வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
காப்பகம்
[தொகு]1
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/1
- திருமாலின் அவதாரங்கள் என்று அறியப்பெறும் தசாவதரங்களையும் சேர்த்து இருபத்தியைந்து அவதாரங்களை குறிப்பிடுகிறது பாகவத புராணம்.
- பஞ்சாமிர்தம் என்பது தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களின் கலவையால் செய்யப்படுவதால் ஐந்தமுது என்றும் அழைக்கப்பெறுகிறது.
- ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற 60,000 அரம்பையர்கள் (அப்சரஸ்கள்) பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள்.
2
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/2
- உச்சைச்சிரவம் எனும் ஏழுதலைகளையும், பறக்கும் திறனும் கொண்ட வெள்ளைக் குதிரையானது பாற்கடல் கடையும் பொழுது தோன்றியதாகும்.
- அகலிகை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி என்ற இவர்கள் ஐவரும் புராணகாலத்தில் வாழ்ந்த சிறந்த இல்லறவழிகாட்டிகளாக முன்னிருத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு பஞ்சகன்னிகைகள் என்று பெயர்
- சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமான தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய இந்த ஆறு மாதங்களும் உத்தராயணம் எனப்படுகிறது.
வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியு மா/வடிவமைப்பு/footer
3
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/3
- கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் தேவலோக மரங்கள் என்று அறியப்படுகின்றன. இவை பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவையாகும்.
- கோயில்களில் கருவறைப் பகுதியிலிருந்து வெளியேறும் திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட பகுதி பிரநாளம் எனப்படுகிறது.
- சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தினை வைத்து திதி குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன.
4
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/4
- கரும்பு வில்லும், மலர் அம்பும் காம தேவனின் ஆயுதமாகும்.
- அர்சுனனுக்கும், உலுப்பிக்கும் பிறந்த அரவானை குருச்சேத்திர போருக்கு முன் களப்பலி கொடுத்தார்கள்.
- கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பன நான்கும் இணைந்தது சதுர்யுகம் எனப்படுகிறது. ஒரு சதுர்யுகம் என்பது 21000 மனித வருடங்களாகும்.
5
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/5
- பரதநாட்டிய கலையில் உள்ள நூற்றியெட்டு கரணங்களை சிவபெருமான் ஆடியமை நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன.
- 64 பாஷாணத்தில் நீலி என்ற பாஷாணம் மற்ற 63 பாஷணத்தின் விஷத்தினையும் முறிக்க வல்லதாகும்.
- திருமாலின் பத்து அவதாரத்தில் புத்தரை வணங்கும் வழக்கமும் வட இந்தியாவில் உள்ளது.
6
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/6
- அத்தி மரத்தில் இறைவனின் உருவம் செய்ய சைவ, வைணவ ஆகமங்கள் அனுமதிதருகின்றன. உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.
- கௌசிகர், காசிபர், பரத்வாஸர், கௌதமர், அகத்தியர்,அத்ரி,பிருகு ஆகிய ஏழ்வரும் சப்த ரிசிகள் என்று அழைக்கப்பெறுகிறார்கள்.
- இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
7
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/7
- பிரமம், தைவம், ஆருசம், பிராசாபத்தியம், ஆகரம், காந்தருவம், இராக்கதம், பைசாசம் என்பவை இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் எட்டுவகையான திருமணங்களாகும்.
- நளகூபன், மணிக்ரீவன் ஆகிய இருவரும் குபேரனுக்கும் சித்திரலேகைக்கும் பிறந்த இரட்டை கந்தர்வர்களாவர்.
- தருமம் என்பது இந்து சமயம், புத்தம், சமணம் போன்ற சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறியாகும்
8
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/8
- மாறிச்சி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிறது, வசிஷ்டர்,தக்க்ஷன், பிருகு, நாரதர் என்போரை பிரம்மன் தனது படைப்பு தொழில் செய்வதற்கு படைத்தார். இவர்கள் பிரஜாபதிகள் என்று அழைக்கப்பெறுகிறார்கள்.
- உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.
- காளாமுகர் என்றவர்கள் சாக்தம் மதத்தில் ஒரு பிரிவினரான காபாலிகம் என்ற மதத்தை சேர்ந்தவர்கள்.
9
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/9
- வேதகாலத்தில் 27 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்கின்றது ”பிரகத்தேவதா” எனும் நூல்.
- கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர் மற்றும் கபிலேஷ்வர் முதலிய இடங்களில் சிவனின் உடல்பாகங்கள் சிதறியுள்ளதாக நம்பப்படுகிறது. இத்தலங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று வழங்கப்படுகிறது.
- பாலை நிலத்துக்குரிய தெய்வமாக கொற்றவை வணங்கப்படுகிறாள்.
10
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/10
- சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் நாகாபரணம் வாசுகியாகும். இந்த பாம்பே பாற்கடல் கடைய கயிறாக பயன்படுத்தப்பட்டது.
- தேவலோக நதியான கங்கையை பூமிக்கு கொண்டுவந்தவன் பகிரதன் என்பதனால் கங்கைக்கு பாகீரதி என்ற பெயருண்டு.
- பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், நெய், தயிர் என்ற ஐந்திலிருந்து தயாரிக்கப்படும் உயிரி நீர்மக்கலவை பஞ்சகவ்யம் எனப்படுகிறது.
பரிந்துரைகள்
[தொகு]<div style="float:right;margin-left:0.5em;"> [[Image:Example.jpg|100x100px|Image caption text here.]] </div> {{*mp}} {{*mp}} {{*mp}} {{வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/வடிவமைப்பு/footer}}