் முழுக்க உடன்படுகிறேன். முதலில் நீங்கள் இட்டபோது கலை அவ்வாறு எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. அதனால்தான் அந்த குறிப்பிட்ட தகவலுக்கு தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார். வேண்டுமானால் குறுங்கட்டுரை எனக் கூறலாம் என்றும் சொல்லியிருந்தார். அதன்பின் சில சிறு சிறு புரிதல் குழப்பங்களால் உரையாடல் நீண்டுவிட்டது என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:06, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தினேசு, இப்போது நீங்கள் கட்டுரையில் இணைத்திருப்பவை பயன் தரக்கூடியவை. பாராட்டுகள். (முதல் சான்று பயனுள்ளது என்றாலும் அந்த வரிக்குக் கட்டாயம் சான்று தேவை என்று நான் நினைக்கவில்லை. அது இருந்தால் இன்னும் நன்று என்பது சரி. அவ்வாறான இடங்களில் வார்ப்புரு இடுவதற்குப் பதிலாக இயன்றால் நாமே சேர்க்கலாம்.) -- சுந்தர் \பேச்சு 15:12, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
பிணக்கு ஆரம்பமாவாதே நாமே சேர்க்கலாம் என்பதில் தான். கட்டுரைகளில் பலவற்றில் ஆதாரம் தேவை அல்லது சான்று தேவை வார்ப்புரு இடப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டுரைகளில் இது வரையிலும் ஆதாரம் சேர்க்கப்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம், நம்பமுடியாத தகவலை கட்டுரை கொண்டுள்ளது. அடுத்தது அவ்வரிகளை எழுதிய பயனர் தற்போது விக்கிப்பியில் பங்களிப்பதில்லை இன்னும் நிறைய.... ஆக கட்டுரை ஆரம்பமாகும்போதே முடிந்த அளவு கட்டுரை எழுதுவரிடம் இருந்து ஆதாரம் வாங்கிட வேண்டும். பிறகு சில நம்மால் முடிந்தவற்றை தேடி எடுத்து சேர்த்து கட்டுரைக்கு வலுவூட்டலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:20, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
உங்கள் கருத்துக்குப்பின் வேறு ஏதாவது அனுபவம் உள்ளதா எனத்தெரியவில்லை. நானும் கவனிக்கவில்லை. ஆனால், இந்தக் கட்டுரையில் முதல் வரி அந்த வகையைச் சேரந்தது என நினைக்கிறீர்களா? நம்பமுடியாததா? இருந்தாலும் பொதுவான உங்கள் அடிப்படைக் குறிக்கோளை ஏற்கிறேன் (இந்த இடத்தில் மாறுபடுகிறேன்). -- சுந்தர் \பேச்சு 15:30, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கலை, நான் கூறியதை தவறாக எண்ணியிருந்தால் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், வேலைப் பளுவில் எரிச்சலாய் இருப்பீர்கள் எனவே, தினேசு வார்ப்புரு இணைத்ததை அழுத்தம் கொடுப்பதாக நினைக்காமல் வேண்டுகோளாக ஏற்குமாறு வேண்டியிருந்தேன். மற்றபடி எல்லாவற்றுக்கும் ஆதாரம் சேர்க்குமாறு சொல்லவில்லை. வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டு விக்கியில் பொது தரமான நோக்கோடு எழுதும் உங்களுக்கு முன் மொட்டையாக மொழிபெயர்க்கும் இந்த சிறியோன் தவறாகக் கூறியிருப்பின் மன்னிக்கவும். என் கட்டுரைகளில் பிழைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும், உங்களைப் போன்றோரை முன்னுதாரணமாகக் கொண்டு பங்களித்துப் பழகி மேம்படுத்தவே விரும்புகிறேன். காலம் எடுக்கும். :) மேலும், உங்கள் பங்களிப்பை யாரும் குறைத்துக் கூறவேயில்லையே. உங்கள் கட்டுரைகள் பலவற்றை நானும் படித்திருக்கிறேன். // நான்னும் ஆயிரம் மூன்று வரிக் கட்டுரைகள் எழுதவா? இது பொதுக் கருத்து. தயவுசெய்து பொதுவாக கூறிய கருத்தை உங்களை குறிவைத்து சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாமே! நீங்கள் எடுத்திருப்பது தமிழ் அதிகம் நுழையாத துறை சார்ந்த கட்டுரை என்பதால் சான்றிணைப்பதிலோ, விரிவாக்குவதிலோ கால தாமதம் ஏற்படலாம் என்பதை அறிகிறேன். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:07, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மருத்துவம் சார்ந்த தலைப்புகளில் தமிழில் எழுதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்று எனக்கும் தெரியும், ஆயினும், கொஞ்சம் முயற்சித்தால் கண்டிப்பாக இன்னும் நன்றாக வளப்படுத்தலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:38, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
