இடமகல் கருப்பை அகப்படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


Endometriosis
Endometriosis.jpg
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமகளிர் நலவியல்
ஐ.சி.டி.-10N80.
ஐ.சி.டி.-9617.0
OMIM131200
நோய்களின் தரவுத்தளம்4269
MedlinePlus000915
ஈமெடிசின்med/3419 ped/677 emerg/165
Patient UKஇடமகல் கருப்பை அகப்படலம்
MeSHD004715

இடமகல் கருப்பை அகப்படலம் (எண்ட்ரோ, "உள்பக்கம்" மற்றும் மெட்ரா, "கருப்பை") என்பது பெண்களில் காணப்படும் ஒரு மருத்துவ நிலையாகும். இதில் கருப்பையகச் செல்கள் போன்ற செல்கள் கருப்பைக் குழிக்கு வெளிப்புறத்தில் காணப்படும் மற்றும் விரிவடையும் தன்மை காணப்படும். கருப்பைக் குழியின் ஓரத்தில் கருப்பையகச் செல்கள் அமைந்துள்ளன. அவை பெண் ஹார்மோன்களின் பாதிப்பிற்குரியவை. கருப்பைக்கு வெளியே காணப்படும் இந்த கருப்பையகச் செல் போன்ற செல்கள் (இடமகல் கருப்பை அகப்படலம்) ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. மேலும் கருப்பையில் உள்ள மற்ற செல்களைப் போலவே இவையும் பதில்வினை புரிகின்றன. இதன் அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சியின் போது மிகவும் தீவிரமாக இருக்கும்.

இடமகல் கருப்பை அகப்படலம் வழக்கமாக இனப்பெருக்க காலங்களிலேயே காணப்படுகிறது. பெண்களில் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு இது ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இதன் அறிகுறிகள் செயலிலுள்ள இடமகல் கருப்பை அகப்படலத்தின் இடத்தைப் பொறுத்து அமைகின்றன. அதன் பிரதான ஆனால் ஒட்டுமொத்தமல்லாத அறிகுறி பல்வேறு விதமான இடுப்பு வலியாகும். இடமகல் கருப்பை அகப்படலம் கருவுறாமை கொண்ட பெண்களில் பொதுவானதாகக் பரணிடப்பட்டது 2010-01-07 at the வந்தவழி இயந்திரம் காணப்படுகிறது.

அறிகுறிகள்[தொகு]

இடுப்பு வலி[தொகு]

தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏற்படும் இடுப்பு வலி இடமகல் கருப்பை அகப்படலத்தின் ஒரு பிரதான அறிகுறியாகும். வலியானது மிதமானது முதல் இடுப்பின் இரு புறங்கள் முதல் அடி முதுகு மற்றும் உடல் கீழ்ப்பகுதி வரையிலும் சில நேரம் கால்கள் வரையிலும் ஏற்படும் தீவிரமான வலி வரை இருக்கலாம். ஒரு பெண் உணரும் வலியின் அளவு எவ்வளவு உள்ளது என்பது இடமகல் கருப்பை அகப்படலத்தின் அளவு அல்லது நிலை (1 முதல் 4 வரை) ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில பெண்களுக்கு, பரவலான இடமகல் கருப்பை அகப்படலம் அல்லது தழும்புகளை ஏற்படுத்தக்கூடிய இடமகல் கருப்பை அகப்படலம் ஆகியவை இருப்பினும் அவர்கள் சிறிதளவு வலியையே உணரவும் செய்யலாம். மற்றொரு புறம், இடமகல் கருப்பை அகப்படலம் சிறிய அளவிலான பகுதிகளில் மட்டுமே இருந்தாலும் கூட அவர்களுக்குக் கடுமையான வலி இருக்கலாம். இருப்பினும், நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து வலி தீவிரமடைவதில்லை. இடமகல் கருப்பை அகப்படலம் தொடர்பான வலியின் அறிகுறிகளில் பின்வருவனவும் அடங்கும் [2]:

 • டிஸ்மெனோரியா – வலிமிக்க, சில நேரங்களில் செயலிழக்கச் செய்யும் தசைப்பிடிப்பு காணப்படலாம். நேரம் அதிகரிக்கையில் வலி மிகவும் மோசமாகலாம் (அதிகரிக்கும் வலி), இடுப்புடன் தொடர்புடைய அடி முதுகும் வலிக்கலாம்
 • நாள்பட்ட இடுப்பு வலி – வழக்கமாக அடிமுதுகு வலி அல்லது வயிற்று வலியுடன் சேர்ந்து காணப்படும்
 • டிஸ்பரேனியா – பாலுறவின் போது வலி
 • டைசீஸியா – மலங்கழிக்கும் போது வலி
 • டைசூரியா – அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும் உணர்வு மற்றும் சில நேரங்களில் மலம் கழிக்கும் போது வலி ஏற்படுதல்

கருவுறாமை[தொகு]

கருவுறாமை குறைபாடுள்ள பல பெண்களுக்கு இடமகல் கருப்பை அகப்படலம் காணப்படுகிறது. இடமகல் கருப்பை அகப்படலம் உடற்கூறியல் திரிபுகளுக்கும் கூடுதலுக்கும் (பாதிப்பிலிருந்து குணமடைந்த பின்னர் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கிடையே இழைத் தன்மை கொண்ட பட்டைகள் தோன்றுதல்) வழிவகுக்கலாம் என்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பைப் புரிந்துகொள்ள முடியும். இருப்பினும், இடமகல் கருப்பை அகப்படலத்தின் அளவு வரம்புக்குட்பட்டிருக்கும் நிலையில் கருவுறாமைக்கும் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கும் இடையே உள்ள தொடர்பு இன்னும் புதிராகவே உள்ளது.[3] இடமகல் கருப்பை அகப்படலம் தொடர்பான காயங்கள் சில காரணிகளை வெளியிடுகின்றன, இவை இனச் செல்கள் அல்லது கருக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கலாம் அல்லது மாறாக, பிற காரணங்களால் கருவுறாமல் இருக்கும் பெண்களில் பின்னாளில் இடமகல் கருப்பை அகப்படலம் உருவாகலாம், மேலும் இது இரண்டாம்பட்ச நிகழ்வாகவே உள்ளது எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தினாலேயே இது போன்ற நிகழ்வுகளில் இடமகல் கருப்பை அகப்படலம்-தொடர்புள்ள கருவுறாமையைப் [4] பேச வேண்டியது அவசியமாகிறது.

மற்றவை[தொகு]

பிற அறிகுறிகளில் பின்வருவனவும் உள்ளடங்கும்:

 • குமட்டல், மயக்கம், தலை சுற்றுதல், கிறுகிறுத்தல்[சான்று தேவை] அல்லது வயிற்றுப்போக்கு—குறிப்பாக மாதவிடாய்க் காலத்திற்கு முன்பு அல்லது மாதவிடாய் ஏற்படும் போது அல்லது
 • தசைப்பிடிப்புடன் கூடிய சோர்வு[சான்று தேவை]
 • சிறிய அல்லது பெரிய இரத்தக் கட்டிகளுடன் கூடிய கடினமான அல்லது நீண்ட கட்டுப்படுத்த முடியாத மாதவிடாய்
 • சில பெண்களுக்கு மனநிலை மாற்றத் தொடர்ச்சியும் ஏற்படலாம்[சான்று தேவை]
 • கால்கள் மற்றும் தொடைகளில் அதிக வலி
 • முதுகு வலி
 • பாலுறவின் போது மிதமானது முதல் அதிக வலி ஏற்படுதல்
 • அடிக்கடி ஏற்படும் அண்டக நீர்க்கட்டிகளால் அதிக வலி[சான்று தேவை]
 • ஒரு அண்டகத்தை இடுப்புச் சுவர்ப் பகுதியின் பக்கவாட்டில் ஒட்டிப் பிணைக்கும் ஒட்டுதல்களால் ஏற்படும் வலி அல்லது அண்டகங்கள் குடல், கருப்பை சிறுநீர்ப்பை ஆகிய பகுதிகளிடையே விரிவடைவதால் வலி ஏற்படுதல்
 • மாதவிடாயுடன் அல்லது மாதவிடாயின்றி அதிக வலி ஏற்படுதல்
 • மிதமானது முதல் அதிகமானது வரையிலான மலச்சிக்கல் [5]
 • மாதவிடாய்க்கு முன்பு கரையேற்படுதல்
 • மிதமானது முதல் தீவிரமானது வரையிலான காய்ச்சல்

மேலும், இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதாக அறுதியிடப்பட்ட பெண்களுக்கு தூண்டும் தன்மைகொண்ட குடல் நோய்க்குறித்தொகுப்பைப் போன்றிருக்கும் வயிற்றுகுடல் நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்படலாம்

இடமகல் கருப்பை அகப்படல நீர்க்கட்டிகள் தோன்றிய நோயாளிகளுக்கு மருத்துவ அவசரமாக கடும் வயிற்றழற்சி காணப்படலாம்.

