வீராணநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீராணநல்லூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,908 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வீராணநல்லூர் (Veerananallur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கடலூர் மாவட்டதில், காட்டுமன்னார்கோயில் தாலுகாவை சேர்ந்த ஓர் கிராமமாகும். இக்கிராமமானது காட்டுமன்னார்கோயில் - திருச்சி சாலையில் வடவாற்றங்கரையின் மேற்கு பகுதியிலும், கிழக்கு பகுதியிலுமாய் அமைந்துள்ளது. வீராணநல்லூரின் தெற்கே நாட்டார்மங்கலம், மேற்கில் மடப்புரம் மற்றும் பழஞ்சநல்லூர், தெற்கில் குறுங்குடி, கண்டமங்கலம் உள்ளிட்ட ஊர்கள் அமைந்திருக்கின்றன. வீராணம் ஏரியின் பெயரில் அமைந்த இந்த ஊர் ஏரியின் அருகாமையில் அமைந்திருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.[சான்று தேவை]

ஊராட்சி மற்றும் மக்கள் தொகை[தொகு]

வீராணநல்லூர், டி.மடப்புரம் உள்ளிட்ட கிராமங்கள் காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராணநல்லூர் ஊராட்சிக்கு (பஞ்சாயத்து) உட்பட்டவை. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இக்கிராமத்தில் 484 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1908 பேர் உள்ளதாகவும் அவர்களில் 947 பேர் ஆண்கள், 961 பேர் பெண்கள். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 81% கல்வி அறிவு பெற்றவர்கள். ஆண்களில் 88.80% கல்வி அறிவு பெற்றவர்கள். பெண்களில் 75.12% கல்வியறிவு பெற்றுள்ளனர்.[சான்று தேவை]

போக்குவரத்து[தொகு]

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து 277 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். வீராணநல்லூரிலிருந்து கிழக்கு நோக்கி சிதம்பரம் 26 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அதையடுத்து சுற்றுலாப்பகுதியான பிச்சாவரம் காடுகள் காணப்படுகின்றன. வீராணநல்லூரிலிருந்து - திருச்சி செல்லும் சாலையில் மேற்கு நோக்கி 8 கிலோமீட்டர் தூரத்தில் மீன்சுருட்டியும், அங்கிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இராசேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சுரமும் அமைந்திருக்கின்றன. தெற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் அமைந்துள்ளது. வீராணநல்லூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைந்துள்ளது மற்றும் 28 கிலோ மீட்டர் தூரத்தில் வடலூரில் சத்ய ஞான சபை அமைந்துள்ளது.

பேருந்து நிலையங்கள்[தொகு]

அருகிலுள்ள மாவட்டங்கள்[தொகு]

சாலைகள் (அ) தெருக்கள்[தொகு]

 1. தெற்குசாலை (அ) மீன்சுருட்டி சாலை
 2. பாப்பாக்குடி சாலை
 3. மேலத் தெரு
 4. கீழத் தெரு
 5. தெற்குத் தெரு
 6. வெள்ளாழர் தெரு
 7. டேங்க் தெரு

வழிபாட்டுத்தலங்கள்[தொகு]

 1. வினாயகர் ஆலயம்
 2. முருகன் ஆலயம்
 3. அம்மன் ஆலயம்
 4. மாணிக்க நாட்சியம்மன் ஆலயம்
 5. கன்னிக் கோயில்
 6. கிருத்துவ ஆலயம் (TELC CHURCH)

நீர்நிலைகள்[தொகு]

வீராணநல்லூரின் கிழக்கு பகுதியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வடவாறு அமைந்திருக்கிறது. இதே போல், வீராணநல்லூரின் மேற்கு பகுதியில் நாரைக்கால் ஏரியும் தொடக்க பள்ளிக்கு பின்புறம் ஆலங்குளம் மற்றும் சிறிய குட்டை ஒன்றும் அமைந்திருக்கிறது. நாரைக்கால் ஏரியின் தொடர்ச்சியாக குடிகாடு சாலையின் வடக்கு பகுதியில் வீராணம் ஏரியின் முகத்துவாரம் ஆரம்பிக்கிறது. வீராணநல்லூர் டி.இ.எல்.சி தேவாலயத்தின் எதிரே பிள்ளையார் குளமும், மாணிக்க நாச்சியம்மன் கோயிலுக்கு எதிரே 100 அடி தூரத்தில் சுந்தரப்பன்குளமும் அமைந்துள்ளது. மாணிக்க நாச்சியம்மன் கோயிலுக்கு தெற்கே கோயில் குட்டை ஒன்று உள்ளது.

பாசன வாய்க்கால்கள்[தொகு]

 • பெரியவாய்க்கால்,
 • வடவாற்று வாய்க்கால்,
 • நாரைக்கால் ஏரி வடிகால்,
 • வெட்டுவாய்க்கால்,
 • வடிவாய்க்கால்,
 • கீழ்குமுளி பாசன வாய்க்கால்,
 • ஆளங்குளத்துக்கு நீர் வரும் வாய்க்கால்,
 • பிள்ளையார்குளத்துக்கு நீர் வரும் வாய்க்கால்

பாசன வாய்க்கால் உள்ளிட்டவாய்க்கால்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டன.

அருகிலுள்ள கல்வி நிலையங்கள்[தொகு]

அஞ்சலகங்கள்[தொகு]

மருத்துவமனைகள்[தொகு]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

இக்கிராமத்தின் அருகே 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய மனித உரிமைக் கட்சியின் தலைவர் எல்.இளையபெருமாள் வசித்துவந்தார். அவருடைய மற்றும் அவருடைய மனைவியின் நினைவிடம் அவருடைய இல்லத்தின் பின்புறம் உள்ளது.


இக்கிராமத்தைச் சேர்ந்த எஸ். விமலா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீராணநல்லூர்&oldid=3258210" இருந்து மீள்விக்கப்பட்டது