//நீங்கள் மட்டுமல்ல விக்கிப்பீடியாவில் உள்ள அனைவரும் தங்களுடைய நேரத்தினை விக்கிப்பீடியா மேன்மை அடைய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளிற்காக உழைப்பையும், அறிவையும், நேரத்தினையும் செலவு செய்து வருகிறோம். ஆதாரமற்ற கட்டுரைகளை நீங்கள் எழுதுகிறீர்கள் என்று உங்கள் மீது பழிசுமவதற்காக் இட்ட வார்ப்புருவல்ல, உங்கள் கட்டுரைகளை நிலத்தில் உள்ள வைரம் போன்றது. அதனை பட்டை தீட்டுங்கள், நன்கு பளிச்சிடும் என்பதே நோக்கம்.//நான் எனது நேரத்தை, உழைப்பை இங்கே செலவிடுவதுபற்றி எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. மேலும் என்மீது பழி சுமத்தியதாக எடுக்கவுமில்லை. சுந்தர் கூறியதுபோல, இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்திற்கு இந்த வார்ப்புரு தேவையற்றது என்பதனையே குறிப்பிட வந்தேன். குறிப்பிட்ட விளக்கம் பொது அறிவுக்கு உட்பட்டதாக இருப்பதனால் அதற்கு சான்று தேவையில்லை என்பதே எனது கருத்து. இதேபோல் நான் பங்களிக்காத கட்டுரை ஒன்றில் காண நேர்ந்தாலும் நான் இதனையே சொல்லுவேன். எனவே இந்தக் கருத்து என் சம்பந்தப்பட்டது இல்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். //வேலைப் பளுவில் எரிச்சலாய் இருப்பீர்கள்//. உண்மையில் இது தொடர்பில் எனக்கு எரிச்சல் எதுவும் இல்லை. இந்த இடத்தில் இந்த வார்ப்புரு பொருத்தமற்றது என்பதே எனது கருத்து. வேண்டுமானால் குறுங்கட்டுரை வார்ப்புருவை இடலாம். அல்லது மதனாகரன் கூறியதுபோல் இந்தக் கட்டுரை குறுங்கட்டுரையாகவும் தகுதியற்றது எனக் கருதினால் நீக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியலில் இணைக்கலாம். எனது இந்தக் கருத்துக்கள் நான் பங்களித்த கட்டுரைகளுக்கு மட்டுமன்றி இவ்வகையான கட்டுரைகள் அனைத்துக்கும் சேர்த்தே கூறுகின்றேன். சான்றுகள் அவசியமற்ற இடங்களில், பொதுவான விடயங்களுக்கு இந்த வார்ப்புரு அவசியமில்லை என்பதை மட்டுமே இங்கே கூற வந்தேன். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். தினேஸ் ஒவ்வொரு வரிக்கும் தனித்தனி வார்ப்புருவை இட்டதனால் இந்தக் கருத்தை வலியுறுத்திக் கூற வேண்டி வந்தது. அவ்வளவே.--கலை (பேச்சு) 16:08, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில்! மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் தேவையே இல்லை. ஏனெனில், முதலில் நான் இங்கே கருத்தை வைத்தபோது என்மேல் தவறு கண்டு பிடித்ததாகவோ, அல்லது எனது பங்களிப்பை குறையாக கருதியதாகவோ, அல்லது என்னிடம் சான்று கேட்கப்பட்டதாகவோ எண்ணவே இல்லை. இந்தக் கட்டுரைக்கு சான்று தேவை என்பதை ஒருவர் எண்ணி அந்த வார்ப்புருவை இட்டிருந்தார். ஆனால் அதற்கு சான்று தேவையில்லை என்ற எனது கருத்தையே கூற விளைந்தேன். அங்கே கொடுக்கப்பட்ட விளக்கங்களுக்கு சான்றுகள் தெரிந்திருப்பின், நானோ, வேறு எவருமோ அதனை இணைக்கலாம். அப்படி தெரிந்திராவிட்டாலும், பரவாயில்லை என்பதனால், அந்த வார்ப்புரு அங்கே பொருத்தமில்லை என்பதையே சொல்ல வந்தேன். சான்றுகள் தேவையாக உள்ள இடங்களில் இந்த வார்ப்புருக்களை இடத்தான் வேண்டும். அது நான் ஆரம்பித்த கட்டுரையாகவே இருந்தாலும் சரிதான். //விக்கி விதிமுறைகளை நன்கு அறிந்தவர், சான்று இல்லாமல் எழுதிய கட்டுரையில் சான்று இல்லாமல் இருப்பது சரி என்று கூற மாட்டார்கள். // இப்படி தினேஸ் எழுதியிருக்கின்றார். அதுதான் கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. விக்கி விதி முறையில் பொதுவான கருத்துக்களுக்குக் கூட சான்று தேவை என்று எங்காவது இருக்கின்றதா என்ன? இதைத்தான் எற்க முடியவில்லை. அதைத்தான் நானும் கூறினேன். அப்படியானால் எழுதப்படும் ஒவ்வொரு வரிக்குமல்லவா சான்று இணைக்க வேண்டும். அது சாத்தியமா?--கலை (பேச்சு) 20:19, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கலை, நான் இந்தக் கட்டுரை நீக்கப்பட வேண்டிய கட்டுரை என்று குறிப்பிட முன்வரவில்லை. ஒரு கட்டுரையானது சான்று சேர்க்க வேண்டிய தேவை கூட இன்றி இருக்கின்றதாயின், அது நீக்கப்பட வேண்டிய கட்டுரை என்று பொதுவாகக் கூறினேன். இக்கட்டுரைக்குச் சான்று சேர்க்கப்பட வேண்டும் என்றே கூற முன்வந்தேன். --மதனாகரன் (பேச்சு) 05:26, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தினேசுக்கு எனது இறுதியான விளக்கம்[தொகு]