இந்தப் பகுதிகளில் அவ்வப்போது வலியும் ஏற்படலாம். இந்த நீர்க்கட்டிகள் சிறுநீர்ப்பையிலும் தோன்றலாம் (இருப்பினும் இது அரிதான நிகழ்வாகும்), மேலும் இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலியும் சில நேரங்களில் இரத்தம் வெளியேறுதலும் கூட ஏற்படலாம். இடமகல் கருப்பை அகப்படலம் குடலுக்கும் பரவலாம்[சான்று தேவை] இதனால் மலங்கழித்தலின் போது வலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

மாதவிடாயின் போது வலி ஏற்படுதலுடன், மாதவிடாய்க்கான தேதிகளில் மட்டுமின்றி இடமகல் கருப்பை அகப்படலத்தினால் ஏற்படும் வலிகள் பிற நாள்களிலும் ஏற்படலாம். அண்டவிடுப்பின் போது வலி ஏற்படலாம், பிணைப்புகளுடன் தொடர்புடைய வலிகள், இடுப்புக் குழிப் பகுதியில் உண்டான அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி, மலங்கழித்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் மற்றும் உடற்பயிற்சி போன்ற பொதுவான உடலியக்கத்தின் போது ஏற்படும் வலி, நிற்பது அல்லது நடத்தல் ஆகிய செயல்களின் போது வலி, உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுதல் ஆகியனவும் இருக்கலாம். பெரும்பாலான கொடுமையான வலி மாதவிடாயின் போதே இருக்கும், இதனால் பல பெண்கள் மாதவிடாய் என்றாலே பயப்படுகின்றனர். வலியானது மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்போ மாதவிடாயின் போதும் அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகோ தொடங்கலாம் அல்லது அது தொடர்ந்து மாறாமலும் இருக்கலாம். இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு அறியப்பட்ட நிவர்த்தி முறைகள் உள்ளன.[சான்று தேவை]

நோய் பரவல்[தொகு]

இடமகல் கருப்பை அகப்படலம் பூப்பெய்தலுக்கு முந்தைய பருவமுள்ளவர்கள் முதல் பூப்பெய்தியதற்குப் பிந்தைய பருவமுடையவர்கள் வரையிலான வயதுள்ள எந்த பெண்களையும் தாக்கலாம். இதற்கு அவர்களின் இனம், பரம்பரை அல்லது குழந்தை உள்ளதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல. இது பிரதானமாக இனப்பெருக்க காலத்தில் வரும் வியாதியாகவே உள்ளது. அது பெருவாரியாகக் காணப்படுவதைப் பற்றிய மதிப்பீடுகள் மாறுபடுகின்றன, ஆனால் 5–10% கிட்டத்தட்ட சரியான மதிப்பாகக் கருதப்படலாம், கருவுறாமைக் குறைபாடுள்ள பெண்களில் அதிகமாகக் காணப்படுகிறது (20–50%), மேலும் நாள்பட்ட இடுப்பு வலி உள்ளவர்களுக்கும் அதிகமாகக் காணப்படுகிறது (சுமார் 80%).[6] ஈஸ்ட்ரோஜன் சார்ந்த செயலாக்கமாக உள்ள இது, மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகும் தொடர்ந்து இருக்கலாம். மேலும் கருப்பையகற்றம் செய்தவர்களுக்கு 40 சதவீதம் வரையிலானவர்களுக்கு இது இருக்கிறது.[7]

பெண்களில் மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின்னர் இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படுகிறது, மேலும் அது மிகவும் முரட்டுத்தனமுடைய வியாதியாக விவரிக்கப்படுகிறது. இது இருக்கும் போது முழு புரோஜெஸ்ட்ரோன் எதிர்ப்பும் அரோமெட்டாஸ் வெளிப்பாட்டின் அளவுகள் மிக அதிகமாகவும் காணப்படும்.[8] மிகவும் குறைந்த நிகழ்வுகளில், இளம்பெண்களில் பூப்பெய்துதலுக்கு முன்பு இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படுகிறது.[9][10]

இணை நிகழ்தல் தன்மை[தொகு]

இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு கருப்பை அகப்படலப் புற்றுநோயுடன் எந்தத் தொடர்பும் இல்லை. தற்போதைய ஆராய்ச்சி இடமகல் கருப்பை அகப்படலத்திற்கும் சில வகை புற்று நோய்களுக்கும் ஒரு தொடர்பிருப்பதை விளக்கிக் காட்டியுள்ளது. குறிப்பாக அண்டகப் புற்று நோய், நாந்ஹாட்கின்'ஸ் லிம்போமா மற்றும் மூளைப் புற்று நோய் ஆகியவை.[11][12][13] இடமகல் கருப்பை அகப்படலம் பெரும்பாலும் தசைத்திசுக்கட்டியுடன் அல்லது கருப்பைச் சுரப்புத் திசுக்கட்டியுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதே போல் தன்னுடல் தாங்கு திறன் குறைபாடுகளுடனும் சேர்ந்து காணப்படுகிறது. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டின் ஒரு கணக்கெடுப்பின் படி, இடமகல் கருப்பை அகப்படலம் இல்லாத பெண்களுடன் ஒப்பிடுகையில் அது உள்ள பெண்களுக்கு அதிகமாக ஹைப்போதைராய்டியம், ஃபிப்ரோமேல்ஜியா, நாள்பட்ட சோர்வு நோய்க்குறிப்புத் தொகுப்பு, தன்னுடல் தாங்கு திறன் குறைபாடுகள், ஒவ்வாமைகள் மற்றும் ஆஸ்துமா ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டது.[14]

நோய்க்குறியியல் மற்றும் இடங்கள்[தொகு]

இடுப்புச் சுவர்ப் பகுதியிலுள்ள வயிற்றறை உறையில் உள்ள கருப்பை அகப்படல காயங்களின் எண்டோஸ்கோபி படம்.
உட்கருப்பையிய புற்றின் சுவரின் மைக்ரோபிராஃப். இடமகல் கருப்பை அகப்படலத்தின் அனைத்து அம்சங்களும் உள்ளன (கருப்பையக சுரப்பிகள், கருப்பையக ஸ்ட்ரோமா மற்றும் ஹீமோசெடாரின்-லேடென் மேக்ரோபேஜஸ். H&E ஸ்டெயின்.

செயல்மிகு இடமகல் கருப்பை அகப்படலம் இடைசெயல் புரியும் அழற்சிகளை உருவாக்குகின்றது. அவை வலியையும் அழற்சியையும் உண்டுபண்ணுகின்றன, மேலும் சுற்றியுள்ள திசுக்களில் வடுக்களையும் இழையாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இந்த செயலாக்கத்தைத் தொடங்க, மாதவிடாய், நச்சுக்கள் மற்றும் எதிர்ப்புசக்திக் காரணிகள் உள்ளிட்ட பல வகை தூண்டு அம்சங்கள் தேவைப்படலாம். வழக்கமான இடமகல் கருப்பை அகப்படல காயங்களில் திசுவியல் அம்சங்கள் உள்ளன. அது எண்டோமெட்ரியத்தைப் போன்றதாகவே உள்ளது, அவை ஸ்ட்ரோமா, எண்டோமெட்ரியல் எபிதீலியம் மற்றும் ஹார்மோன் தூண்டல்களுக்கு பதில்வினை புரியும் சுரப்பிகள் ஆகியவையாகும். பழைய காயங்கள் சுரப்பிகளின்றிக் காணப்படலாம், ஆனால் ஹீமோசிடெரின் கசடாகப் படிகிறது. வெறும் கண்களால் பார்க்கும் போது, இந்தக் காயங்கள் அடர் நீல நிறத்தில் அல்லது துகள் எரிந்த கருப்பு நிறத்தில், பல்வேறு அளவுகளில் காணப்படலாம். அவை சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறமிகளுடன் அல்லது நிறமிகள் ஏதுமின்றிக் காணப்படலாம். இடுப்புச் சுவர்ப் பகுதியில் உள்ள சில காயங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம், அவை கருவுறாமைக் குறைபாடுள்ள பெண்களில் 6-13 சதவீத நிகழ்வுகளில் இயல்பாகத் தோன்றும் வயிற்றறை உறை போலவே காட்சியளிக்கின்றன. அவை திசு ஆய்வில் மட்டுமே இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதைக் காண்பிக்கின்றன.[15] கூடுதலாக, பிற காயங்களும் காணப்படலா, குறிப்பாக அண்டகத்தில் காணப்படும் எண்டோமெட்ரிமாஸ், வடு உருவாதல் மற்றும் வயிற்றறை உறை குறைபாடுகள் அல்லது பொட்டலங்கள் ஆகியவை காணப்படும். குறிப்பிடத்தக்க அளவு கொண்ட (தோராயமாக 2 செ.மீ. +) அண்டகத்திலுள்ள எண்டோமெட்ரியாமா அறுவை சிகிச்சை முறையில் கட்டாயமாக அகற்றப்பட வேண்டும், ஏனெனில் எண்டோமெட்ரியாமா கட்டியை ஹார்மோன் சிகிச்சை மட்டுமே பூரணமாக அகற்ற முடியாது, அது வளர்ந்துவிட்டால், நீர்க்கட்டி உடைதல் மற்றும் அக இரத்தப்போக்கினால் திடீர் வலியை உண்டாக்கலாம். எண்டோமெட்ரியாமா சில நேரங்களில் அண்டக கட்டிகள் என தவறாக அறுதியிடல் செய்யப்படுகின்றது.

ஆரம்ப இடமகல் கருப்பை அகப்படலம் வழக்கமாக இடுப்பு மற்றும் வயிற்று உட்பகுதிகள் ஆகிய இடங்களில் மேற்பரப்பில் ஏற்படுகின்றது. உடல் நல வழங்குநர்கள் இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள இடங்களை, பதியங்கள், காயங்கள் அல்லது முண்டுகள் என்பன போன்ற வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். பெரிய காயங்கள் அண்டகங்களிலேயே எண்டோமெட்ரியோமாக்கள் அல்லது "சாக்லேட் கட்டிகள்" என்ற வகையாக காணப்படலாம், "சாக்லேட்" என்பதற்குக் காரணம் அவை பழுப்பு நிற கெட்டியான திரவத்தைக் கொண்டுள்ளன, அது பெரும்பாலும் பழைய இரத்தமே ஆகும். இடமகல் கருப்பை அகப்படலம் அழற்சி பதில்வினைகளைத் தூண்டலாம், இதனால் வடு உருவாக்கம் அல்லது ஒட்டுதல்கள் ஏற்படலாம்.

மலக்குடல் மற்றும் வலது சாக்ரோட்டெரின் இணைப்பிழையிலுள்ள எண்டோமெட்ரிக் காயங்களின் எண்டோஸ்கோபி படம்.

