வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளோடு பறவைகள் காப்பகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
nature reserve
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திலுள்ள பறவை
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திலுள்ள பறவை
ஆள்கூறுகள்: 11°15′9″N 77°39′8″E / 11.25250°N 77.65222°E / 11.25250; 77.65222ஆள்கூறுகள்: 11°15′9″N 77°39′8″E / 11.25250°N 77.65222°E / 11.25250; 77.65222
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
நிறுவப்பட்டது1996
பரப்பளவு
 • மொத்தம்0.8
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அருகிலுள்ள நகரம்ஈரோடு
ஆட்சிக் குழுசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு

வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு எனும் ஊரில் 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும்.[1] இது ஈரோட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் பெருந்துறை யிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள வெள்ளோட்டில் அமைந்துள்ளது.

பறவைகள்[தொகு]

இங்குள்ள பெரிய ஏரிக்கு ஆண்டின் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவைகள் வருகின்றன. இவை தவிர, வெளிநாடுகளிலிருந்தும் 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

காட்சியகம்[தொகு]

வெள்ளோடு சரணாலயத்தில் சூரிய மறைவு
Purple swamphen at Vellode Birds Sanctuary
Spot-billed pelican at Vellode Birds Sanctuary

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]