நான் மேலே இட்ட கருத்துக்கள் எல்லாம் இடை இடையே வந்து பார்த்து, முழுமையாக வாசிக்காமல் போட்டவை. தற்போது ஆறுதலாக மீண்டும் ஒரு தடவை முழு உரையாடலையும் வாசித்துப் பார்த்தேன். சில தவறான புரிதல்கள் நிகழ்ந்திருக்கிறதென நினைக்கின்றேன். இங்கே சுந்தர் இது பற்றி பல பதில்களில் விளக்கமாகவே எழுதி உள்ளார். இருந்தாலும் தினேசுக்கு எனது பக்கத்தை இறுதியாக ஒரு தடவை எடுத்துக் கூறலாம் என நினைக்கின்றேன்.

நான் இங்கேயுள்ள எனது முதலாவது கருத்தில் கூறியதையும், அதற்கு மதனாஹரன் பதிலிட்ட பின்னர், அவருக்கு கூறிய கருத்தையும் தினேஸ் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். மற்றவர்கள் நான் என்ன நினைத்து எழுதியிருக்கின்றேன் என்பதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. மரு. பெ. கார்த்திகேயன் அவர்களும் குறிப்பிட்ட வார்ப்புருபற்றி ஏற்கனவே கூறியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.

என்ற வார்ப்புருவை இந்தக் கட்டுரையில் கண்டபோது, அங்கே இருந்த உள்ளடக்கத்திற்கு (அதாவது அங்கே எழுதப்பட்டிருந்த வரிகளில் இருந்த விளக்கத்திற்கு) இந்த வார்ப்புரு பொருத்தம்தானா என்பதை மட்டுமே எண்ணிப் பார்த்துவிட்டு எனது முதலாவது கருத்தை இட்டேன். அது நான் எழுதிய கட்டுரை என்பதனாலோ அல்லது அது ஒரு குறுங்கட்டுரை, அதற்கு எதற்கு சான்று என்பதனாலோ அல்ல. தினேஸ் ஒரு இடத்தில் "இது குறுங்கட்டுரை தான் இதற்கு சான்று தேவையில்லை என்பதினை கலையரசி கூறியதற்காகவே, இக்கட்டுரையில் பொதவான கருத்துகளையே கொண்டிருந்தாலும் ஆதாரம் தேவை இடப்பட்டது. ஆதாரம் சேர்க்கப்படாவிட்டால் அதன் நம்பக்த்தன்மை எவ்வறு விளங்கும்?" என்று குறிப்பிட்டிருக்கின்றார். குறுங்கட்டுரை என்பதனால் ஆதாரம் தேவையில்லை என நான் கூறவில்லை. அங்கே இருந்த அந்த உள்ளடக்கம் பொது அறிவுக்கு உட்பட்ட விளக்கம் என்பதனால் குறிப்பிட்ட வார்ப்புரு தேவையில்லை என்றே கூறினேன். இதனை தினேஸ் குறுங்கட்டுரைக்கு எதற்கு ஆதாரம் என நான் கேட்டதாகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். ஒருவேளை எனக்கு எனது கருத்தை தினேஸ் புரிந்து கொள்ளும் அளவுக்குச் சரியாகக் கூறத் தெரியவில்லையோ என்னவோ :).