பெரும்பாலான இடமகல் கருப்பை அகப்படலம், இடுப்புக் குழியின் இவ்வகை கட்டமைப்புகளிலேயே காணப்படுகிறது, அங்கேதான் அது மிதமான, சுமாரான மற்றும்/அல்லது கடுமையான வலியை உருவாக்க முடியும், அந்த வலியை இடுப்பு மற்றும்/அல்லது அடி முதுகுப் பகுதிகளில் உணர முடியும். வலியானது பெரும்பாலும் மாதவிடாய்க்கு முன்பு, நிகழும்போது மற்றும்/அல்லது பிறகு மிகவும் அதிகமாக இருக்கும்:

 • அண்டகங்கள் (பொதுவான இடம்)
 • பெல்லோப்பியன் குழாய்கள்
 • கருப்பையின் பின்புறம் மற்றும் பின்பக்க ஒருவழிக்குழி
 • கருப்பையின் முன்பகுதி மற்றும் முன்பக்க ஒருவழிக்குழி
 • கருப்பையின் அகல அல்லது வட்ட வடிவ இணைப்பிழை போன்ற கருப்பை இணைப்பிழைகள்
 • இடுப்புப் பின்பகுதி அல்லது சுவர்ப்பகுதி
 • குடல்கள், மிகவும் பொதுவாக குதநெளி
 • சிறுநீர்ப் பை மற்றும் சிறுநீர்க்குழாய்கள்

குடல் இடமகல் கருப்பை அகப்படலம் தோராயமாக இடமகல் கருப்பை அகப்படலம் கொண்டுள்ளவர்களில் 10% பெண்களைத் தாக்குகிறது, மேலும் மலங்கழித்தலின் போது கடுமையான வலியை உண்டாக்கலாம்.

இடமகல் கருப்பை அகப்படலம், கருப்பை வாய் மற்றும் யோனி அல்லது அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட வயிற்றுப் பகுதி ஆகிய பகுதிகளுக்கும் பரவலாம்.

அரிதாக, பிரிப்புத் தசையில் காயங்கள் காணப்படலாம். பிரிப்புத் தசையிலான இடமகல் கருப்பை அகப்படலம் என்பது அரிதான நிகழ்வாகும், பெரும்பாலும், பிரிப்புத் தசையின் வலது புறப் பாதியிலேயே காணப்படும், மேலும் மாதவிடாய்க்கு சற்று முன்பு அல்லது மாதவிடாயின் போது வலது தோளில் அடிக்கடி வலியைக் கொடுக்கக்கூடும். அரிதாக, இடமகல் கருப்பை அகப்படலம் வயிற்றறை உறையைத் தாண்டிப் பரவும், அது நுறையீரல்கள் மற்றும் CNS இல் காணப்படலாம்.[16]

மாதவிடாயின் போது அடிக்கடி தொடர்ந்து ஏற்படும் வலது நிமோத்ரேசெஸ் சிக்கலுடன் நெஞ்சுக்கூட்டு பதிய சிகிச்சைகள் தொடர்புடையதாக உள்ளன, அதற்கு மாதவிடாய் வளிமார்பக நோய் என்று பெயர்.

இடமகல் கருப்பை அகப்படலம் தோல் சார்ந்த இடமகல் கருப்பை அகப்படலத்தின் போது தோலிலும் காயங்கள் காணப்படலாம்.

சிக்கல்கள்[தொகு]

இடது அண்டகத்தின் உடைந்த சாக்லேட் நீர்க்கட்டியின் எண்டோஸ்கோப்பிக் படம்.

இடமகல் கருப்பை அகப்படலத்தின் சிக்கல்களில் பின்வருவனவும் அடங்கும்:

 • உள் காயத்தழும்பு
 • ஒட்டுதல்கள்
 • இடுப்புப் பகுதி நீர்க்கட்டிகள்
 • அண்டகங்களில் ஏற்படும் சாக்லேட் நீர்க்கட்டி
 • உடைந்த நீர்க்கட்டி
 • மல அடைப்பு/மலத் தடை

இடமகல் கருப்பை அகப்படலத்தினால் ஏற்படும் காயத் தழும்பு உருவாதல் மற்றும் உடற்கூறியல் திரிபுகளுடன் கருவுறாமையைத் தொடர்புபடுத்தலாம். இருப்பினும், இடமகல் கருப்பை அகப்படலம் மேலும் நுண்ணிய வழிகளில் பிற நிலைகளுடன் குறுக்கிடலாம்: இனப்பெருக்கத்துடன் குறுக்கிடும் சைட்டோகீன்ஸ் மற்றும் பிற பொருள்கள் வெளியிடப்படலாம்.

இடமகல் கருப்பை அகப்படலத்தின் சிக்கல்களில் இடுப்புப்பகுதி ஒட்டுதல்களினால் ஏற்படும் மலம் மற்றும் சிறுநீர் தடுப்புகளும் அடங்கும். மேலும், வயிற்றறை அழற்சி மலக்குடல் துளையும் ஏற்படலாம்.

நோய் அறுதியிடல்[தொகு]

உடல்நல வரலாறு மற்றும் உடல் ரீதியான ஆய்வு ஆகியவற்றினால் பல நோயாளிகளுக்கு இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதாக அறுதியிடல் செய்யக்கூடிய வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சையே அறுதியிடலில் தங்கத் தரநிலையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான காப்பீட்டுத் திட்டங்கள், நோயாளி முன்னரே முயற்சித்து கருவுறுவதில் தோல்வியடைந்தாலொழிய அறுவை சிகிச்சை அறுதியிடலுக்கு காப்பீடு வழங்குவதில்லை.

உட்கருப்பையியபுற்றின் மைக்ரோபிராஃப். H&E தடம்.

படமெடுத்தல் சோதனைகளின் பயன்பாடு இடமகல் கருப்பை அகப்படலக் கட்டிகள் அல்லது பெரிய இடமகல் கருப்பை அகப்படலப் பகுதிகள் இருப்பதைக் கண்டறிய உதவலாம். ஒருவழிக்குழியில் உள்ள திரவத்தையும் இதன் மூலம் கண்டறியக்கூடும். அல்ட்ராசவுண்ட் மற்றும் காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (MRI) ஆகியவை மிகவும் பொதுவான இரண்டு படமெடுத்தல் சோதனைகளாகும். இந்த சோதனைகளின் இயல்பான முடிவுகள் இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை அகற்றுவதில்லை. இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள இடங்களானவை இந்த சோதனைகளின் மூலமும் கண்டறிய முடியாத அளவுக்கு சிறிய பகுதிகளாக உள்ளன.

லேப்ராஸ்கோப்பி அல்லது காயத் திசுவியல் ஆய்வுடன் கூடிய பிற வகை அறுவை சிகிச்சை ஆகியவையே இடமகல் கருப்பை அகப்படலத்தைக் கண்டறிவதற்கான ஒரே வழியாகும். அறுதியிடலானது நோயின் சிறப்பியல்புத் தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது, மேலும் இதனுடன் திசுவியல் ஆய்வையும் பயன்படுத்துவது அவசியம். அறுதியிடலுக்கான அறுவை சிகிச்சையின் மூலம் அதே நேரத்தில் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான சிகிச்சையையும் வழங்க முடியும்.

மருத்துவர்கள் பெரும்பாலும் இடுப்புப் பகுதி ஆவின் மூலமே இடமகல் கருப்பை அகப்படல வளர்ச்சி இருப்பதை உணர முடியும் எனினும், அறிகுறிகள் தவறான முடிவுகளைக் காண்பிக்கலாம், ஆகவே ஒரு லேப்ராஸ்கோப்பி செயலாக்கத்தைச் செய்யாமல் அறுதியிடலை உறுதிசெய்ய முடியாது. பெரும்பாலும், அண்டகப் புற்றுநோயின் அறிகுறிகளும் இடமகல் கருப்பை அகப்படலத்தின் அறிகுறிகளைப் போலவே இருப்பதுண்டு. லேப்ராஸ்கோப்பியினால் உறுதி செய்யப்படாததால் ஒரு அறுதியிடல் தவறான முடிவுகளைத் தெரிவிக்குமானால், வெற்றிகரமான சிகிச்சைக்கும் முக்கியத் தேவையான முந்தைய அண்டகப் புற்றுநோயின் அறுதியிடல் தவறவிடப்படலாம்.[17]

நோய் நிலை[தொகு]

அறுவை சிகிச்சையின் மூலம், இடமகல் கருப்பை அகப்படலம் ஒன்று முதல் நான்கு வரையிலான (I–IV) (அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ரிப்ரொடக்டிவ் மெடிசினின் மறுஆய்வு செய்யப்பட்ட வகைப்பாடு) நிலைகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.[18] இந்த செயலாக்கம் சிக்கலான புள்ளி முறையாகும், இது இடுப்புப் பகுதி உறுப்புகளில் உள்ள காயங்களையும் ஒட்டுதல்களையும் மதிப்பீடு செய்கிறது, ஆனால் இந்த நிலையிடுதல் என்பது இயற்பியல் ரீதியான நோயை மட்டுமே மதிப்பீடு செய்கிறதேயன்றி வலியின் அல்லது கருவுறாமையின் அளவை மதிப்பீடு செய்வதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இடமகல் கருப்பை அகப்படலத்தின் நிலை I உள்ள நோயாளிக்கு நோயும் அதிக வலியும் இருக்கலாம், அதே நேரம் இடமகல் கருப்பை அகப்படலத்தின் நிலை IV உள்ள நோயாளிக்கு நோய் கடுமையாகவும் ஆனால் வலியின்றியும் அல்லது அதற்கு மாறாகவும் இருக்கலாம். தத்துவத்தின் படி, வெவ்வேறு நிலைகள் பின்வரும் கண்டறிதல்களை வழங்கியுள்ளன:

 • நிலை I (குறைந்தபட்ச நிலை)
இதன் கண்டறிதல்கள் நம்பிக்கையில் மட்டுமேயான காயங்கள் மற்றும் சில ஏடு போன்ற ஒட்டுதல்கள் இருக்கலாம் என்பது வரை மட்டுமே என வரையறைக்குட்பட்டுள்ளன
 • நிலை II (மிதமானது)
மேலும், ஒருவழிக்குழியில் சில ஆழமான காயங்கள் காணப்படலாம்
 • நிலை III (சுமாரானது)
மேலே உள்ளது போல, மேலும் அண்டகத்தின் மீது எண்டோமெட்ரியோமாஸ் இருக்கும் மேலும் கூடுதல் ஒட்டுதல்கள் இருக்கும்
 • நிலை IV (தீவிரமானது)
மேலே கூறியதோடு, பெரிய எண்டோமெட்ரியோமாஸ் மற்றும் பரவலான ஒட்டுதல்கள் இருக்கும்.

