வேலி மூங்கில்
வேலி மூங்கில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | J. betonica
|
இருசொற் பெயரீடு | |
Justicia betonica L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
வேலி மூங்கில் (Justicia betonica) என்பது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது முண்மூலிகைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு புதர் ஆகும். இது அணிலின் வால், காகித சிறகு போன்ற பொதுப் பெயர்களாலும் அழைக்கபடுகிறது. [2]
வாழிடப் பகுதி
[தொகு]இந்த தாவரமானது அங்கோலா, வங்காளதேசம், போட்சுவானா, தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, எத்தியோப்பியா, இந்தியா, கென்யா, மலாவி, மாலி, மொசாம்பிக், செனிகல், நமீபியா, சூடான், இலங்கை தெற்கு சூடான், தன்சானியா, உகாண்டா, சாம்பியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, சிம்பாப்வே ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது.
இந்த இனம் கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கயானா, பனாமா, சொலமன் தீவுகள், ஹவாய், நியூ கலிடோனியா போன்ற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இது சீனா, ஆத்திரேலியா, மலேசியா, பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியாவின் வெப்பமண்டல பகுதிகளிலும் காணப்படுகிறது. [3]
இது தரிசு நிலங்கள், வேலிகள், நீரறு பள்ளங்கள் போன்ற இடங்களில் காணப்படும் தாவரமாகும். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Justicia betonica". Global Biodiversity Information Facility (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
- ↑ Squirrel's tail at the Encyclopedia of Life
- ↑ Prakash, Anand; Rao, Jagadiswari (2018-02-02). Botanical Pesticides in Agriculture (in ஆங்கிலம்). CRC Press. p. 475. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-46318-8.
- ↑ Khare, C. P. (2008-04-22). Indian Medicinal Plants: An Illustrated Dictionary (in ஆங்கிலம்). Springer Science & Business Media. pp. 349–350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-70637-5.