செத்துப் பிறப்பு என்பது என்ன என்ற விளக்கத்திற்கும், அது கருச்சிதைவு, குழந்தைப் பிறப்பில் இருந்து வேறுபட்டது என்று கூறுவதற்கும் சான்று தேவையில்லையே என்பதற்காக மட்டுமே அக் கருத்தை இட்டேன். இந்தக் கட்டுரை குறுங்கட்டுரையாக அல்லாமல், ஒரு விரிவான கட்டுரையாக இருந்தாலும், குறிப்பிட்ட அந்த விளக்கத்திற்கு சான்று அவசியமில்லை. அதற்காக சான்றுகள் இருப்பின் கொடுக்கக் கூடாது என்பதுமல்ல. இருந்தால் மேலதிகத் தகவலுக்காகக் கொடுக்கலாம். இப்படியான பொதுப்படையான விளக்கத்திற்கு, அப்படிக் கொடுக்காவிட்டாலும் தவறில்லை. இருந்து கொடுத்தால் கட்டுரை மேலும் சிறப்படையும் என்பதையும் மறுக்கவில்லை. ஒருவேளை கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கம் தவறு, அல்லது கருத்துப் பிழை இருக்கின்றது என்று எவராவது நினைத்து கூறியிருந்தாலோ, அல்லது அந்த விளக்கம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்திருந்தாலோ, குறிப்பிட்ட வார்ப்புருவை இணைக்கலாம். இவைபற்றி மிக விளக்கமாகவே சுந்தர் எடுத்துக் கூறியிருக்கின்றார். நன்றி சுந்தர்!.

பொதுவாக எந்த ஒரு கட்டுரையை நான் ஆரம்பிக்கும்போதும், அதனை பின்னர் விரிவாக்க வேண்டும் என்று எண்ணியே ஆரம்பிப்பேன். ஆனால் தவறிப் போவதும் உண்டு. மறுக்கவில்லை. குறுங்கட்டுரைகளாக அல்லது மூன்று வரிகளில் கட்டுரை இருப்பது அழகல்ல என்பதனையும் ஏற்றுக் கொள்கின்றேன். அதனால்தான் குறுங்கட்டுரை வார்ப்பை இணைத்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். "சான்று சேர்க்க வேண்டிய அளவுக்குக் கூட ஒரு கட்டுரை வளர்ச்சியடையவில்லையாயின், அதனைக் குறுங்கட்டுரையாகக் கூடக் கொள்ள முடியாது" என்று மதனாஹரன் குறிப்பிட்டிருந்தார். அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனவே அப்படியான கட்டுரைகள் நீக்கப்படலாம். எனவேதான் நீக்கப்பட வேண்டிய கட்டுரைகளில் சேர்க்கலாம் எனக் குறிப்பிட்டேன். அப்படி குறிப்பிட்ட காரணத்துக்காக கட்டுரை நீக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