குறிப்பான்கள்[தொகு]

இடமகல் கருப்பை அகப்படலத்தின் குறிப்பான்கள் என்பது ஆராய்ச்சிக்குரிய ஒரு பகுதியாக உள்ளது. இந்தக் குறிப்பான்கள் என்பவை இடமகல் கருப்பை அகப்படலத்தினால் உருவாக்கப்பட்ட அல்லது அதன் விளைவாக இரத்தம் அல்லது சிறுநீரில், கவனிப்பாளர்கள் அளவிடக்கூடிய வகையில் உள்ள பொருள்களாகும். இந்தக் குறிப்பான்கள் கண்டறியப்பட்டால், உடல் நல கவனிப்பாளர்கள், பெண்களின் இரத்தம் அல்லது சிறுநீரை சோதிப்பதன் மூலம் இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதை அறுதியிடமுடியும், அவர்களின் சிறுநீர் அல்லது இரத்தத்தில் எஸ்ட்ரோஜன் அதிகமாகவோ அல்லது புரோஜெஸ்டிரோனின் அளவு குறைவாகவோ இருக்கும், இதனால் அறுவை சிகிச்சையின் அவசியம் குறைகிறது. ஆண்டிஜென் CA-125 என்பது இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள பல நோயாளிகளில் அதிக அளவில் இருப்பதில் மிகவும் பிரபலமானதாகும்[19] ஆனால் இது இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதற்கான பிரத்யேகமான குறிப்பானல்ல.

இடமகல் கருப்பை அகப்படலத்துடன் தொடர்புடைய சாத்தியக்கூறுள்ள மரபியல் குறிப்பான்கள் பற்றிய ஆராய்ச்சியும் செய்யப்பட்டுவருகிறது, இதனால் உமிழ்நீர் அடிப்படையிலான அறுதியிடலை அறுவை சிகிச்சை அறுதியிடலுக்கு பதிலாகப் பயன்படுத்த முடியும்.[20] இருப்பினும், இந்த ஆராய்ச்சி மிகவும் தொடக்க நிலையிலேயே உள்ளது பெரும்பாலும் அறுதியிடலில் அறுவை சிகிச்சையின் கட்டமும் நிகழ்ந்தபடியே உள்ளது.

சாத்தியக்கூறுள்ள காரணங்கள்[தொகு]

இடமகல் கருப்பை அகப்படலத்தின் துல்லியமான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படாதவையாகவே உள்ள நிலையில், பல கோட்பாட்டாளர்கள், அதன் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் வகையிலான விளக்கங்களுக்கான தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தக் கருத்துகள் ஒன்றிலிருப்பது மற்றொன்றில் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

 1. எஸ்ட்ரோஜன்கள்: இடமகல் கருப்பை அகப்படலம் என்பது எஸ்ட்ரோஜன்-சார்ந்துள்ள ஒரு நிலையாகும், மேலும் இதனால் இது இனப்பெருக்கக் காலத்தின் போதே பிரதானமாக உள்ளது. சோதனை மாதிரிகளில், இடமகல் கருப்பை அகப்படலத்தை உருவாக்க அல்லது கட்டுக்குள் வைத்துப் பராமரிக்க எஸ்ட்ரோஜன் அவசியமாகும். மருத்துவ சிகிச்சையானது நோயைக் கட்டுப்படுத்துவதற்காக எஸ்ட்ரோஜன் அளவைக் குறைப்பதை குறிக்கோளாகக் கொண்டிருப்பதில்லை. கூடுதலாக, எஸ்ட்ரோஜன் தொகுப்பாக்க உற்பத்தி செய்யும் ஒரு நொதியான அரோமட்டேஸ் பற்றிய தற்போதைய ஆராய்ச்சி, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எவ்வாறு மற்றும் ஏன் இந்நோய் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது.
 2. பிற்போக்கு மாதவிடாய் : இந்த பிற்போக்கு மாதவிடாய் கோட்பாடானது, முதலில் ஜான் ஏ. சாம்சன் என்பவரால் முன்மொழியப்பட்டது, அதன் படி, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது, கருப்பையக மாசுக்கள் சில பெல்லோப்பியன் குழாய்களின் வழியாக கருப்பையை விட்டு வெளியேறி வயிற்றறை உறை பரப்பில் (வயிற்றுக் குழியின் ஓரம்) ஒட்டிக்கொள்கின்றன, அங்கேதான் இது இடமகல் கருப்பை அகப்படலமாக மற்ற திசுக்களுக்குப் பரவுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு பிற்போக்கு மாதவிடாய் சுழற்சி காணப்படுகிறது, வழக்கமாக அவர்களது நோய் எதிர்ப்புசக்தி மண்டலமானது மாசுக்களை அகற்றி இந்த நிகழ்விலிருந்து செல்களின் பதிய உருவாக்கம் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இருப்பினும், சில நோயாளிகளில் பிற்போக்கு மாதவிடாய் சுழற்சியினால் இடமாற்றப்பட்ட கருப்பையகத் திசுவானது அதுவே இடமகல் கருப்பை அகப்படலமாக உருவாகி வளரக்கூடும். சில பெண்களில் இந்தத் திசு வளர்வதற்குக் காரணமாக இருக்ககூடிய ஆனால் மற்றவர்களுக்கு அவாறில்லாத இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்வது அவசியம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில காரணங்கள் இதற்கான விளக்கத்தைக் கொடுக்கலாம், எ.கா., மரபியல் காரணிகள், நச்சுகள் அல்லது ஒடுங்கிய எதிர்ப்புசக்தி மண்டலம் எனவும் விவாதிக்கப்படலாம். ஒவ்வொரு மாதமும் ஒழுங்காக நிகழும் மாதவிடாய் சுழற்சியின் குறுக்கீடு செய்யப்படாத நிகழ்வு என்பது ஒரு நவீன நிகழ்வாகும், பழங்காலப் பெண்களுக்கு, கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல் போன்றவற்றின் காரணமாக மாதவிடாய் இடைநிறுத்தக் காலம் அதிகமாக இருந்தது. இடமகல் கருப்பை அகப்படலத்தின் அனைத்து நிகழ்வுகளையும் சாம்சனின் கோட்பாட்டால் திட்டமாக விளக்க முடியவில்லை, மேலும் அதற்கு, பிற்போக்கு மாதவிடாய் சுழற்சி கொண்டுள்ள பல பெண்களுக்கு இடமகல் கருப்பை அகப்படலம் இல்லை என்பதை நிரூபிக்க, மரபியல் அல்லது எதிர்ப்புத் திறன் வேறுபாடுகள் ஆகியவை போன்ற கூடுதல் காரணிகள் தேவைப்பட்டன. மேலும், இடமகல் கருப்பை அகப்படல காயங்கள், உயிர்வேதியியல் ரீதியாகப் பார்க்கையில் திசு ஒட்டறுவை இடமாறிய திசுக்களிலிருந்து வேறுபட்டவை என்பதை ஒரே ஒரு ஆய்வு மட்டுமே கண்டறிந்தது, இதனால் சாம்சனின் கோட்பாடு சந்தேகத்திற்குள்ளானது.[21]
 3. முல்லேரியனோசிஸ்: இது ஒரு போட்டிக் கோட்பாடாகும், இடமகல் கருப்பை அகப்படல செல்களாக மாறக்கூடிய சாத்தியக்கூறுள்ள செல்கள், கரு வளர்ச்சி மற்றும் உறுப்பு மூலம் மற்றும் வளர்ச்சியின் போது பட்டை அமைப்புகளாக அமைகின்றன என இது கூறுகிறது. கருவளர்காலத்தின் 8-10 வாரங்களில் பெண் இனப்பெருக்கப் (முல்லேரியன்) பட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ் நோக்கி நகர்வதால், இந்தப் பட்டைகள் அவற்றைப் பின் தொடர்கின்றன. தொடக்க நிலை கருப்பையக செல்கள் நகரும் கருப்பையிலிருந்து இடம் மாறி விதைகள் அல்லது முதல் நிலை செல்களாக செயல்படுகின்றன. இந்தக் கோட்பாட்டை கருப் பிரேதப் பரிசோதனை ஆதரிக்கிறது.[22]
 4. உடற்குழி மாற்றுப்பெருக்கம்: இந்தக் கோட்பாடானது, உடற்குழி எபிதீலியமானது கருப்பையக மற்றும் வயிற்றறை உறை செல்களுக்கு பொதுவான முன்னோடி செல்களாகும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. மேலும் இது பின்னர் ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லாக மாறும் மாற்றுருப்பெருக்கம் (உருமாற்றம்) சாத்தியம் என்று கருத்துரைக்கிறது, இதை அழற்சி தூண்டுவிக்கலாம்.[1] இந்தக் கோட்பாடானது இந்த உருமாற்றத்தின் ஆய்வக அவதானிப்பினால் மேலும் ஆதரிக்கப்படுகிறது.[23]
 5. மரபியல்: மரபியல் காரணிகளும் ஒரு பங்கை வகிக்கின்றன. இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள நோயாளிகளின் மகள்கள் அல்லது சகோதரிகளுக்கும் இடமகல் கருப்பை அகப்படலம் உருவாவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்ற உண்மை நன்கு கண்டுணரப்பட்டுள்ளது; எடுத்துக்காட்டுக்கு, புரோஜெஸ்ட்ரோன் குறைவாக உள்ளவர்களுக்கு மரபியல் காரணமாக இருக்கலாம், மேலும் அதனால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். முதல் நிலை உறவினர்களுக்கு இது உண்டாவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகமாக உள்ளது.[6] 2005 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் ஜெனிட்டிக்ஸில் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி இடமகல் கருப்பை அகப்படலத்திற்கும் குரோமோசோம் 10q26 க்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.[24] இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள நோயாளிகளின் பெண் உடன் பிறப்புகளுக்கான இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான ஒப்பு ஆபத்து, கட்டுப்படுத்தப்பட்ட நபர் தொகுதியுடன் கணக்கிடுகையில் 5.7:1 என்ற விகிதத்தில் உள்ளது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.[25]
 6. உறுப்பு மாற்றம்: குறிப்பிட்ட சில நோயாளிகளில் இடமகல் கருப்பை அகப்படலம் நேரடியாகப் பரவக்கூடும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வயிற்றுப்பகுதி கிழித்தல் தழும்புகளில் இடமகல் கருப்பை அகப்படலம் கண்டறியப்பட்டுள்ளது. அது பல வேறு திச்சுக்களினூடும் வளரக்கூடும் அதாவது, ஒரு வழிக்குழியிலிருந்து புணர்புழை வரையில். அரிதாக இடமகல் கருப்பை அகப்படலமானது இரத்தம் அல்லது நிணநீர் மண்டலத்தினால் நுறையீரல் மற்றும் மூளை போன்ற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படலாம்.
 7. எதிர்ப்புசக்தி மண்டலம்: ஆராய்ச்சிகள், எதிர்ப்புசக்தி மண்டலம் பிற்போக்கு மாதவிடாய்த் திரவத்தின் தொடர்ச்சியான தாக்குதலுடன் சமாளித்துச்செல்ல முடியாமல் போவதற்குள்ள சாத்தியக்கூறில் கவனம் செலுத்துகின்றன. இந்தச் சூழலில் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கும் தன் தடுப்பாற்றுநோய், ஒவ்வாமை பதில்வினைகள் மற்றும் நச்சுகளின் தாக்கங்கள் ஆகியவற்றுக்குள்ள தொடர்பு பற்றிய ஆர்வம் இப்போது ஆய்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.[26] நச்சுகள், தன் தடுப்பாற்று நோய் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் ஆகியவற்றுக்கிடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது இப்போதும் தெளிவற்றதாக உள்ளது.
 8. சுற்றுச்சூழல்: சுற்றுச்சூழல் காரணிகளால் இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் வளர்ந்துவருகிறது, குறிப்பாக சில பிளாஸ்டிக் மற்றும் மைக்ரோவேவ் ஒவன்களைக் கொண்டு சில பிளாஸ்டிக் வகைகளைப் பயன்படுத்தி சமைத்தல் ஆகியவை.[27] நமது உணவில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ஹார்மோன்களால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதாக பிற ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.
 9. பிறவிக் குறைபாடு: முதல் மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு தானாகவே சரியாகாமல், தொடர்ந்து கண்டறியப்படாமல் வளரும் துளையில் ஐமன் போன்ற அரிதான நிகழ்வுகளில் இரத்தம் மற்றும் கருப்பையகமானது அறுவை சிகிச்சை போன்ற முறைகளின் மூலம் இதைத் தீர்க்காத வரையில் கருப்பைக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறது. பல உடல் நல மருத்துவர்கள் இந்தக் குறைபாட்டைச் சந்தித்ததில்லை, மேலும் ஃப்ளூ போன்ற அறிகுறிகள் இருப்பதால் அது பெரும்பாலும் தவறாகவே அறுதியிடல் செய்யப்படுகிறது அல்லது பல மாதவிடாய் சுழற்சிகள் முடியும் வரை கவனிக்காமல் விடப்படுகிறது. சரியான அறுதியிடல் செய்யப்படும் நேரத்தில், கருப்பையகமும் பிற திரவங்களும் கருப்பை மற்றும் பெல்லோப்பியன் குழாய்களில் நிரம்பியிருக்கின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள், முடிவில் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு வழிவகுக்கும் பிற்போக்கு மாதவிடாயின் விளைவுகளைப் போன்றதாகவே உள்ளது. இடமகல் கருப்பை அகப்படலத்தின் தொடக்க நிலையானது அறுவை சிகிச்சை செயல்கள் ஏதேனும் தொடங்கப்பட்டு கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு வேறுபடலாம்.

