ராவணன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21: வரிசை 21:
}}
}}

'''''ராவணன்''''' என்பது [[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[மணிரத்னம்]] இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். [[சுஹாசினி|சுகாசினி மணிரத்தினம்]] இதற்கு உரையாடல் எழுதினார். [[விக்ரம்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[பிரித்விராஜ் சுகுமாரன்]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[பிரபு]], [[பிரியாமணி]] என்று மேலும் பலர் நடித்தனர். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் [[இந்தி]]யிலும் வெளியிடப்பட்டது.
'''ராவணன்''' என்பது [[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[மணிரத்னம்]] இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். [[சுஹாசினி|சுகாசினி மணிரத்தினம்]] இதற்கு உரையாடல் எழுதினார். [[விக்ரம்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[பிரித்விராஜ் சுகுமாரன்]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[பிரபு]], [[பிரியாமணி]] என்று மேலும் பலர் நடித்தனர். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் [[இந்தி]]யிலும் வெளியிடப்பட்டது.

== திரைக்கதை ==
== திரைக்கதை ==
வரிசை 31: வரிசை 31:
வீராவின் தங்கைக்கும் அவளுடன் கல்லூரியில் படித்தவனுக்கும் திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து தேவ் வீராவை சுட, கழுத்தில் குண்டு காயத்துடன் வீரா தப்பிக்கிறான். அவன் தங்கை வெண்ணிலாவை விசாரணைக்கு தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் [[பாலியல் வன்முறை]]க்கு உள்ளாக்குகின்றார்கள். சில நாட்கள் கழித்து வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதனால், காவல்துறை அதிகாரி தேவைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை([[ஐஸ்வர்யா ராய்]]) கடத்திப் போகிறான் வீரா. ராகினியுடன் காட்டிற்குள் வந்த அனைவரையும் தாக்கிவிட்டு அவளை கடத்திச்செல்கிறான் வீரா. ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான்.
இதனால், காவல்துறை அதிகாரி தேவைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை([[ஐஸ்வர்யா ராய்]]) கடத்திப் போகிறான் வீரா. ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான்.

ராகினியை மீட்க வரும் காவல்துறைக்கும், வீராவின் ஆட்களுக்கும் நடக்கும் சண்டை நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் வீராவின் தம்பி சமாதானம் பேச செல்கிறான். ஆனால் வீராவின் தம்பியையும் தேவ் கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் காவல்துறையினரும் கடுமையாக மோதுகிறார்கள். வீராவின் தாக்குதலில் காவல்துறை கடும் தோல்வியை சந்திக்கிறது. கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான தேவைக் கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பி விடுகிறான்.

00:12, 16 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

ராவணன்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்தினம்
சாரதா திரிலோக்
கதைமணிரத்தினம் (திரைக்கதை)
சுகாசினி மணிரத்தினம் (வசனம்)
கம்பரின் கதை
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவிக்ரம்
ஐஸ்வர்யா ராய்
பிரித்விராஜ்
கார்த்திக்
பிரபு
பிரியாமணி
ஒளிப்பதிவுவி. மணிகண்டன்
சந்தோஷ் சிவன்
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்மதராஸ் டாக்கீஸ்
விநியோகம்ரிலையன்ஸ்
சொனி பிக்சர்ஸ்
வெளியீடு18 ஜூன் 2010
ஓட்டம்127 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்57 கோடி

ராவணன் என்பது 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். சுகாசினி மணிரத்தினம் இதற்கு உரையாடல் எழுதினார். விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் கார்த்திக், பிரபு, பிரியாமணி என்று மேலும் பலர் நடித்தனர். ஏ. ஆர். ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் இந்தியிலும் வெளியிடப்பட்டது.

திரைக்கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில், மலையோர பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் வீரா (விக்ரம்). அவன் அவனின் அண்ணன் சிங்கம் (பிரபு), தம்பி சக்கரை (சித்தார்த்), தங்கை வெண்ணிலா (பிரியாமணி) உடன் வாழ்ந்து வருகிறான். அவன் வாழும் பகுத்தியின் ஊர்மக்கள் அனைவரும் அவன் சொல்லை கேட்கின்றனர் . ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன்,கடத்தல்காரன் .

பலமுறை காவல்துறை முயன்றும் அவனை காவல்துறையால் கைது செய்ய முடியாததால் அவனை வேட்டையாட தேவ் (பிரித்விராஜ்) என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வருகிறது. பல மாதங்கள் முயற்சிக்கு பின் தேவின் குழுவிற்கு ஒரு வழி கிடைக்கிறது.

வீராவின் தங்கைக்கும் அவளுடன் கல்லூரியில் படித்தவனுக்கும் திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து தேவ் வீராவை சுட, கழுத்தில் குண்டு காயத்துடன் வீரா தப்பிக்கிறான். அவன் தங்கை வெண்ணிலாவை விசாரணைக்கு தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றார்கள். சில நாட்கள் கழித்து வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதனால், காவல்துறை அதிகாரி தேவைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை(ஐஸ்வர்யா ராய்) கடத்திப் போகிறான் வீரா. ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான்.

ராகினியை மீட்க வரும் காவல்துறைக்கும், வீராவின் ஆட்களுக்கும் நடக்கும் சண்டை நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் வீராவின் தம்பி சமாதானம் பேச செல்கிறான். ஆனால் வீராவின் தம்பியையும் தேவ் கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் காவல்துறையினரும் கடுமையாக மோதுகிறார்கள். வீராவின் தாக்குதலில் காவல்துறை கடும் தோல்வியை சந்திக்கிறது. கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான தேவைக் கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பி விடுகிறான்.

ஏற்பட்ட தோல்விக்கும் இழப்பிற்கும் காரணமாக, தேவ் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார். கணவனோடு தொடருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள்.[1]

பழைய இடத்தில் வீராவைச் சந்திக்கும் ராகினி, தன் கணவனின் சந்தேக உணர்வை வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறாள். ராகினியை தன் இடத்திற்குப் பின் தொடரவேன்டியே, இந்த சூழ்ச்சியில் தேவ் ஈடுபட்டது வீராவிற்கு புரிகிறது. காவல் படையின் உதவியுடன் வீராவைச் சுற்றி வளைக்கும் தேவ், துப்பாக்கி குண்டுகளால் துளைப்பதை வீரா, வீரமாக எதிர்கொண்டு மரணிக்கிறான். மலையில் இருந்து விழும் வீராவை, ராகினி அலறலுடன் பிரிகிறாள். 'நான் வருவேன்' என்ற பாடலுடன் திரைப்படம் முடிவுக்கு வருகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவணன்_(திரைப்படம்)&oldid=3280602" இலிருந்து மீள்விக்கப்பட்டது