அதுவல்லாமல், குறிப்பிட்ட அந்த வரிகள் ஆதாரமற்றிருப்பதால் நம்பகத்தன்மையற்று இருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பிட்ட அந்த வரிகளில் எவருக்காவது ஏதாவது சந்தேகம் உள்ளதா? இருக்க முடியாதே. எனவே அப்படியான இடங்களில் அந்த சான்று தேவை வார்ப்புரு அவசியமற்றதே. ஆனால் அப்படி அனைவரும் அறிந்த இரண்டே வரிகளுடனான ஒரு கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் அவசியம்தானா என்று கேட்டால், அவசியமில்லை என்றே நானும் சொல்கின்றேன். உண்மையில் அந்தக் கட்டுரையை நான் கருச்சிதைவு கட்டுரையை விரிவாக்கம் செய்து கொண்டிருந்தபோது, அங்கே கொடுக்கப்பட்ட சிவப்பிணைப்பை நீல இணைப்பாக்கவே ஆரம்பித்தேன் என நினைக்கின்றேன் (பின்னர் விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில்). பின்னர் மறந்துபோய் விட்டது. பார்வதிஸ்ரீ சொன்னதுபோல் பின்னர் மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரைதான் அது. அப்படி விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தால், அவசியமற்ற கட்டுரையாக இருந்தால் நீக்கலாம். அல்லது பார்ப்பவர்களுக்கு அதனை விரிவாக்கத் தோன்றினால் விரிவாக்கம் செய்யலாம். அல்லது பின்னர் விரிவாக்கம் செய்யலாம் என்றெண்ணினால் குறுங்கட்டுரை வார்ப்புருவை இணைக்கலாம்.

தினேஸ், பல இடங்களில் 'தவறு' எனக் குறிப்பிட்டிருக்கின்றார். குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சான்று அவசியமில்லை என்பதனால், அது தவறல்ல என்றுதான் கூறுகின்றேன். குறுங்கட்டுரையாக அமைந்துவிட்டது வேண்டுமானால் தவறாக இருக்கலாமே தவிர, அதற்கு ஆதாரம் சேர்க்காதது தவறல்ல. எனவே தயவு செய்து இப்படியான இடங்களில் அந்த வார்ப்புருவை இட வேண்டாம் என தினேசிடம் கேட்டுக் கொள்கின்றேன். இப்படி பொதுவான விடயத்துக்கும் ஆதாரம் தேவை வார்ப்புரு இணைப்பதாயின் ஒவ்வொரு கட்டுரையிலும் எத்தனை வார்ப்புருக்கள் இட வேண்டியிருக்கும் என நினைத்துப் பாருங்கள் தினேஸ். ஏற்கனவே அங்கே இருந்த இரண்டு வரிகளுக்கும் தனித்தனியே சான்று தேவை வார்ப்புரு இடப்பட்டிருந்தது.

"இவ்வுரையாடலில் பங்கேற்ற நேரத்தில் இன்னும் இரண்டு கட்டுரைகளுக்கு ஆதாரம் தேடியிருப்பேன். ;-)" என்று தினேஸ் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அப்படி ஆதாரம் தேடும்போது, அவை இங்கே இருந்ததுபோன்ற பொதுவான வரிகளுக்காக அல்லாமல், மிக முக்கியமான வரிகளுக்கானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். என் பங்களிப்புகளிலே கூட பல முக்கியமான வரிகளுக்கு நான் ஆதாரம் கொடுக்காமலும் விட்டிருக்கக் கூடும். அவற்றிற்கு சான்று தேவை என்று போட்டாலோ, அல்லது நல்ல சான்றுகளைத் தேடி இணைத்தாலோ நல்லதுதானே. அப்படியான இடங்களில் இந்த வார்ப்புரு இருந்தால், நானும் தேடிப் போடவே பார்ப்பேன்.

//விக்கிப்பீடியாவில் அனைத்து கட்டுரைகளும் சிறப்பான கட்டுரையாக இருக்க வேண்டும் எனப்தற்காகவே அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.// என்று தினேஸ் குறிப்பிட்டுள்ளார். அனேகமாக இங்கே பங்களிப்பவர்கள் எல்லோருமே இப்படி எண்ணித்தான் பங்களிக்கின்றார்கள் என நம்புகின்றேன்.

நன்றி. நட்புடன், --கலை (பேச்சு) 00:02, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

செத்துப் பிறப்பு என்ற தலைப்பு ஏனோ உறுத்தலாக உள்ளது. இறந்து பிறத்தல் எனலாமா?--இரவி (பேச்சு) 13:16, 20 அக்டோபர் 2012 (UTC) +1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:38, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இறந்தே பிறத்தல் என்பது பொருத்தமாக இருக்கும்.--Booradleyp (பேச்சு) 15:08, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செத்துப்_பிறப்பு&oldid=1239332" இலிருந்து மீள்விக்கப்பட்டது