வலிக்கான காரணம்[தொகு]

இடமகல் கருப்பை அகப்படலம் வலியை ஏற்படுத்தும் விதமானது ஆராய்ச்சிக்குட்பட்ட விஷயமாக உள்ளது. ஏனேனில் இடமகல் கருப்பை அகப்படலம் கொண்டுள்ள பல பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது அல்லது அந்த நேரத்திற்கு அருகிலேயே வலியை உணர்கிறார்கள், மேலும் இதனால் கூடுதல் மாதவிடாயானது ஒவ்வொரு மாதவிடாயின் போதும் இடுப்புப்பகுதியில் தவறிச்செல்லலாம், சில ஆராய்ச்சியாளர்கள் இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள நோயாளிகளில் மாதவிடாய் நிகழ்வுகள் ஏற்படுவதைக் குறைப்பதற்கு முயற்சித்துவருகின்றனர்.

இடமகல் கருப்பை அகப்படல காயங்கள் ஹார்மோன் தொடர்பான தூண்டல்களுக்கு பதில்வினை புரிகின்றன, மேலும் அவை மாதவிடாயின் போது "இரத்தப்போக்கும்" ஏற்படுத்தலாம். இரத்தமானது உள்ளேயே சேகரமாகி, வீக்கத்தை உண்டாக்குகிறது, மேலும் இது சைட்டோகின்ஸின் செயலாக்கத்துடன் கூடிய அழற்சி பதில்வினைகளையும் தூண்டுகிறது. இந்த செயலாக்கமே வலியை உண்டாக்கலாம் எனக் கருதப்பட்டுவந்தது.

உள்ளே உள்ள உறுப்புகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து ஒட்டி உறுப்பு இடமாற்றத்தை உண்டாக்கும் நிகழ்வான ஒட்டுதல்களினாலும் (அக தழும்புத் திசு) வலி ஏற்படலாம். பெல்லோப்பியன் குழாய்கள், அண்டகங்கள், கருப்பை, குடல்கள் மற்றும் சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில், மாதவிடாய்க் காலத்தில் மட்டுமின்றி தினசரி வலி இருக்கும் வகையில் அவை ஒன்றுடன் ஒன்று கட்டுண்டிருக்கும்படி ஆகியிருக்கலாம்.

சிகிச்சைகள்[தொகு]

இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு குணமளிக்கும் சிகிச்சை எதுவுல் இல்லை என்ற நிலையில்,[சான்று தேவை] பல நோயாளிகளில் மாதவிடாய் நிறுத்தமானது (இயற்கையான அல்லது அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுவது) இந்தச் செயலாக்கத்தைத் தணிக்கக்கூடும். இனப்பெருக்கக் காலகட்ட வயதுள்ள நோயாளிகளில் இடமகல் கருப்பை அகப்படலம் வெறுமென கட்டுப்பாட்டில் கையாளப்படுகிறது. வலி நிவாரணமளிப்பது, மேலும் நோய் முன்னேறுவதைத் தடுப்பது மற்றும் கருவுறாமை என்பது இதில் ஒரு சிக்கலாக இருந்தால் அதை சரி செய்வது ஆகியவையே இதன் குறிக்கோள்களாகும். பூர்த்தியடையாத இனப்பெருக்க சக்தி உள்ள இளம் பெண்களில், அறுவை சிகிச்சையானது பழமையானதாகும், கருப்பையகத் திசுவை அகற்றி சாதாரண திசுக்களைச் சேதப்படுத்தாமல் அண்டகங்களைக் காப்பதே அதன் குறிக்கோளாகும். தங்கள் இனப்பெருக்கத் திறனைப் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லாத பெண்களில் கருப்பையகற்றம் மற்றும்/அல்லது அண்டக அகற்றம் என்பதும் ஒரு மாற்று வழியாகும். இருப்பினும், இடமகல் கருப்பை அகப்படலம் மற்றும்/அல்லது இடமகல் கருப்பை அகப்படலத்தின் அறிகுறிகள் மீண்டும் வராது என இதனால் உத்தரவாதமளிக்க முடியாது. மேலும் இந்த அறுவை சிகிச்சையினால் பல சிக்கல்களை உண்டாக்கும் ஒட்டுதல்கள் தூண்டப்படலாம்.

பொதுவாக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதாக அறுதியிடல் செய்யப்படுகிறது, அப்போது அதை அகற்றும் நடவடிக்கைகளை எடுக்க முடியும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் சூழ்நிலையைச் சார்ந்தவை. கருவுறாமை குறைபாடில்லாத நோயாளிகள் ஹார்மோன் மருத்துவத்தின் மூலமே இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும், அது இயற்கையான சுழற்சி மற்றும் வலி நிவாரண மருந்துகள் ஆகியவற்றை ஒடுக்கக்கூடும், அதே நேரம் கருவுறாமைக் குறைபாடுள்ள நோயாளிகளுக்கு விலக்காக கருவுறுதலுக்கான மருந்துகள் அல்லது IVF கொண்டு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சிகிச்சையளிக்கப்படலாம்.

சோனோக்ராஃபி என்பது சிகிச்சையின் போது எண்டோமெட்ரியோமாஸ் மீண்டும் ஏற்படுவதைப் பற்றிக் கண்காணிக்கும் ஒரு முறையாகும்.

