வயிற்று வலி
எந்தப் பகுதியில் வலியுள்ளது என்பதைக் கொண்டு வயிற்று வலி வகைப்படுத்தபடுகிறது. | |
ஐ.சி.டி.-10 | R10. |
ஐ.சி.டி.-9 | 789.0 |
வயிற்று வலி (Abdominal pain அல்லது stomach ache) தற்காலிக நோய்கள் அல்லது கடுமையான நோய்களுடைய அறிகுறியாக இருக்கலாம். பல நோய்கள் இந்த அறிகுறியைக் கொண்டிருப்பதால் எந்தக் காரணத்தால் வயிற்றுவலி உண்டானது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானதாகும். இது மிகவும் பொதுவான நோயாகும். பெரும்பாலான நேரங்களில் இது அபாயமில்லாததும் தானே சரியாகிவிடக் கூடியதுமானது. இருப்பினும் சில கடுமையான நோய்களுக்கு இது அறிகுறியாக அமையும்போது உடனடி மருத்துவம் தேவைப்படும்.