உள்ளடக்கத்துக்குச் செல்

இதயத் துடிப்பு மிகைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரைந்த இதயத்துடிப்பு
நிமிடத்திற்கு 100 துடுப்புகளைக் காட்டும் ஒரு இதய துடிப்பலைஅளவி.
ஐ.சி.டி.-10I47.-I49., R00.0
ஐ.சி.டி.-9427, 785.0
MeSHD013610

இதயத்துடிப்பு மிகைப்பு அல்லது விரைந்த இதயத்துடிப்பு (tachycardia) என்பது அசாதாரணமாக இதயம் விரைந்து துடிப்பதாகும். இதற்கு பலகாரணங்கள் இருக்கக் கூடும். நோயின் காரணமாகவும் சில மருந்துகள் காரணமாகவும் உடற்பயிற்சியின் போதும் அதிக மன உளைச்சல் காரணமாகவும் ஏற்படலாம். இயல்பான இதயத் துடிப்பு விநாடிக்கு 70 வரையில் இருக்கிறது. இதயத் துடிப்பு (நாடி) 100க்கும் அதிகமாக இருக்குமாயின் அதை மிகைத் துடிப்பு நோய் எனவும் 60க்கும் குறைந்தால் குறைத் துடிப்பு நோய் (bradycardia) எனவும் அழைக்கப்படும்.

வெவ்வேறு வயதினருக்கு விரைந்த இதயத்துடிப்புகள் கீழே காட்டப்பட்டுள்ளது:[1]

  • 1–2 நாட்கள்: > 159 துடிப்புகள்/நிமி (bpm)
  • 3–6 நாட்கள்: >166 து/நிமி
  • 1–3 வாரங்கள்: >182 து/நிமி
  • 1–2 மாதங்கள்: >179 து/நிமி
  • 3–5 மாதங்கள்: >186 து/நிமி
  • 6–11 மாதங்கள்: >169 து/நிமி
  • 1–2 ஆண்டுகள்: >151 து/நிமி
  • 3–4 ஆண்டுகள்: >137 து/நிமி
  • 5–7 ஆண்டுகள்: >133 து/நிமி
  • 8–11 ஆண்டுகள்: >130 து/நிமி
  • 12–15 ஆண்டுகள்: >119 து/நிமி
  • >15 ஆண்டுகள் – வயது வந்தோர்: >100 து/நிமி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Custer JW, Rau RE, eds. Johns Hopkins: The Harriet Lane Handbook. 18th ed. Philadelphia, PA: Mosby Elsevier Inc; 2008. Data also available through eMedicine: Pediatrics, Tachycardia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்_துடிப்பு_மிகைப்பு&oldid=2746371" இலிருந்து மீள்விக்கப்பட்டது