சிறுநீர்ப்பாதைத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீர்ப்பாதைத் தொற்று
நூண்ணோக்கி மூலம் பார்க்கும் போது சிறுநீர்ப்பாதைத் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் சிறுநீரில் ஏராளமான வெள்ளை அணுக்கள் தெரியும் காட்சி.
சிறப்புதொற்று நோய்
அறிகுறிகள்சிறுநீர் கழிக்கும் போது வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வராத போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என எண்ணுவது.[1]
இறப்புகள்196,500 (2015)[2]

சிறுநீர்ப்பாதைத் தொற்று (UTI) என்பது சிறுநீரகப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு தொற்றுநோயாகும்.[1] சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகக்குழாய், ஆகிய பகுதிகளில் பாக்டீரியா எனப்படும் தீநுண்மம் தாக்குவதால் சிறுநீர்ப்பாதைத் தொற்று ஏற்படுகிறது. இந்நோய்த் தொற்றானது சிறுநீரக அமைப்பின் கீழ்ப்பகுதியில் (சிறுநீர்ப்பையில்) ஏற்படில் இதனை ”சிறுநீர்ப்பைத் தொற்று” எனப்படுகிறது. இது ஆரம்பநிலையாகும். மேல்பகுதியில் ஏற்படின் ”சிறுநீரகத் தொற்று எனவும்” அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள் :

[3]சிறுநீர் கழிக்கையில் வலி ஏற்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல் ஆகியவை சிறுநீர்ப்பைத் தொற்றின் அறிகுறிகளாகும்[1] இந்த அறிகுறிகளுடன் கூடவே காய்ச்சல், அடிவயிற்று வலி ஆகியவை இருப்பின் சிறுநீரகத் தொற்று என அறியலாம்.[3] சில நேரங்களில் அரிதாக சிறுநீர் இரத்தத்துடன் வெளியேறும்.[4] மிக இளம் வயது அல்லது வயதானோர்க்கு இவ்வறிகுறிகள் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக இருக்கும்.[1][5]

ஈக்கோரியா கோலி எனும் பாக்டீரியா தாக்குவதால் பொதுவாகச் சிறுநீர்ப் பாதைத் தொற்று ஏற்படுகிறது. சில நேரங்களில் பிற தீநுண்மங்களாலும் பூஞ்சைகளாலும் ஏற்படலாம்.[6] பெண்களின் உடற்கூறு, பாலியல் உறவு, நீரிழிவு, உடற்பருமன், குடும்பத்தில் யாருக்கேனும் இத்தொற்று பாதித்திருத்தல் ஆகியவை சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்கான ஆபத்துக் காரணிகளாகும்.[6] பாலியல் உறவு இந்நோய்க்கான மிகத் தீவிரக் காரணியாக இருந்தாலும் பாலியல் மூலம் பரவும் தொற்றுநோயாக சிறுநீர்ப்பைத் தொற்று வகைப்படுத்தப்படவில்லை.[7] சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்படின் அதனைத் தொடர்ந்து சிறுநீரகத் தொற்றும் ஏற்படுகிறது. இது இரத்தம் மூலம் பரவும் தொற்றினால் கூட ஏற்படலாம்.[8]

ஆரோக்கியமான இளம் பெண்களுக்குக் காணப்படும் இந்நோய்க்கான தனித்த, தெளிவான அறிகுறிகுறிகள் மூலம் இந்நோய்த் தொற்று இருப்பதைக் கண்டறியலாம்.[9] ஆனால் தெளிவற்ற, அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்நோய்த் தொற்றினைக் கண்டறிவது கடினம். ஏனெனில் இந்நோய்த் தொற்று இல்லாமலும் அப்பாக்டீரியாக்கள் அங்கு இருக்கக்கூடும்.[10] சிக்கலான சந்தர்ப்பங்களில் அல்லது சிகிச்சை பலனளிக்கவில்லை என்றாலோ சிறுநீர்ச் சோதனை(urine culture) செய்வது பயனுள்ளாத இருக்கும்.[11]

தடுக்கும் முறைகள் மற்றும் சிகிச்சை :

ஆரம்ப நிலையில் சிக்கலற்ற சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்கு, குறுகிய நாட்களே உட்கொள்ளப்படும் நைட்ரோஃப்யூரண்டைன், ட்ரைமெத்தோப்ரிம், சல்ஃபாமெத்தாசோல் ஆகிய நோய்க்கொல்லி மருந்துகள் வழங்கப்படுகின்றன.[4] இந்த நிலையில் அதிகமான நோய்க்கொல்லி மருந்துகளை உண்பது குறிப்பாக சல்ஃபாமெத்தாசோல் உட்கொள்வதற்கு எதிர்ப்பு உள்ளது.[1] தீவிரமான தொற்றுக்கு அதிக நாட்கள் உட்கொள்ளவேண்டிய அல்லது நரம்புவழி செலுத்தக்கூடிய நோய்க்கொல்லிகள் தேவை.[4] நோய்த்தொற்று அறிகுறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை நீடிக்குமாயின் நோய் கண்டறியும் பரிசோதனை அவசியமானதாகும்.[11]

ஒருவருக்கு தீநுண்மம் அல்லது இரத்த வெள்ளையணுக்கள் சிறுநீரில் தென்பட்டு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகுறிகள் ஏதுமில்லையெனில் அவர்களுக்கு நோய்க்கொல்லி மருந்துகள் தேவையற்றது.[12] கருவுற்ற காலத்தில் ஏற்படும் தொற்று இதற்கு விதிவிலக்காகும்.[13] அடிக்கடி தொற்று ஏற்படுவோர் மிகக்குறுகியகால நோய்க்கொல்லி அல்லது நீண்ட காலம் உட்கொள்ள வேண்டிய உயிர்க்கொல்லி மருந்துகளை எடுத்துக்கொள்வது நோய்த்தடுப்புகான நிவாரண மருந்தாகப் பயன்படுகிறது.[14]

