சாணம் இட்டு மெழுகுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாணம் இட்டு மெழுகுதல் என்பது தமிழரின் பழக்கவழக்கங்களின் ஒன்றாகும். அதாவது தற்கால கட்டிடப் பொருள்களின் ஒன்றான சீமெந்து அறிமுகமாகும் முன்னர், தமிழர் தங்கள் வீடுகளின் நிலப்பகுதியை சாணம் இட்டு மெழுகுதல் வழக்கையே கொண்டிருந்தனர். இப்பழக்கம் தமிழரின் பழங்காலப் பழக்கங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சிலர் வீடுகளின் நிலத்தை மட்டும் அல்லாமல் சுவர்களையும் சாணமிட்டு மெழுகும் வந்துள்ளனர். இப்பழக்கம் தற்போது பெரும்பாலும் அருகிவருகிறது என்றாலும், சில கிராமப்புரங்களில் தற்போதும் காணப்படுகிறது.

சொல்விளக்கம்[தொகு]

"சாணம்" என்றால் மாட்டின் கழிவு ஆகும். தமிழரைப் பொருத்தமட்டில் வீடுகளை மெழுகும் போது பசுவின் சாணத்தைக் கொண்டே மெழுகுவர்.

கோலம் இடல்[தொகு]

தமிழரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்றான அதிகாலையில் எழுந்து பெண்கள் வீட்டு வாசலில் கோலமிடலின் போது, சாணம் இட்டு மெழுகிவிட்டு கோலம் இடல் பழக்கமும் இருந்தது. சிலர் சாணத்தை தெளித்துவிட்டு கோலம் போடும் வழக்கைக் கொண்டவர்களும் உளர்.

சிங்களவரிடையே[தொகு]

சாணம் இட்டு வீட்டின் நிலத்தை மெழுகும் பழக்கம், தமிழரைப் போன்றே சிங்களவரிடம் இருந்தது. தற்போதும் வசதியற்ற கிராம மக்கள் தங்கள் வீடுகளை சாணம் இட்டு மெழுகுதல் காணப்படுகின்றன.