ஆங் சான் சூ கீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஆங் சான் சூ கீ Aung San Suu Kyi |
|
|---|---|
![]() டாவு ஆங் சான் சூ கீ |
|
| பிறப்பு | ஜூன் 19 1945 (வயது 64) ரங்கூன், |
| வாழ்விடம் | யங்கோன், |
| அறியப்படுவது | சனநாயகத்துக்கான தேசிய அமைப்பின் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். |
| தொழில் | பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர்[1] |
| சமயம் | பௌத்தம் |
ஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi, பிறப்பு: ஜூன் 19, 1945 மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தற்போது மியான்மாரின் இராணுவ ஆட்சியின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர். 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார்[2]. சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாகரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார். 1992 இல் இந்திய அரசின் ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார். 1990இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொண்டது. ஆனாலும் இவர் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை.
