வேற்றிடச்சூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேறிடச்சூல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Ectopic.png
Ectopic by Reinier de Graaf
அ.நோ.வ-10 O00.
அ.நோ.வ-9 633
நோய்களின் தரவுத்தளம் 4089
MedlinePlus 000895
eMedicine med/3212  emerg/478 radio/231
பாடத் தலைப்பு D011271

வேற்றிடச்சூல் (Ectopic pregnancy) என்பது, கருக்கட்டலின் பின்னர் கருவானது கருப்பை தவிர்ந்த வேறு இடங்களில் பதியும் சிக்கலான ஒரு நிலமையைக் குறிக்கும்[1]. பொதுவாக அவ்வாறு பதியும் கரு முழு வளர்ச்சியடைந்து குழந்தையாக உருவாவதில்லை. தவிரவும் இப்படியான நிலை தாய்க்கு மிகவும் அபாயமானதும், உயிருக்கே ஊறு விளைவிக்கவல்லதுமாகும். இதனால் உள்ளான குருதிப்பெருக்கு ஏற்படுதலே பொதுவான சிக்கலாகும்.
பொதுவாக பாலோப்பியன் குழாயிலேயே கரு பதியும். அதனை குழாய் கருத்தரிப்பு எனக் கூறுவர். அது தவிர, கருப்பை வாய், சூலகம் போன்ற இடங்களிலும் கரு பதிவதுண்டு. இப்படியான நிலைமைகளில் அவசர சிகிச்சைப் பிரிவின் உதவியை நாடுவது உடனடித் தேவையாகும். சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாவிடின், தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும். 1% மான கருத்தரிப்பு இவ்வாறு வேற்றிடச்சூல் நிலையிலுள்ளதாகவும், அவற்றில் 98% மானவை பலோப்பியன் குழாயிலேயே நிகழ்வதாகவும் அறியப்படுகிறது.
மிகவும் முன்னேற்றமடைந்த நோய் கண்டறியும் முறைகளாலேயே இதனை ஆரம்ப கருத்தரிப்புக் காலத்தில் கண்டறிய முடிகிறது. இருப்பினும், உலகில் கர்ப்பிணிப்பெண்ணில் ஏற்படும் சிக்கல்கள், இறப்பிற்கு இந்த வேற்றிடசூலும் ஒரு முக்கிய காரணியாகவே உள்ளது.
இவ்வாறு பலோப்பியன் குழாயில் கருவானது பதியும்போது, குழாயின் உட்சுவரில் ஆழமாகச் செல்வதால் குருதிப்பெருக்கு ஏற்படும். இவ்வகை அளவற்ற குருதிப்பெருக்கினால், கர்ப்பிணிப் பெண்ணிற்கு அதிக ஆபத்து ஏற்படுவதுடன், சில சமயம் இறக்கவும் நேரிடலாம். இப்படியான அதிகரித்த குருதிப் பெருக்கானது, வேற்றிடச்சூலை ஆரம்ப நிலைகளிலேயே கண்டு பிடிக்கத் தவறுவதாலோ, அல்லது கருப்பை க்கு மிக அண்மையாக இருக்கும் குழாய்ப் பகுதியில் இவ்வாறான வேற்றிடச்சூல் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட ஒரு தமனியை பாதிப்பதாலோ ஏற்படலாம்.


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Page EW, Villee CA, Villee DB. Human Reproduction, 2nd Edition. W. B. Saunders, Philadelphia, 1976. p. 211. ISBN 0-7216-7042-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேற்றிடச்சூல்&oldid=1574060" இருந்து மீள்விக்கப்பட்டது