பாஷாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாஷாணங்கள் என்பவை கடுமையான தன்மை உடைய மூலகங்கள். அவை இரண்டு வகைப்படும்.

 1. சிலை செய்ய பயன்படுபவை.
 2. மருத்துவத்திற்கு பயன்படுபவை.

பஞ்ச பாஷாணங்கள்[தொகு]

 • சிலை செய்வதற்கு பயன் படும் சிறப்பான ஐந்து பாஷாணங்கள். (ரோம ரிசி மருத்துவ வாகடம்)
 1. அபிரகப் பாஷாணம்.
 2. கற் பாஷாணம்.
 3. சூதப் பாஷாணம்.
 4. துத்தப் பாஷாணம்.
 5. சீலைப் பாஷாணம்.

நவ பாஷாணங்கள்[தொகு]

போகர்[தொகு]

 • போகர் கூறும் ஒன்பது பாஷாணங்கள்.
"பாங்கான பாடாணம் ஒன்பதினும்
பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி
கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு
பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோம்மணி கடாட்சதாலே
நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" -போகர்
கலியுக மக்கள் பிழைத்திருப்பதற்காக மனோன்மணி அம்மனின் அனுக்கிரகத்தால் ஒன்பது வகையான பாஷாணங்களைக் கொண்டு பழனி முருகன் விக்கிரகம் செய்ததாகக் கூறுகிறார் போகர்.

புலிப்பாணி[தொகு]

 • போகரின் சீடர் புலிப்பாணியும் போகர் சிலை செய்ததை கூறுகிறார்.
பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான போகருட சமாதியருகே
கட்டான பாடாணவகை எட்டுடனொன்று
காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்
நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசைசோ டசமுஞ்செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்
ஆரப்பா அறிவார்க ளாருமில்லை. - புலிப்பாணி
அந்த 9 பாஷாணங்கள்
 1. கௌரிப் பாஷாணம்
 2. கெந்தகப் பாஷாணம்
 3. சீலைப் பாஷாணம்
 4. வீரப் பாஷாணம்
 5. கச்சாலப் பாஷாணம்
 6. வெள்ளைப் பாஷாணம்
 7. தொட்டிப் பாஷாணம்
 8. சூதப் பாஷாணம்
 9. சங்குப் பாஷாணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஷாணம்&oldid=1715982" இருந்து மீள்விக்கப்பட்டது