மார்க் டுவெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்க் டுவெய்ன்
இலகிய வகை புனைகதை, வரலாற்றுப் புனைகதை, சிறுவர் இலக்கியம், non-fiction, பயண இலக்கியம், நையாண்டி, கட்டுரை, மெய்யியல் இலக்கியம், சமூக வர்ணனை, இலக்கியத் திறனாய்வு
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
Adventures of Huckleberry Finn, The Adventures of Tom Sawyer
கையொப்பம் Samuel L Clemens signature.svg

மார்க் டுவைன் என்பது, அமெரிக்க நகைச்சுவையாளரும், நையாண்டியாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆன சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ் என்பவரின் புனைபெயர் ஆகும். இவர் எழுதிய புதினங்களில், ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் (Adventures of Huckleberry Finn), டாம் சோயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) என்பன குறிப்பிடத்தக்கவை. இவர் அவரது மேற்கோள்களுக்காகவும் பெயர் பெற்றவர். இவரது வாழ்நாளில் இவர், நாட்டின் அதிபர்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், ஐரோப்பிய அரச குடும்பத்தினர் போன்றோரின் நண்பரானார்.

டுவைனுக்கு மக்களிடையே பெரும் புகழ் இருந்தது. இவருடைய சொல்நயமும், நையாண்டியும், இவருக்குத் திறனாய்வாளரிடமிருந்தும், சக எழுத்தாளரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்தது. அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் போல்க்னர், டுவைனை அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என்றார்.

[தொகு] இளமைக்காலம்

சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ், புளோரிடா, மிசூரியில் 1835ஆம் ஆண்டு நவம்பர் 300 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் ஜான் மார்ஷல் கிளமென்ஸ், டென்னசியைச் சேர்ந்த ஒரு வணிகர். தாயார், ஜேன் லம்ப்டன் கிளமென்ஸ். இவர் குடும்பத்தின் ஏழு பிள்ளைகளுள் ஆறாவதாகப் பிறந்தார். எனினும், நால்வர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இவரது இரண்டு சகோதரர்கள் ஆரியன் (Orion), ஹென்றி ஆகியோர். சகோதரி பமீலா.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்