எருது (சீன சோதிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Oxen.svg

எருது சீன சோதிடத்தின் இரண்டாவது குறி ஆகும். 1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021, 2033 ஆகிய வருடங்கள் எருது வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் உளைப்பாளிகளாகவும், மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.


பொருளடக்கம்

[தொகு] பெயர்க்காரனம்

ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளிடையே மோதல் ஏற்ப்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு ஆற்றை கடக்கும் போட்டி வைத்தார். இதில் எலி தந்திரமாக எருதின் முதுகில் மறைந்து கொண்டு சவாரி செய்தது. ஆற்றின் மறு கரையை எருது அடைந்ததும், அதர்க்கு முன்பாகவே எலி கரையில் குதித்து வெற்றி பெற்றது. இதனால் எருது இரண்டாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டு, இரண்டாவது வருடச்சின்னமானது.

எருது சீன சோதிடத்தின் இரண்டாவது குறியாக வந்ததன் காரனமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

[தொகு] இயல்புகள்

   
நேரம் இரவு 1:00 முதல் 3:00 வரை
உரிய திசை வடக்கு, வட கிழக்கு
உரிய காலங்கள் குளிர்காலம் (சனவரி)
நிலையான மூலகம் நீர்
யின்-யான் யின்
ஒத்துப்போகும் விலங்குகள் எலி, சேவல், பாம்பு
ஒத்துப்போகாத விலங்குகள் புலி, குதிரை, ஆடு


[தொகு] இராசி அம்சங்கள்

   
இராசி எண்கள் 1, 5, 12, 15, 33, 35, 51, 53
இராசி நிறம் மஞ்சள், பச்சை
இராசிக் கல் அக்குவா மரின்

[தொகு] எருது வருட பிரபலங்கள்


[தொகு] எருது வருடத்தில் உதயமான நாடுகள்


[தொகு] இதையும் பார்க்கவும்

[தொகு] உசாத்துணை

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=எருது_(சீன_சோதிடம்)&oldid=978959" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்