கருவுற விரும்பாத பெண்களில் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான சிகிச்சைகளில் பின்வருவன அடங்கும்:

ஹார்மோன் மருத்துவம்[தொகு]

 • புரோஜெஸ்ட்ரோன் அல்லது புரோஜெஸ்டின்கள்: புரோஜெஸ்ட்ரோன் எஸ்ட்ரோஜெனுக்கு பதிலாக வினைபுரிந்து கருப்பையகச் சவ்வின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இது போன்ற சிகிச்சையால் மாதவிடாய் நிகழ்வை கட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் அல்லது எதிர்நிகழ்வு முறையில் குறைக்கவோ அல்லது அகற்றவோ முடியும். புரோஜெஸ்டின்கள் என்பவை இயற்கையான புரோஜெஸ்டிரோன்களின் வகை வடிவ வேதிப்பொருள்களாகும்.
 • இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் எஸ்ட்ரோஜனை ஒத்த விளைவுப் பண்புகளைக் கொண்டுள்ளதும் கருப்பையகச் சவ்வின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதுமான க்ஸெனோஸ்ட்ரோஜன்கள் உள்ளடங்கிய தயாரிப்புகளைத் தவிர்த்தல்.
 • ஹார்மோன் கருத்தடைக் கோட்பாடு: வாய்வழி கருத்தடை மருந்துகள் இடமகல் கருப்பை அகப்படலத்துடன் தொடர்புடைய மாதவிடாய் வலியைக் குறைக்கலாம்.[28] மாதவிடாய் பாய்வை குறைப்பது அல்லது அகற்றுவதன் மூலமும் எஸ்ட்ரோஜன் ஆதரவை அளிப்பதன் மூலமும் அவை செயல்படலாம். வழக்கமாக, இது நீண்டகால அணுகுமுறையாகும். சமீபத்தில் சீசனால் ஓர் ஆண்டுக்கு 4 என்ற அளவிற்கு மாதவிடாயைக் குறைக்கிறது என FDA ஒப்புதலளித்துள்ளது. இருப்பினும் லேபிளின்றியும் பிற OCPகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தொடர்ச்சியான ஹார்மோன் கருத்தடை வாய்வழி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைப் பயன்படுத்தி அல்லது மருந்துப்போலி மாத்திரைகள் அல்லது நுவாரிங் அல்லது வார இடைவெளியின்றி கருத்தடை அட்டைகளைப் பயன்படுத்துதல் போன்ற முறைகளில் செய்யப்படுகின்றன. இதனால் மாத மாதம் ஏற்படும் இரத்தப்போக்கு நிகழ்வு அகற்றப்படுகிறது.
 • டெனோஸால் (டெனோக்ரின்) மற்றும் கெஸ்ட்ரினோன் ஆகியவை ஒடுக்குத் திறன் கொண்ட ஸ்டிராய்டுகளாகும், அவை சில ஆண்ட்ரோஜெனிக் செயல்பாடுகளையும் செய்கின்றன. இரண்டு மருந்துகளுமே இடமகல் கருப்பை அகப்படலத்தின் வளர்ச்சியைத் தடுக்கின்றன, ஆனால் அவை மயிர் மிகைப்பு அல்லது குரல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றை கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.
 • கொனொடோட்ரோபின் வெளியிடும் ஹார்மோன் (GnRH) முதன்மை இயக்கி: இந்தப் பொருள்கள் GnRH இன் அளவை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகின்றன. தொடர்ந்து GnRH ஏற்பிகளைத் தூண்டுவதால், FSH மற்றும் LH அளவுகளை குறைப்பதன் மூலம் அதிகமாகக் காணப்படும் ஹைப்போஎஸ்ட்ரோஜெனியம் உள்ளிட்ட கீழொடுக்கம் உண்டாகலாம். இது சில நோயாளிகளுக்கு செயல்திறன் மிக்கதாக இருக்கும் அதே வேளையில், சங்கடமளிக்கும் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளையும் கொடுக்கின்றன, மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு இது எலும்புப்புரைக்கு வழிவகுக்கலாம். இது போன்ற பக்க விளைவுகளை எதிர்கொள்ள சில எஸ்ட்ரோஜன் மீண்டும் வழங்கப்படவேண்டும் (மீண்டும் சேர்க்கும் மருத்துவம்). இந்த மருந்துகளை ஒரே நேரத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • லுப்ரோன் டிப்போ ஷாட் என்பது ஒரு GnRH முதன்மை இயக்கியாகும், அது இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படாமல் தடுக்க அல்லது அதன் அளவைக் குறைக்க பெண்களில் ஹார்மோன் அளவுகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படுக்கிறது. இந்த ஊசி 2 வெவ்வேறு அளவுகளில் 3 மாதங்களுக்கு ஒரு முறை (11.25 மி.கி.) அளவு அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை (3.75 மி.கி.) அளவு செலுத்தப்படுகிறது.[29]
 • அரோமெட்டேஸ் தடுப்பான்கள் என்பவை எஸ்ட்ரோஜன் உருவாக்கத்தைத் தடுக்கும் மருந்துகளாகும், மேலும் அவை இப்போது இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு சிகிச்சையளிக்கும் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வமிக்க விஷயமாக ஆகியுள்ளது.[30]

பிற மருந்துகள்[தொகு]

 • NSAIDகள் என்பவை அழற்சி எதிர்ப்பு மருந்துகளாகும். அவை பொதுவாக பிற சிகிச்சையுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் தீவிர நிலைகளுக்கு நார்கோட்டிக் பரிந்துரைப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம். கடுமையான வலி இருந்தால் அல்லது வாய்வழி எடுத்துக்கொள்ளும் வயிற்றுவலியால் NSAID பயன்பாடு சிரமமாக இருந்தால் NSAID உச்கள் உதவியாக இருக்கலாம்.
 • MST மார்பின் சல்பேட் மாத்திரைகள் மற்றும் எண்ட்ரோபின்கள் எனப்படும் இயற்கையாக உருவாகும் வலி நிவாரணிகளைப் போலவே செயல்படும் பிற ஓப்பியாய்டு வலிநிவாரணிகள். வெவ்வேறு நீண்ட கால மற்றும் குறுகிய கால செயல்பாடுள்ள மருந்துகளும் உள்ளன, அவற்றை தனியாக அல்லது தேவையான சரியான வலிக் கட்டுப்பாட்டை வழங்க பிற மருந்துகளுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
 • டிக்லோஃபெனாக் செருகு மருந்து அல்லது மாத்திரை வடிவில். இது அழற்சியைக் குறைக்கவும் வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை[தொகு]

அறுவை சிகிச்சை செயலாக்கங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன

 • இனப்பெருக்க உறுப்புகளைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் செய்கையில் பழமையானது,
 • அண்டக செயல்பாடு தொடர்ந்து நடைபெறும் வகையில் செய்யப்படுவது பகுதி பழமையானது மற்றும்
 • அண்டகங்கள் அகற்றப்படும் போது முழுமையானது.

பழமையான சிகிச்சையில் இடமகல் கருப்பை அகப்படலம் அல்லது ஒட்டுதல்களை அகற்றுதல், வெட்டியகற்றுதல், அப்புறப்படுத்தல், எண்டோமெட்ரியோமாஸின் பிரிவுகளகற்றல் மற்றும் கூடுமானவரை இயல்பான இடுப்புப் பகுதியமைப்பை மீட்டமைத்தல் ஆகியவை செய்யப்படும்.[3]

இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான முழுமையான சிகிச்சையில் கருப்பை மற்றும் குழாய்கள் மற்றும் அண்டகங்கள் (பைலேட்ரியல் சல்பினோ-ஓபரெக்டமி) அகற்றப்படுகின்றன (கருப்பையகற்றம்), மேலும் இதனால் இனப்பெருக்கத்திற்கான வாய்ப்பும் இல்லாமல் போகிறது. பொதுவாக செயலிழக்கவைக்கும் அளவிலான நாள்பட்ட வலி இருந்து அது சிகிச்சைக்கு பணியாத விதத்தில் இருந்தால் மட்டுமே முழுமையான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முழுமையான அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அனைத்து நோயாளிகளுமே வலியிலிருந்து நிவாரணம் அடைவர் என்றில்லை.

பகுதி பழமையான சிகிச்சை முறையில் ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றும் அண்டகம் தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது, மேலும் இதில் நோய் மீண்டும் தோன்றும் வாய்ப்பு உள்ளது.[31]

அதிக வலியுள்ள நோயாளிகளுக்கு, பிரீசாக்ரெல் நியூரெக்டாமி செய்யப்படலாம், இதில் கருப்பைக்கு செல்லும் நரம்புகள் வெட்டப்படுகின்றன. இருப்பினும், உறுதியான மருத்துவ ஆதாரங்கள் இடுப்புப் பகுதி வலியானது நடுக்கோட்டு மையம் கொண்ட தன்மை கொண்டதாக இருக்கும்பட்சத்தில், பிரிசாக்ரெல் நியூரெக்டமி சிகிச்சையானது வலி நிவாரணத்திற்கு மிகவும் பயனுள்ளது எனக் காண்பித்தன, ஆனால் வலி வயிற்றுப்பகுதியின் வலது மற்றும் இடது பக்க பகுதிகளுக்கும் பரவினால் இது செயல்திறன் மிக்கதல்ல என்றும் அவ்வாய்வு காண்பித்தது.[3] இந்த செயலாக்கத்தில் வெட்டப்பட வேண்டிய நரம்புகள் பெண்களின் இடுப்புப் பகுதியில் நடுக்கோட்டின் மையப் பகுதியைக் கடந்தே செல்கின்றன என்பதே இதற்குக் காரணமாகும். இதற்கும் மேல், பிரீசாக்ரெல் நியூரெக்டமி செய்துகொண்ட பெண்களுக்கு நாள்பட்ட மலச்சிக்கல் இருக்கும், அது மருந்தெடுத்துக்கொண்டாலும் சரியாகாமல் இருக்கும், ஏனெனில் இந்த செயலாக்கத்தின் போது அப்பகுதியில் இருக்கும் பாராசிம்பத்திட்டிக் நரம்பில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கலாம்.

