உள்ளடக்கத்துக்குச் செல்

சாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாணம்

சாணம் அல்லது சாணி என்பது கால்நடையான மாட்டினுடைய கழிவினைக் குறிப்பதாகும். இச்சாணம் இயற்கை உரம், இயற்கை எரிவாயு தயாரிக்க பயன்படுகிறது. இந்துத் தமிழர்களின் வழிபாடுகளுக்கு பயன்படும் திருநீறு தயாரிக்கவும், இந்துத் தமிழர்களின் இல்ல வாசல்களில் மெழுகவும் பயன்படுகிறது. இதனை கிருமிநாசினி என இந்துத் தமிழர்கள் கருதுகிறார்கள்.

இச்சாணத்தினை வயல் வெளிகளுக்கு உரமாக பயன்படுத்துகின்றனர். இது இயற்கை உர வகைச் சார்ந்தது. இந்த சாணத்தில் நைட்டிரஜனும், கால்சியமும், பாஸ்பரசும் காணப்படுகின்றன. இச்சாணத்தினை வைத்து தயாரிக்கப்படும் சாண எரிவாயுவில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகம் காணப்படுகின்றன. இச்சாண எரிவாயு மரபு சாரா எரிசக்தியாக உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்துத் தமிழர் இல்லங்களில் சாணம் இட்டு மெழுகுதல் என்ற வழக்கம் உள்ளது. இந்துகளில் திருநீறு செய்யும் முறைகளில் சாணத்திலிருந்து தயாரிப்பதும் ஒரு வகையாகும். சாணத்திலிருந்து விபூதி, பல்பொடி, கொசு விரட்டி, சாம்பிராணி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.[1] மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோயிலில் சாணத்திலிருந்து தட்டப்பட்ட வரட்டியை பொங்கல் வைக்க உபயோகம் செய்து, பின் அதன் சாம்பலை பிரசாதமாக தருகின்றார்கள்.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "மாட்டு சாணத்தில் விபூதி தயாரிக்கலாம்'- தினமலர் முதல் பக்கம் [தொடர்பிழந்த இணைப்பு]
  2. வரட்டி சாம்பலே பிரசாதம்!-தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணம்&oldid=3243472" இலிருந்து மீள்விக்கப்பட்டது