வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்
வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் அல்லது நிலையான அபிவிருத்திக்கான நோக்கங்கள் அல்லது உலகளாவிய குறிக்கோள்கள் அல்லது நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDGs), [1] என்பவை வருங்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது எட்டவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும். இவை ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டு, நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய நோக்கங்களாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவை 2015ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான புத்தாயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைப் பதிலீடு செய்வனவாகும்.[2]. இது, 2016 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான பதினைந்து ஆண்டு காலத்திற்குரிய 169 குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய 17 பன்னாட்டு வளர்ச்சிக்கான குறிக்கோள்களைக் கொண்ட தீர்மானம் ஆகும்[3].
வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்
[தொகு]செப்டெம்பர் 25, 2015 அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையிலுள்ள 193 நாடுகள் "நமது உலகத்தை உருமாற்றுதல்" (Transforming our world) என்ற தலைப்பிலான 2030 வளர்ச்சி செயல்நிரலுக்கு ஏற்பளித்தன. இச்செயல்நிரலில் அடங்கியுள்ள 17 குறிக்கோள்களாவன:[4][5]
- ஏழ்மை இன்மை: எல்லா இடங்களிலும், எல்லா வகைகளிலுமான ஏழ்மையை ஒழிக்க வேண்டும்.
- பசி இன்மை: பசியை ஒழித்தல், பட்டினியை விரட்டுதல், உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்து மேம்பாட்டையும் எய்துதல் மற்றும் நிலையான, வளங்குன்றா வேளாண்மையை ஊக்குவித்தல்.
- நல்ல ஆரோக்கியம்: எல்லோருக்கும், எல்லா வயதிலும், நலம்குன்றா உயிர்வாழ்வை உறுதிசெய்தலும், எல்லாருக்கும் எல்லா வயதிலும் நலவாழ்வை முன்னெடுத்தலும்.
- தரமான கல்வி: யாவரையும் உள்ளடக்கிய, சமவாய்ப்புள்ள, சமத்துவமான, தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மற்றும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுதுமான கல்வி கற்றலுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்.
- பாலின சமத்துவம்: பாலின சமத்துவம் அடைதல், மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தலும்.
- தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்: எல்லோருக்கும் நீரும், துப்புரவும் கிடைக்கச் செய்தலும் அவற்றை நீடிக்கத் தக்கவாறு சுகாதாரத்தின் நிலையான மேலாண்மை செய்தலும்.
- புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி: எல்லோருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் புதுமையான முறை ஆற்றல் (எரிசக்தி) கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளுதல்.
- நல்ல பணிகள் மற்றும் [பொருளாதாரம்|பொருளாதாரங்கள்]]: எல்லோருக்கும் நிலையான, யாவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான, நீடிக்கத்தகு பொருளாதார வளர்ச்சி, முழுமையான, ஆக்கவளம் கொண்ட, கண்ணியமான பணி.
- புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு: தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கிய மற்றும் வளங்குன்றாத் தொழில்மயமாதலை முன்னெடுத்தல், புதுமையாக்கத்தைப் பேணி வளர்த்தல்.
- சமமின்மையை குறைத்தல்: நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான சமமின்மையை, சமத்துவமின்மையைக் குறைத்தல்.
- நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்: நகரங்களையும், மனித சமூகங்களையும், குடியிருப்புகளையும் எல்லாரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பானதாக, தாங்கும் திறன் கொண்ட, நீடிக்கத்தக்கனவாக ஆக்குதல்.
- வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்: நிலையான, நீடிக்கத்தகு முறையிலான நுகர்வு மற்றும் உற்பத்தியை, உற்பத்தி வடிவங்களை உறுதிசெய்து கொள்ளுதல்.
- வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்.
- நிலைப்பாடுடைய பெருங்கடல்கள்: பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களைப் பேணுதலும், வளங்குன்றா வளர்ச்சிக்காக அவற்றை நீடிக்கத்தகுந்த விதத்தில் பயன்படுத்தலும்.
- நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு: நில சூழலியல் அமைப்புகளை பாதுகாத்து, மீட்டமைத்து, அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல், நீடிக்கத்தக்கவாறு காடுகளை நிலைப்பாடான முறையில் நிர்வகித்தல், பாலைவனமாதலுக்கு எதிராகப் போரிடல், நிலச் சீர்கேட்டைத் தடுத்து மீட்டமைத்தல், மற்றும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல்.
- அமைதி மற்றும் நீதி: நிலையான, வளங்குன்றா வளர்ச்சிக்காக அமைதியான, யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா நிலைகளிலும் சிறப்பான, பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குதல். செயல்திறமிக்க, பதிலளிக்கும் பொறுப்புடைய, யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துதல்.
- நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள்: நிலையான அபிவிருத்திக்காக செயல்பாட்டு முறைகளை பலப்படுத்துதல், வளங்குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Global Goals: Resource and Media Kits for the Sustainable Development Goals
- ↑ "A new sustainable development agenda". United Nations Development Programme. Archived from the original on 1 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Technical report by the Bureau of the United Nations Statistical Commission (UNSC) on the process of the development of an indicator framework for the goals and targets of the post-2015 development agenda – working draft" (PDF). March 2015. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
- ↑ "United Nations General Assembly Draft outcome document of the United Nations summit for the adoption of the post-2015 development agenda". UN. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
- ↑ "The Global Goals For Sustainable Development". Global Goals. பார்க்கப்பட்ட நாள் 2 September 2015.