மருந்து மற்றும் அறுவை சிகிச்சை ஒப்பீடு[தொகு]

மருந்து மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட சம அளவிலான வலி நிவாரண விளைவுகளையே கொடுக்கின்றன என செயல்திறன் ஆய்வுகள் காண்பிக்கின்றன. வலி மீண்டும் மீண்டும் ஏற்படுதல் என்பது மருந்து சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும் முறையே 44 மற்றும் 53 சதவீதமாக இருந்ததாகக் காணப்பட்டது.[6] இருப்பினும், ஒவ்வொரு அணுகுமுறைக்கும் அதற்கே உரித்தான நன்மைகளும் குறைபாடுகளும் உள்ளன.[1]

மருந்து சிகிச்சைகளின் நன்மைகள்[தொகு]

 1. தொடக்க செலவு குறைதல்
 2. சோதனை சிகிச்சை (அதாவது தேவைப்படும் போது எளிதாக மாற்றியமைத்துக்கொள்ள முடியும்)
 3. வலி கட்டுப்பாட்டுக்கு மிகவும் சிறந்தது

மருந்து சிகிச்சைகளின் குறைகள்[தொகு]

 1. பொதுவாக மோசமான விளைவுகள் உண்டு
 2. கருவுறுதல் திறனை மேம்படுத்த வாய்ப்பில்லை
 3. குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே சிலவற்றைப் பயன்படுத்த முடியும்[சான்று தேவை]

அறுவை சிகிச்சையின் நன்மைகள்[தொகு]

 1. வலிக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க அளவு செயல்திறனுடையது.[32]
 2. கருவுறாமைக்கான சிகிச்சையைப் பொறுத்தமட்டில் மருந்து சிகிச்சையை விட அதிகமான செயல்திறன் உள்ளது
 3. திசுவியல் ஆய்வுடன் சேர்த்து வழங்கப்படும் போது, துல்லியமான அறுதியிடலுக்கு இதுவே வழியாகும்

அறுவை சிகிச்சையின் குறைகள்[தொகு]

 1. செலவு
 2. இதில் உள்ள ஆபத்துகள் "சரியாக வரையறுக்கப்படவில்லை... மேலும் அநேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன." ஓர் ஆய்வில், அறுவை சிகிச்சையினால் 3-10 சதவீதம் பேர் சிக்கல்களை அடைந்தனர்.[33]
 3. விளைவுத்திறனானது கேள்விக்குரியதாக உள்ளது. அதே ஆய்வில், தோராயமாக 70-80 சதவீதம் பேருக்கு சிகிச்சையைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்கு வலி நிவாரணம் கிடைத்தது. இருப்பினும், ஓராண்டு பின் தொடர் அவதானிப்பில், தோராயமாக 50 சதவீதம் பேருக்கு வலி நிவாரணிகள் அல்லது ஹார்மோன் சிகிச்சைகள் தேவைப்பட்டது.[33]

கருவுறாமைக்கான சிகிச்சை[தொகு]

இது வலியை குணப்படுத்தும் செயலைப் பொறுத்தமட்டில் ஓரளவு மருந்து சிகிச்சையை ஒத்ததாக இருக்கிறது, ஆனால் கருவுறாமைக்கான சிகிச்சையில் அறுவை சிகிச்சையின் விளைவுத்திறனானது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இடமகல் கருப்பை அகப்படலத்தின் அறுவை சிகிச்சையினால் கருவுறுத்திறனை (கருவுறுதல் வீதம்) இரட்டிப்பாகியதாக ஓர் ஆய்வு காண்பித்தது.[34] குறைந்தபட்ச/மிதமான இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்து ஒடுக்கத்தைப் பயன்படுத்துவதால் கருவுறாமைக் குறைபாடுள்ள நோயாளிகளுக்கு நன்மைகள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.[4] அண்ட விடுப்பைத் தூண்டும் (க்ளோமிஃபைன் சிட்ரேட், கோணடோட்ரோபின்கள்) கருவுறாமைக்கான மருந்துகளை கருப்பையக விந்து செலுத்தல் (IUI) சிகிச்சையுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் இந்த நோயாளிகளில் கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.[4]

இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள பல பெண்களுக்கு கருவுறுத் திறனை மேம்படுத்துவதில் செயற்கைக் கருத்தரிப்பு (IVF) செயலாக்கங்கள் செயல்திறன் மிக்கவையாக உள்ளன. ஆய்வகத்தில் விந்தணுவையும் முட்டைகளையும் சேர்த்து அதன் மூலம் உருவாகும் கருவை பெண்ணின் கருப்பையில் செலுத்துவது IVF சிகிச்சையினால் சாத்தியமாகிறது. இடமகல் கருப்பை அகப்படலத்துடன் தொடர்புடைய கருவுறாமைக் குறைபாட்டின் போது IVF சிகிச்சையை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும்போது, நோயாளியின் வயது, இடமகல் கருப்பை அகப்படலத்தின் தீவிரத் தன்மை, பிற கருவுறாமைக் காரணிகள் இருப்பது மற்றும் கடந்த சிகிச்சைகளின் முடிவுகள் மற்றும் எடுத்துக்கொண்ட கால அளவுகள் ஆகியவற்றறக் கருத்தில்கொள்வது அவசியமாகும்.

பிற சிகிச்சைகள்[தொகு]

 • ஹார்மோன் சமநிலையைப் பராமரிப்பதற்கும் வலியைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் கடுகுக் குடும்பக் காய்கறிகள் போன்ற இண்டோல்-3-கார்பனோல் அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்வது உதவியாக இருப்பதாகத் தெரிகிறது,[35] இதே விளைவுகளையே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொடுக்கின்றன, குறிப்பாக EPA கொடுக்கிறது.[36] சோயாவின் பயன்பாட்டால் வலி குறையும் அதே சமயம் அறிகுறிகள் மோசமாவதால் அதன் பயன்பாடு கேள்விக்குள்ளாகியுள்ளது.[37]
 • இடமகல் கருப்பை அகப்படலத்தின் வலிக் கட்டுப்பாட்டுக்கான உடல்நலப் பயிற்சி சிகிச்சை சாத்தியமுள்ள நன்மைகளைக் கொடுப்பதாக ஒரு வெள்ளோட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.[38] தூக்குதல், நீண்ட நேரம் நிற்பது அல்லது ஓடுதல் ஆகியவை போன்ற உடல் இயக்கங்கள் இடுப்பு வலியை மோசமாக்கலாம். அடிமுதுகுப் பகுதிகளில் வெப்பமூட்டும் அட்டைகளைப் பயன்படுத்துவதால் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாம்.

நோய் வளர்ச்சி[தொகு]

இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள நோயாளிகளுக்கான முறையான ஆலோசனையில் இந்த குறைபாட்டின் பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சிகிச்சை பற்றிய எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கான அடிப்படையாக அமையத் தேவையான போதிய தகவல்களைப் பெறுவதற்கான நோயின் தொடக்க செயல்பாட்டு நிலையே பிரதான முக்கியத்துவமான அம்சமாகும். நோயாளியின் அறிகுறிகள் மற்றும் குழந்தை பெறுவதற்கான அவரது விருப்பம் ஆகியவை பொறுத்தே எது சரியான சிகிச்சை என்பது முடிவாகும். எல்லா நோயாளிகளுக்கும் எல்லா சிகிச்சையும் பலனளிக்கும் என்று கூற முடியாது. சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது போலி மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் நோய் தோன்றும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த சிகிச்சைகள் நோயாளிகளுக்கு இடுப்பு வலியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு நிவாரணத்தை வழங்குகின்றன, மேலும் கருவுறுதலுக்கும் உதவியாக உள்ளன.[39] நோயாளிகள் தங்கள் மருத்துவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், சிகிச்சை முழுவதும் திறந்த மனப்பான்மையுடனான கலந்துரையாடலில் ஈடுபடுவதும் முக்கியமாகும். இது பூரணமாக குணமடைவதற்கான சிகிச்சையில்லாத நோயாகும். ஆனால் சரியான தகவல்தொடர்பு இருக்கும்பட்சத்தில் இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள ஒருவர் இயல்பான செயல்பாடுடன் கூடிய வாழ்க்கையை நடத்தலாம்.

மீண்டும் நிகழ்தல்[தொகு]

இடமகல் கருப்பை அகப்படலத்தின் பின்புலமாக உள்ள செயலாக்கமானது அறுவை சிகிச்சை அல்லது மருந்து சிகிச்சைக்கும் பிறகு நின்றுவிடும் என்று கூறமுடியாது. இந்நோயின் மறுநிகழ்வுக்கான வீதம் ஆண்டுக்கு 5–20 % என்ற மதிப்பில் உள்ளது, மேலும் அடுத்ததாக கருப்பையகற்றம் செய்யப்படாவிட்டால் அல்லது மாதவிடாய் நிற்காவிட்டால் அதன் வீத மதிப்பு 40 சதவீதத்திற்கு அதிகரிக்கிறது.[3] நோயாளிகளின் கண்காணிப்பு என்பதில் குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை மருத்துவ சோதனை மற்றும் சோனாகிராபி ஆகிய இரண்டும் உள்ளடங்கும். இடமகல் கருப்பை அகப்படல நோயாளிகளைக் கண்காணிக்க CA 125 சீரம் ஆண்டிஜன் அளவுகளும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

ஆண்களில் இடமகல் கருப்பை அகப்படலம்[தொகு]

ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக அதிக எஸ்ட்ரோஜன் மருந்துகள் (TACE) எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.[40]

