கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடு சீன சோதிடத்தின் எட்டாவது குறி ஆகும். 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015, 2027, 2039 ஆகிய வருடங்கள் ஆடு வருடங்கள் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் இளகிய மனம் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும், சிறந்த படைப்பாளிகளாகவும் இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
பெயர்க்காரனம் [தொகு]
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டது. இதற்க்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை ஆகியவை முதல் ஏழு இடங்களில் வந்தன. இவற்றிக்கு பிறகு ஆடு, குரங்கு, சேவல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொண்டு உதவி செய்துகொண்டு அடுத்ததாக வந்தன. இதில் சேவல் ஒரு மரப்பலகையை கண்டுபித்து அதில் மற்ற மூன்று விலங்குகளையும் ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த பலகை ஆற்றின் இடையில் இருந்த புதர்களில் சிக்கிக்கொண்ட போதெல்லாம் குரங்கு மற்றும் ஆடு ஆகிய இரண்டும் அவற்றை விலக்கிவிட்ட படியே வந்தன. இவ்வாரு ஒற்றுமையுடன் ஒன்றாக வந்த இந்த விலங்குகலை வாழ்த்திய கடவுள் ஆட்டை எட்டாவது வருடக்குறியாகவும், குரங்கு மற்றும் சேவலை முறையே ஒன்பதாவது பத்தாவது வருடக்குறியாகவும் தெரிவு செய்தார்.
ஆடு எட்டாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
இயல்புகள் [தொகு]
இராசி அம்சங்கள் [தொகு]
| |
|
| இராசி எண்கள் |
3, 4, 5, 12, 34, 45, 54 |
| இராசி நிறம் |
மஞ்சள், வெளிர் பச்சை |
| இராசிக் கல் |
மரகதம் |
ஆடு வருடத்தைய பிரபலங்கள் [தொகு]
ஆடு வருடத்தில் உதயமான நாடுகள் [தொகு]
இதையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள் [தொகு]