உள்ளடக்கத்துக்குச் செல்

இடுப்பு அழற்சி நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடுப்பு அழற்சி நோய்
ஒத்தசொற்கள்இடுப்பு அழற்சிக் கோளாறு
இடுப்பு அழற்சி நோய்த் தொற்றுக் களங்களைக் காட்டும் ஓவியம்
சிறப்புமகப்பேறியல்
அறிகுறிகள்அடி வயிற்று வலி, அல்குல் பாய்ம வெளியேற்றம், காய்ச்சல், சிறுநீர்க் கழிப்பில் எரிச்சல், பாலுறவில் வலி, ஒழுங்கிலா மாத விடாய்[1]
சிக்கல்கள்கருவளமின்மை, கருப்பை வெளியே கருவுறல், நாட்பாட்டு இடுப்பு வலி, தொற்றுவழிப் புற்று[2][3][4]
காரணங்கள்அல்குல், கருப்பைக் கழுத்து குச்சுயிரிப் பரவல்[5]
சூழிடர் காரணிகள்வெட்டை நோய், கிளாமிடியா தொற்று[2]
நோயறிதல்அறிகுறிகள் சார்ந்து, புறவொலி அலகீடு, வயிற்றக நோக்கிவழி அறுவை[2]
தடுப்புபாலுறவு தவிர்த்தல், பாலுறவாலரைக் குறைத்தல், ஆணுறை பயன்படுத்தல்s[6]
சிகிச்சைநுண்ணுயிர்க்கொல்லிகள்[7]
நிகழும் வீதம்ஆண்டுக்கு 1.5% இளம்பெண்களை தாக்குகிறது[8]


இடுப்பு அழற்சி நோய் (PID) பெண் இனப்பெருக்க மண்டலத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள கருப்பை, பாலாப்பியன் குழாய், சினைப்பை மற்றும் இடுப்பெலும்பின் உட்பகுதி ஆகியவற்றில் ஏற்படும் ஓர் நோய்த் தொற்று ஆகும்.[2][5] பெரும்பாலும் இதற்கான அறிகுறிகள் காணப்படுவதில்லை.[1]

அடிவயிறு வலித்தல், பிறப்புருப்பில் திரவக்கசிவு, காய்ச்சல், எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல், உடலுறவின் போது வலி அல்லது சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். [1] இதற்குச் சிகிச்சை எடுக்காமலிருந்தால் அது நீண்டகால மலட்டுத்தன்மை, வேற்றிடச்சூல், புற்றுநோய் ஆகிய சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தும் .[2][3][4]

பிறப்புறுப்பு மற்றும் கருப்பைவாய்ப் பகுதியிலிருந்து பரவும் ஒரு வித பாக்டீரியாவினால் இந்நோய் ஏற்படுகிறது.[5] 75 முதல் 90 விழுக்காடு நபர்களுக்கு ’நீசெரியா கோணோறியா’ அல்லது கிளாமடியா ட்ராக்கோமாட்டிஸ் என்ற பாக்டீரியா காணப்படுகிறது.[2] பெரும்பாலும் பல்வேறுபட்ட பல பாக்டீரியாக்கள் இதில் பங்குகொள்கின்றன.[2] முறையான சிகிச்சை மேற்கொள்ளாத கொணோறியாவால் பாதிக்கப்ப்ட்ட 10 விழுக்காடு நபர்களும் கிளமிடியா பாதித்த 40 விழுக்காடு நபர்களுக்கும் அந்நோய்கள் இடுப்பு அழற்சி நோயாக வளர்ச்சியடையக் கூடும்.[2][9]

பாலுறவால் பரவும் நோய்களுக்கான காரணிகள் போலவே பலருடன் பாலியல் உறவுகொள்ளுதல், போதை மருந்து உட்கொள்ளுதல், ஆகியவையே இதற்கும் காரணிகளாக அமைகின்றன.[2] பிறப்புறுப்பில் நீர்ப்பாய்ச்சுதல் கூட சில நேரங்களில் இதன் ஆபத்தை அதிகரிக்கிறது.[2] இந்த அறிகுறிகளை அடிப்படையாகக்கொண்டே இந்நோய்க் கண்டறியப்படுகிறது.[2] கர்ப்பமடையும் வயதுடைய அணைத்து பெண்களுக்கும் அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டால் இந்நோய்க்கான பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.[2] லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையின் போது பாலோப்பியன் குழாயின் உட்பகுதியில் சீழ் காணப்படுவது உறுதியாக இந்நோய் பாதித்திருப்பதைக் கண்டறியலாம்.[2] மீயொலிச் சோதனையும் இதனைக் கண்டறியும் முறைகளுள் பயன் தரத்தக்கதாகும்.[2]

