தொப்புள்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறந்து 3 நிமிடமேயான குழந்தையின் தொப்புட்கொடி மருத்துவ உபகரணமான கவ்வியொன்று பயன்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

தொப்புள்கொடி (Umbilical cord) என்பது, சூல்வித்தகம் உள்ள முலையூட்டி விலங்குகளில் கருப்பையினுள் விருத்தியடைந்து வரும் முளையம் அல்லது முதிர்கருவை, தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் கொடிபோன்ற ஒரு அமைப்பாகும்.

தாயின் கருப்பையில் கருக்கட்டலின் விளைவால் உருவாகிய கருவானது குழந்தையாக விருத்தியடையும் போது, அதே கருவிலிருந்தே இந்த தொப்புட்கொடியும் உருவாகும். மனிதரில் இந்த தொப்புட்கொடியானது இரு தமனி அல்லது நாடிகளையும் (தொப்புள் நாடிகள்), ஒரு சிரை அல்லது நாளத்தையும் (தொப்புள் நாளம்) வழுவழுப்பான, கூழ்ப்பொருள் (jelly) போன்ற ஒரு பதார்த்தத்தினுள் அமிழ்ந்துள்ள நிலையில் கொண்டிருக்கும். தொப்புள் நாளமானது ஆக்சிசன், போசாக்கு நிறைந்த குருதியை நஞ்சுக்கொடியிலிருந்து முளையம் அல்லது முதிர்கருவுக்கு எடுத்துவரும். தொப்புள் நாடியானது ஆக்சிசன் அகற்றப்பட்ட, போசாக்கு குறைந்த குருதியை மீண்டும் நஞ்சுக்கொடிக்கு எடுத்துச் செல்லும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொப்புள்கொடி&oldid=1356634" இலிருந்து மீள்விக்கப்பட்டது