பேச்சு:வேற்றிடச்சூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
WWWW2018 test 2.svg இந்தக் கட்டுரை பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 போட்டிக்காக உருவாக்க/விரிவாக்கப்பட்டது.
DNA-structure-and-bases.png வேற்றிடச்சூல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு[தொகு]

Ectopic pregnancy/gestation என்பதற்கு வெற்றிடச்சூல் என்று பொருள் தந்தாலும் சரியாகத் தெரியவில்லை. Ectopic என்பதற்கு அங்கு தந்துள்ள இடம் மாறிய அல்லது வழக்கமான இடத்துக்கு வெளியே என்பது பொருள் சரியாகத் தோன்றுகிறது. அதை ஒட்டிய தலைப்பை இடலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 01:59, 15 செப்டெம்பர் 2010 (UTC)

புறச்சூல் எனலாமா? -- சுந்தர் \பேச்சு 02:44, 15 செப்டெம்பர் 2010 (UTC)
வெற்றிடம் என்பது vacuum என்று பொருள்படும்.எலவே சுந்தர் கூறியதற்கிணங்கவும் கொடுத்த தலைப்பிற்கு அருகாமையிலும் வேறிடச்சூல் எனலாமா ?--மணியன் 02:46, 15 செப்டெம்பர் 2010 (UTC)
எண்ணிப் பார்த்தால் வேறிடச்சூல் நன்றாக உள்ளது, மணியன். மற்றவர்கள் கருத்தையும் அறியலாம். -- சுந்தர் \பேச்சு 03:17, 15 செப்டெம்பர் 2010 (UTC)
நன்றி சுந்தர், மணியன். எனக்கும் 'வெற்றிடச்சூல்' என்ற சொல் பொருத்தமாகத் தோன்றவில்லை. தமிழ் அகரமுதலியில் இருந்ததனால் அதையே போட்டேன். இருந்தாலும், பேச்சுப் பக்கத்தில் இதுபற்றி எழுத வேண்டும் என நினைத்து மறந்து போய் விட்டேன். நீங்கள் ஆரம்பித்ததற்கு நன்றி. மணீயன் கூறிய 'வேறிடச்சூல்' என்பது மிகவும் பொருத்தமான சொல்லாகவே தெரிகிறது. அப்படியே மாற்றி விடட்டுமா?--கலை 10:46, 15 செப்டெம்பர் 2010 (UTC)
வேறிடச்சூல் மிகவும் நன்றாக உள்ளது. வேறு சொல் வேண்டு எனில், பிறழ்சூல் என்பதனைக் கருதலாம் (ஆனால் ஒலிக்க இடராக இருக்குமோ என அஞ்சுகிறேன்). வெற்றிடம் என்னும் சொல் அங்கு பொருந்தாது. சுந்தர் சொன்ன புறச்சூல் என்னும் சொல்லும் சரியாகவே எனக்குத் தோன்றுகின்றது (சற்று சுருக்கமாகவும் உள்ளது). --செல்வா 17:21, 15 செப்டெம்பர் 2010 (UTC)
நன்றி செல்வா. வேறிடச்சூல் என்ற சொல் பொருத்தமானதாகவும், இலகுவானதாகவும், ஏற்கனவே இங்கும், விக்சனரியிலும் சொல்லப்பட்டிருந்த சொல்லுக்கு அண்மையாகவும் இருப்பதனால் அப்படியே மாற்றியுள்ளேன்.--கலை 19:25, 15 செப்டெம்பர் 2010 (UTC)
நன்று. நல்ல தேர்வு!--செல்வா 19:40, 15 செப்டெம்பர் 2010 (UTC)

வேறிடச்சூல் அல்ல, வேற்றிடச்சூல்[தொகு]

கலை அவர்கள் எனக்கும் 'வெற்றிடச்சூல்' என்ற சொல் பொருத்தமாகத் தோன்றவில்லை. தமிழ் அகரமுதலியில் இருந்ததனால் அதையே போட்டேன் என்று கூறியது என் சிந்தனையைக் கிளறியது. அதற்கிடையில் சுந்தர், மணியன், செல்வா பொருத்தமான சொற்களைப் பரிந்துரைத்தார்கள். எனக்குத் தோன்றுவது என்னவென்றால், முதலில் வெற்றிடச்சூல் என்று தமிழ் அகரமுதலியில் தரப்பட்ட சொல் வேற்றிடச்சூல் என்றிருந்திருக்க வேண்டும். அச்சுப் பிழை காரணமாக நெடில் குறிலாகிவிட்டது, அவ்வளவுதான். எனவே, வேற்றிடச்சூல் என்று சொல்வதே பொருத்தம் என்பது என் கருத்து.

வேறு+இடம் = வேற்றிடம் (மாறு+இருக்கை = மாற்றிருக்கை; வேறு+மை = வேற்றுமை என்பதுபோல).--பவுல்-Paul 01:41, 16 செப்டெம்பர் 2010 (UTC)

பவுல், உங்கள் கணிப்பு சரியென்றே நினைக்கிறேன். வேறு எவருக்கும் மறுப்பில்லை என்றால் இக்கட்டுரையின் தலைப்பையும் தமிழ் விக்சனரிப் பக்கத்தையும் மாற்றி விடலாம். -- சுந்தர் \பேச்சு 09:16, 16 செப்டெம்பர் 2010 (UTC)
விளக்கமாக எழுதியதற்கு நன்றி பவுல். வேற்றிடச்சூல் என மாற்றுவதில் எனக்கும் மறுப்பேதுமில்லை. வேறு எவரும் மறுக்காவிடின், நாளை பார்த்துவிட்டு அதனை மாற்றி விடுகிறேன். --கலை 20:16, 16 செப்டெம்பர் 2010 (UTC)
பக்கத்தை நகர்த்தியமைக்கு நன்றி, கலை. விக்சனரியிலும் மாற்றியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:03, 18 செப்டெம்பர் 2010 (UTC)