உடலுறவில் ஈடுபடாதிருத்தல் அல்லது சிலருடன் மட்டுமே உறவுகொள்ளுதல், ஆணுறை பயன்படுத்துதல் ஆகியவை இந்நோய் வராமல் தடுக்கும் சில முயற்சிகளாகும்..[6] கிளமிடியா தொற்றுக்கான சிகிச்சையெடுப்பது இடுப்பு அழற்சி நோயைக் குறைக்கும் என பெண்களுக்கு விளக்கிக்காட்டலாம்.[10] இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டால் பொதுவாக சிகிச்சை மற்றும் ஆலோசனை பரிந்துரைக்கப்படுகிறது.[2] மேலும் ஒரு பெண்ணின் பாலியல் இணையருக்கும் இச்சிகிச்சை அவசியமாகிறது.[10] லேசான அல்லது மிதமான அறிகுறிகள் கண்டறியப்படின் நோய்க்கொல்லியான செஃப்ரியாக்ஸோன் உடன் டாக்சிசைக்ளின் என்ற மருந்துகளை இரண்டு வாரத்திற்கு ஊசிமூலம் போட்டுக்கொள்ள வேண்டும். இயன்றால் அதனுடன் மெட்ரோனைடசோல் மருந்தையும் வாய்வழியாக உட்கொள்ளப் பரிந்துரை செய்யப்படுகிறது.[7] இரண்டு வாரத்திற்கும் மேல் சிகிச்சை எடுத்தும் இருவருக்கும் பலனளிக்கவில்லையெனில் நரம்பு வழிச் செலுத்தப்படும் நோய்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.[7]

2008 இல் உலக அளவில் 106 மில்லியன் நபர்கள் கிளமிடியாவாலும் 106 மில்லியன் நபர்களுக்கு கொணோறியாவும் ஏற்பட்டது.[9] ஆயினும் இடுப்பு அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைத் தெளிவாகத் தெரியவில்லை.[8] ஆண்டுக்கு 1.5 விழுக்காடு இளம்பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறாது.[8] ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு மில்லியன் பெண்கள் இடுப்பு அழற்சி நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.[11] 1970 களில் கருத்தரித்தலை தடை செய்வதற்காகப் உட்பொருத்தப்பட்ட கருத்தடைச் சாதனமான டல்கான் கருவியால் இடுப்பு அழற்சி நோயினால் பாதிக்கப்ப்ட்டோரின் விகிதம் அதிகரித்திருந்தது.[2] தற்பொழுது இக்கருவி பொருத்தப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு இதுபோன்ற பிரச்சனைகள் நிகழ்வதில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Pelvic Inflammatory Disease (PID) Clinical Manifestations and Sequelae". cdc.gov. October 2014. Archived from the original on February 22, 2015. பார்க்கப்பட்ட நாள் February 21, 2015.
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 Mitchell, C; Prabhu, M (December 2013). "Pelvic inflammatory disease: current concepts in pathogenesis, diagnosis and treatment.". Infectious disease clinics of North America 27 (4): 793–809. doi:10.1016/j.idc.2013.08.004. பப்மெட்:24275271. 
 3. 3.0 3.1 Chang, A. H.; Parsonnet, J. (2010). "Role of Bacteria in Oncogenesis". Clinical Microbiology Reviews 23 (4): 837–857. doi:10.1128/CMR.00012-10. பன்னாட்டுத் தர தொடர் எண்:0893-8512. பப்மெட்:20930075. 
 4. 4.0 4.1 Chan, Philip J.; Seraj, Ibrahim M.; Kalugdan, Theresa H.; King, Alan (1996). "Prevalence of Mycoplasma Conserved DNA in Malignant Ovarian Cancer Detected Using Sensitive PCR–ELISA". Gynecologic Oncology 63 (2): 258–260. doi:10.1006/gyno.1996.0316. பன்னாட்டுத் தர தொடர் எண்:0090-8258. பப்மெட்:8910637. 
 5. 5.0 5.1 5.2 "Pelvic inflammatory disease". The New England Journal of Medicine 372 (21): 2039–48. 2015. doi:10.1056/NEJMra1411426. பப்மெட்:25992748. 
 6. 6.0 6.1 "Pelvic Inflammatory Disease (PID) Patient Counseling and Education". Centers for Disease Control. October 2014. Archived from the original on February 22, 2015. பார்க்கப்பட்ட நாள் February 21, 2015.
 7. 7.0 7.1 7.2 "2010 STD Treatment Guidelines Pelvic Inflammatory Disease". Centers for Disease Control. August 15, 2014. Archived from the original on February 22, 2015. பார்க்கப்பட்ட நாள் February 22, 2015.
 8. 8.0 8.1 8.2 Eschenbach, D (2008). "Acute Pelvic Inflammatory Disease". Glob. libr. women's med.. doi:10.3843/GLOWM.10029. பன்னாட்டுத் தர தொடர் எண்:1756-2228. 
 9. 9.0 9.1 World Health Organization (2012). "Global incidence and prevalence of selected curable sexually transmitted infections - 2008" (PDF). who.int. pp. 2, 19. Archived from the original (PDF) on March 19, 2015. பார்க்கப்பட்ட நாள் February 22, 2015.
 10. 10.0 10.1 "Pelvic Inflammatory Disease (PID) Partner Management and Public Health Measures". Centers for Disease Control. October 2014. Archived from the original on February 22, 2015. பார்க்கப்பட்ட நாள் February 21, 2015.
 11. "Self-Study STD Modules for Clinicians — Pelvic Inflammatory Disease (PID) Next Centers for Disease Control and Prevention Your Online Source for Credible Health Information CDC Home Footer Separator Rectangle Epidemiology". Centers for Disease Control. October 2014. Archived from the original on February 22, 2015. பார்க்கப்பட்ட நாள் February 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுப்பு_அழற்சி_நோய்&oldid=3586162" இலிருந்து மீள்விக்கப்பட்டது