ஆண்டுதோறும் சுமார் 150 மில்லியன் மக்கள் சிறுநீர்ப்பாதைத் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்[6] பொதுவாக ஆண்களைவிடப் பெண்களே இதற்கு அதிகம் பாதிப்படைகின்றனர்.[4] பெண்களிலும் குறிப்பாக தீநுண்மத்தால் பாதிக்கப்படுவோர் அதிக அளவில் உள்ளனர்.[15] ஆண்டுதோறும் 10 விழுக்காட்டிற்கும் மேலான பெண்கள் சிறுநீர்ப்பாதைத் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் பாதிப்பெண்களுக்குமேல் அவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் இந்நோய்த்தொற்று ஏற்படுகிறது.[4][9]

பொதுவாக 16 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அடிக்கடி இத்தொற்று ஏற்படுகின்றது.[4] சிறுநீர்ப்பாதைத் தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுவது பொதுவானதாகும்.[4] சிறுநீர்ப்பாதைத் தொற்று பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது. கி.பி 1550 ஆண்டு என்று நாள் குறிப்பிடப்பட்ட ஏப்ரஸ் பாப்பிரைஸ் என்ற நூலில் முதன்முதலாக சிறுநீர்ப்பாதைத் தொற்று குறித்து விளக்கத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[16]

Urine may contain pus (a condition known as pyuria) as seen from a person with sepsis due to a urinary tract infection.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Urinary Tract Infection". CDC. April 17, 2015. Archived from the original on 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
 2. GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/S0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
 3. 3.0 3.1 Lane, DR; Takhar, SS (August 2011). "Diagnosis and management of urinary tract infection and pyelonephritis.". Emergency Medicine Clinics of North America 29 (3): 539–52. doi:10.1016/j.emc.2011.04.001. பப்மெட்:21782073. https://archive.org/details/sim_emergency-medicine-clinics-of-north-america_2011-08_29_3/page/539. 
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Urinary tract infections in women.". European Journal of Obstetrics, Gynecology, and Reproductive Biology 156 (2): 131–6. June 2011. doi:10.1016/j.ejogrb.2011.01.028. பப்மெட்:21349630. 
 5. Woodford, HJ; George, J (February 2011). "Diagnosis and management of urinary infections in older people". Clinical Medicine 11 (1): 80–3. doi:10.7861/clinmedicine.11-1-80. பப்மெட்:21404794. http://www.clinmed.rcpjournal.org/content/11/1/80.full.pdf. பார்த்த நாள்: 2018-10-07. 
 6. 6.0 6.1 6.2 Flores-Mireles, AL; Walker, JN; Caparon, M; Hultgren, SJ (May 2015). "Urinary tract infections: epidemiology, mechanisms of infection and treatment options.". Nature Reviews. Microbiology 13 (5): 269–84. doi:10.1038/nrmicro3432. பப்மெட்:25853778. 
 7. Study Guide for Pathophysiology (5 ). Elsevier Health Sciences. 2013. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323293181 இம் மூலத்தில் இருந்து 2016-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160216173856/https://books.google.com/books?id=YvskCwAAQBAJ&pg=PA272. 
 8. Introduction to Medical-Surgical Nursing. Elsevier Health Sciences. 2015. பக். 909. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781455776412. https://books.google.com/books?id=mi3uBgAAQBAJ&pg=PA909. 
 9. 9.0 9.1 Nicolle LE (2008). "Uncomplicated urinary tract infection in adults including uncomplicated pyelonephritis". Urol Clin North Am 35 (1): 1–12, v. doi:10.1016/j.ucl.2007.09.004. பப்மெட்:18061019. 
 10. Jarvis, William R. (2007). Bennett & Brachman's hospital infections. (5th ). Philadelphia: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. பக். 474. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780781763837 இம் மூலத்தில் இருந்து 2016-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160216175245/https://books.google.com/books?id=tuy4zw5G4v4C&pg=PA474. 
 11. 11.0 11.1 "Diagnosis and treatment of acute pyelonephritis in women.". American Family Physician 84 (5): 519–26. 2011-09-01. பப்மெட்:21888302. 
 12. Ferroni, M; Taylor, AK (November 2015). "Asymptomatic Bacteriuria in Noncatheterized Adults.". The Urologic Clinics of North America 42 (4): 537–45. doi:10.1016/j.ucl.2015.07.003. பப்மெட்:26475950. 
 13. Glaser, AP; Schaeffer, AJ (November 2015). "Urinary Tract Infection and Bacteriuria in Pregnancy.". The Urologic Clinics of North America 42 (4): 547–60. doi:10.1016/j.ucl.2015.05.004. பப்மெட்:26475951. 
 14. "Recurrent uncomplicated cystitis in women: allowing patients to self-initiate antibiotic therapy.". Rev Prescire 23 (146): 47–9. Nov 2013. பப்மெட்:24669389. 
 15. Colgan, R; Williams, M (2011-10-01). "Diagnosis and treatment of acute uncomplicated cystitis.". American Family Physician 84 (7): 771–6. பப்மெட்:22010614. 
 16. Al-Achi, Antoine (2008). An introduction to botanical medicines : history, science, uses, and dangers. Westport, Conn.: Praeger Publishers. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-35009-2 இம் மூலத்தில் இருந்து 2016-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160528215426/https://books.google.com/books?id=HMzxKua4_rcC&pg=PA126.