குறிப்புதவிகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "டயக்னசிஸ் அண்ட் ட்ரீட்மெண்ட் ஆஃப் எண்டோமெண்ட்ரியாசிஸ் - அக்டோபர் 15, 1999 - அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபேமிலி ஃபிசிஷியன்ஸ்". 2011-06-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. எண்டோமெட்ரியாசிஸ்;NIH வெளியீடு. எண். 02-2413; செப்டம்பர் 2002
 3. 3.0 3.1 3.2 3.3 Speroff L, Glass RH, Kase NG (1999). Clinical Gynecologic Endocrinology and Infertility (6th ). Lippincott Willimas Wilkins. பக். 1057. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-683-30379-1. 
 4. 4.0 4.1 4.2 Buyalos RP, Agarwal SK (October 2000). "Endometriosis-associated infertility". Current Opinion in Obstetrics & Gynecology 12 (5): 377–81. doi:10.1097/00001703-200010000-00006. பன்னாட்டுத் தர தொடர் எண்:1040-872X. பப்மெட்:11111879. http://meta.wkhealth.com/pt/pt-core/template-journal/lwwgateway/media/landingpage.htm?issn=1040-872X&volume=12&issue=5&spage=377. 
 5. பாசோவர் & ஹென்லே; "அவுட்லெட் கான்ஸ்டிபேஷன் சிண்ட்ரோம் காஸ்ட் பை எலாங்கேஷன் ஆஃப் த ரெக்டோசிக்மாய்டு அஸ் அ ஃப்ரிக்வெண்ட் எட்டியாலஜி ஃபார் பெல்வோ-அப்டாமினல் பெயின் அண்ட் இன்டெஸ்டினல் ட்ரபில்ஸ் இன் வுமென் வித் எண்டோமெட்ரியாசிஸ்";கைனகாலஜிக் சர்ஜரி, தொகுதி 6, எண் 3 / செப்டம்பர், 2009; DOI:10.1007/s10397-009-0474-6
 6. 6.0 6.1 6.2 தர்மெஷ் கபூர் அன்ட் வில்லி டவிலா, 'எண்டோமெட்ரியாசிஸ்', இமெடிசின் (2005).
 7. "Endometriosis - Hysterectomy". Umm.edu. 2009-08-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. Bulun SE, Zeitoun K, Sasano H, Simpson ER (1999). "Aromatase in aging women". Seminars in Reproductive Endocrinology 17 (4): 349–58. பன்னாட்டுத் தர தொடர் எண்:0734-8630. பப்மெட்:10851574. 
 9. Batt RE, Mitwally MF (December 2003). "Endometriosis from thelarche to midteens: pathogenesis and prognosis, prevention and pedagogy". Journal of Pediatric and Adolescent Gynecology 16 (6): 337–47. doi:10.1016/j.jpag.2003.09.008. பன்னாட்டுத் தர தொடர் எண்:1083-3188. பப்மெட்:14642954. 
 10. Marsh EE, Laufer MR (March 2005). "Endometriosis in premenarcheal girls who do not have an associated obstructive anomaly". Fertility and Sterility 83 (3): 758–60. doi:10.1016/j.fertnstert.2004.08.025. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:15749511. 
 11. "Endometriosis cancer risk". medicalnewstoday.com. 5 July 2003. 2006-05-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 12. Roberts, Michelle (3 July 2007). "Endometriosis 'ups cancer risk'". BBC News. BBC / news.bbc.co.uk. 2007-07-03 அன்று பார்க்கப்பட்டது.
 13. Audebert A (April 2005). "La femme endométriosique est-elle différente ? [Women with endometriosis: are they different from others?]" (in French). Gynécologie, Obstétrique & Fertilité 33 (4): 239–46. doi:10.1016/j.gyobfe.2005.03.010. பன்னாட்டுத் தர தொடர் எண்:1297-9589. பப்மெட்:15894210. 
 14. Sinaii N, Cleary SD, Ballweg ML, Nieman LK, Stratton P (October 2002). "High rates of autoimmune and endocrine disorders, fibromyalgia, chronic fatigue syndrome and atopic diseases among women with endometriosis: a survey analysis" (Free full text). Human Reproduction 17 (10): 2715–24. doi:10.1093/humrep/17.10.2715. பன்னாட்டுத் தர தொடர் எண்:0268-1161. பப்மெட்:12351553. http://humrep.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=12351553. 
 15. Nisolle M, Paindaveine B, Bourdon A, Berlière M, Casanas-Roux F, Donnez J (June 1990). "Histologic study of peritoneal endometriosis in infertile women". Fertility and Sterility 53 (6): 984–8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:2351237. 
 16. Shawn Daly, MD, Consulting Staff, Catalina Radiology, Tucson, Arizona (2004). "Endometrioma/Endometriosis". WebMD. 2006-12-19 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |month= ignored (|date= suggested) (உதவி)CS1 maint: multiple names: authors list (link)
 17. வர்ரென் வொல்கெர், OB/GYN MD எண்டோமெட்ரியாசிஸ் டயக்னொஸிஸ் அன்ட் க்யூர் பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம்
 18. American Society For Reproductive M, (May 1997). "Revised American Society for Reproductive Medicine classification of endometriosis: 1996". Fertility and Sterility 67 (5): 817–21. doi:10.1016/S0015-0282(97)81391-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:9130884. 
 19. Amaral VF, Ferriani RA, Sá MF, et al. (July 2006). "Positive correlation between serum and peritoneal fluid CA-125 levels in women with pelvic endometriosis". São Paulo Medical Journal 124 (4): 223–7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1516-3180. பப்மெட்:17086305. http://www.scielo.br/scielo.php?script=sci_arttext&pid=S1516-31802006000400010&lng=en&nrm=iso&tlng=en. 
 20. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 21. Redwine DB (October 2002). "Was Sampson wrong?". Fertility and Sterility 78 (4): 686–93. doi:10.1016/S0015-0282(02)03329-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:12372441. 
 22. Signorile PG, Baldi F, Bussani R, D'Armiento M, De Falco M, Baldi A (April 2009). "Ectopic endometrium in human foetuses is a common event and sustains the theory of müllerianosis in the pathogenesis of endometriosis, a disease that predisposes to cancer" (Free full text). Journal of Experimental & Clinical Cancer Research 28: 49. doi:10.1186/1756-9966-28-49. பன்னாட்டுத் தர தொடர் எண்:0392-9078. பப்மெட்:19358700. பப்மெட் சென்ட்ரல்:2671494. http://www.jeccr.com/content/28//49. 
 23. Matsuura K, Ohtake H, Katabuchi H, Okamura H (1999). "Coelomic metaplasia theory of endometriosis: evidence from in vivo studies and an in vitro experimental model". Gynecologic and Obstetric Investigation 47 Suppl 1: 18–20; discussion 20–2. doi:10.1159/000052855. பன்னாட்டுத் தர தொடர் எண்:0378-7346. பப்மெட்:10087424. 
 24. Treloar SA, Wicks J, Nyholt DR, et al. (September 2005). "Genomewide linkage study in 1,176 affected sister pair families identifies a significant susceptibility locus for endometriosis on chromosome 10q26". American Journal of Human Genetics 77 (3): 365–76. doi:10.1086/432960. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9297. பப்மெட்:16080113. 
 25. Kashima K, Ishimaru T, Okamura H, et al. (January 2004). "Familial risk among Japanese patients with endometriosis". International Journal of Gynaecology and Obstetrics 84 (1): 61–4. doi:10.1016/S0020-7292(03)00340-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-7292. பப்மெட்:14698831. 
 26. Capellino S, Montagna P, Villaggio B, et al. (June 2006). "Role of estrogens in inflammatory response: expression of estrogen receptors in peritoneal fluid macrophages from endometriosis". Annals of the New York Academy of Sciences 1069: 263–7. doi:10.1196/annals.1351.024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0077-8923. பப்மெட்:16855153. 
 27. "Evidence Indicates Endometriosis Could be Linked to Environment". ksl.com. 2007-11-26. 2009-08-19 அன்று பார்க்கப்பட்டது.
 28. Harada T, Momoeda M, Taketani Y, Hoshiai H, Terakawa N (November 2008). "Low-dose oral contraceptive pill for dysmenorrhea associated with endometriosis: a placebo-controlled, double-blind, randomized trial". Fertility and Sterility 90 (5): 1583–8. doi:10.1016/j.fertnstert.2007.08.051. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:18164001. 
 29. ஹவ் லுப்ரொன் டெபொட் தெரப்பி இஸ் யூஸ்டு இன் ட்ரீட்டிங் என்டொமெட்ரியாசிஸ்
 30. Attar E, Bulun SE (May 2006). "Aromatase inhibitors: the next generation of therapeutics for endometriosis?". Fertility and Sterility 85 (5): 1307–18. doi:10.1016/j.fertnstert.2005.09.064. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:16647373. 
 31. Namnoum AB, Hickman TN, Goodman SB, Gehlbach DL, Rock JA (November 1995). "Incidence of symptom recurrence after hysterectomy for endometriosis". Fertility and Sterility 64 (5): 898–902. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:7589631. 
 32. Kaiser A, Kopf A, Gericke C, Bartley J, Mechsner S. (16 January 2009). "The influence of peritoneal endometriotic lesions on the generation of endometriosis-related pain and pain reduction after surgical excision.". Arch Gynecol Obstet. 280 (3): 369–73. doi:10.1007/s00404-008-0921-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0932-0067. பப்மெட்:19148660. 
 33. 33.0 33.1 Vercellini P, Crosignani PG, Abbiati A, Somigliana E, Viganò P, Fedele L (March 2009). "The effect of surgery for symptomatic endometriosis: the other side of the story". Human Reproduction Update 15 (2): 177–88. doi:10.1093/humupd/dmn062. பன்னாட்டுத் தர தொடர் எண்:1355-4786. பப்மெட்:19136455. 
 34. Marcoux S, Maheux R, Bérubé S (July 1997). "Laparoscopic surgery in infertile women with minimal or mild endometriosis. Canadian Collaborative Group on Endometriosis". The New England Journal of Medicine 337 (4): 217–22. doi:10.1056/NEJM199707243370401. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. பப்மெட்:9227926. 
 35. "Pain, Infertility, Hormone Problems? :: Health and Disease :: Women's Health Issues :: endometriosis". Alive.com. 2010-10-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 36. Netsu S, Konno R, Odagiri K, Soma M, Fujiwara H, Suzuki M (October 2008). "Oral eicosapentaenoic acid supplementation as possible therapy for endometriosis". Fertility and Sterility 90 (4 Suppl): 1496–502. doi:10.1016/j.fertnstert.2007.08.014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:18054352. 
 37. Chandrareddy A, Muneyyirci-Delale O, McFarlane SI, Murad OM (May 2008). "Adverse effects of phytoestrogens on reproductive health: a report of three cases". Complementary Therapies in Clinical Practice 14 (2): 132–5. doi:10.1016/j.ctcp.2008.01.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-3881. பப்மெட்:18396257. 
 38. Wurn, L; Wurn, B; Kingiii, C; Roscow, A; Scharf, E; Shuster, J (2006). "P-343Treating endometriosis pain with a manual pelvic physical therapy". Fertility and Sterility 86: S262. doi:10.1016/j.fertnstert.2006.07.699. 
 39. Sanaz Memarzadeh, MD, Kenneth N. Muse, Jr., MD, & Michael D. Fox, MD (2006). "Endometriosis". Differential Diagnosis and Treatment of endometriosis. Armenian Health Network, Health.am. 2006-12-19 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |month= ignored (|date= suggested) (உதவி)CS1 maint: multiple names: authors list (link)
 40. Martin JD, Hauck AE (July 1985). "Endometriosis in the male". The American Surgeon 51 (7): 426–30. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-1348. பப்மெட்:4014886. https://archive.org/details/sim_american-surgeon_1985-07_51_7/page/426. 

புற இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Diseases of the pelvis, genitals and breasts