எடையூர்
எடையூர் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
எடையூர் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமம்[4]. மேலும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்[5]. பட்டுக்கோட்டை - நாகப்பட்டினம் பேருந்து பாதையில் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டைச் சாலை நடுவே அமைந்துள்ளது. எடையூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையும், 40 கி.மீ. தொலைவில் வேளாங்கண்ணியும், 54 கி.மீ. தொலைவில் திருவாரூரும் அமைந்துள்ளன. அம்மளூர், சிவராமன் நகர், சோத்திரியம், குமாரபுரம் போன்ற சிறு கிராமங்களை உள்ளடக்கிய பெரிய கிராமம்.
இக்கிராமத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்டது. இங்கு, 2,000 பேர் தினந்தோறும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். இந்தக் கிராமத்தின் எழுத்தறிவு 82.30 சதவீதம்[சான்று தேவை].
தொழில்
[தொகு]இங்குள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர். கால்நடை வளர்த்தல், மட்பாண்டம் செய்தல், தச்சுத்தொழில் போன்ற தொழில்களை செய்வோரும் உள்ளனர்.
கோயில்கள்-மருத்துவமனைகள்
[தொகு]தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை இங்கு உள்ளது. இந்தக் கிராமத்தில் அருள்மிகு பொன்னவரத்தம்மன், வெங்கடாஜலபதி, விநாயகர் போன்ற கோயில்கள் உள்ளன. இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.
சுற்றுலா
[தொகு]இந்தக் கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.
வெளி இணைப்புகள்
[தொகு]- Udhayamarthandapuram Bird Sanctuary, தமிழ்நாடு வனத்துறை