படே குலாம் அலி கான்
உஸ்தாத் படே குலாம் அலி கான் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | சப்ரங் |
பிறப்பு | ஏப்ரல் 2, 1902 கசூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | ஏப்ரல் 25, 1968 ஐதராபாத்து |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | சாரங்கி கலைஞர், பாடகர் |
இசைத்துறையில் | 1923–1967 |
வெளியீட்டு நிறுவனங்கள் | எச்எம்வி, டைம்சு மியூசிக் |
உஸ்தாத் படே குலாம் அலி கான் (Bade Ghulam Ali Khan, தேவநாகரி:बड़े ग़ुलाम अली ख़ान, சாமுகி/உருது: بڑے غلام علی خان) (c. 2 ஏப்ரல் 1902 – 25 ஏப்ரல் 1968) பாட்டியாலா இசைப்பரம்பரையைச் சேர்ந்த இந்துசுத்தானி செவ்விசை பாடகர் ஆவார்.[1]
இளமையும் பின்னணியும்
[தொகு]கான் பிரித்தானிய இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் கசூர் என்னுமிடத்தில் பிறந்தார். பிரிவினைக்குப் பின்னர் கசூர் பாக்கித்தானில் உள்ளது.[2] இவரது தந்தை அலி பக்ஷ் கான், மேற்கு பஞ்சாபிய இசைக்குடும்பத்தில் பிறந்த புகழ்பெற்ற பாடகராவார்.
தமது ஐந்தாவது அகவையிலேயே தனது சித்தப்பா காலே கானிடமிருந்து சாரங்கி இசைக்கருவியை கற்கத் தொடங்கினார்.[3] பின்னர் மறுமணம் புரிந்திருந்த தனது தந்தையிடமிருந்து இசைப் பயிலத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் கானூன் எனப்படும் இசைக்கருவியை சீரமைத்தார். 21ஆம் அகவையில் பெனாரசு நகருக்கு இடம் பெயர்ந்தார்; அங்கு ஈராபாய் என்னும் நடனக் கலைஞருக்கு சாரங்கி இசைத்தார். பொதுமக்கள் இவரது இசையை இரசிக்கத் தொடங்கினர்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "A different experience". The Hindu (Chennai, India). 12 November 2007 இம் மூலத்தில் இருந்து 21 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140421141031/http://www.hindu.com/mp/2007/11/12/stories/2007111251220800.htm.
- ↑ http://www.dailytimes.com.pk/default.asp?page=story_2-1-2003_pg3_2
- ↑ "Tribute to a Maestro – Bade Ghulam Ali Khan". Archived from the original on 2016-01-09. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
வெளி இணைப்புகள்
[தொகு]- Manuel, Peter L (1990). Ṭhumrī in historical and stylistic perspectives. Motilal Banarsidass Publisher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0673-3.
{{cite book}}
: Unknown parameter|nopp=
ignored (help)